Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    எடுத்துக்காட்டு

    நான் ஒரு கனவுகண்டேன். அதில் ஒருவர் வெள்ளை நிற துணிச்சுருள் ஒன்றை என்னிடம் கொண்டுவந்து, எந்த உருவமுள்ளவர்களுக்கும், எப்படிப்பட்ட குணமுள்ளவர்களுக்கும், எப்படிப்பட்ட குழ்நிலைகளுக்கும் பொருந்தும்படியான வஸ்திரங்களாக அதை வெட்டும்படி சொன்னார். அதை வெட்டி,பிறகு வஸ்திரமாக ஆயத்தமாக்குவதற்காகத் தொங்கவிடும்படி என்னிடம் சொன்னார். ஆனால், நான் யாருக்காக அதை வெட்ட வேண்டியிருந்ததோ அவர்களில் அநேகர் அபாத்திரர்களாக இருப்பதாக உணர்ந்தேன். அந்த ஒரு துணிச்சுருளை மட்டும்தான் வெட்டவேண்டுமா என்று நான் கேட்டேன். இல்லை என்றும்,அதை வெட்டி முடிந்ததும், வேறு துணிச்சுருள்கள் எனக்குத் தரப்படுமென்றும் சொல்லப்பட்டது.TamChS 88.3

    அவ்வளவு அதிகமாக வேலைசெய்ய வேண்டுமா என்று எனக்கு அதைரியம் ஏற்பட்டது. எனவே,மற்றவர்களுக்காக துணி களை வெட்டுகிற வேலையை இருபது வருடங்களாகச் செய்துவருகிறேன் என்றும், எனது உழைப்புக்கு பாராட்டு இல்லையென்றும், என்னுடைய வேலையால் ஏதும் நன்மையுண்டானதாகவும் நான் காணவில்லையென்றும் சொன்னேன். என்னிடம் துணிச்சுருளைக் கொண்டுவந்தவரிடம் குறிப்பாக ஒரு பெண்ணைப்பற்றிச் சொன்னேன். அவளுக்கு ஒரு துணியை வெட்டும்படி அவர் சொல்லியிருந்தார். அவள் அந்தத் துணியை மதிக்கமாட்டாள் என்றும், அவளுக்கு அதைக் கொடுத்தால் துணியும் நேரமும் வீண்தான் என்றும் சொன்னேன். “அவள் ரொம்பவும் கஷ்டப்பட்டவள்; அறிவுக் கூர்மை இல்லாதவள்; நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாதவள்; சீக்கிரமே அதை அழுக்காக்கிவிடுவாள்” என்றேன். அதற்கு அந்த நபர், “துணிகளை வெட்டு. அதுதான் உன் வேலை. இழப்பு உனக்கு அல்ல, எனக்குத்தான். மனிதன் பார்க்கிற வண்ணம் தேவன் பார்ப்பதில்லை. தாம் செய்ய விரும்புகிற வேலையைத்தான் கொடுக்கிறார். இதுவோ, அதுவோ, எது வாய்க்குமென்று உனக்குத் தெரியாது. அவளைப் போன்ற ஏழை ஆத்துமாக்கள் பலர் இராஜ்யத்திற்குள் செல்வதையும், வாழ்க்கையின் சகல ஆசீர்வாதங்களையும் மேம்படுத்துவதற்கான சகல அனுகூலங்களையும் பெற்றிருப்பவர்கள் கைவிடப்படுவதையும் காணமுடியும்” என்று சொன்னார். 12T, 10, 11TamChS 88.4

    இராணுவ வீரர்கள் தங்கள் முதுகுப்பைகளை தாங்களாகவே இறக்கி, மீண்டும் முதுகில் மாட்டுவதற்கான பயிற்சி மணிக்கணக்கில் மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்டது. தங்களுடைய ஆயுதங்களை எவ்வாறு ஏற்றவேண்டும்? அவற்றை எவ்வாறு காலந்தாழ்த்தாமல் எடுக்கவேண்டும்? இவை கற்றுக்கொடுக்கப்பட்டன. எதிரியை எதிர்த்து தாக்குவதற்கு மீண்டும் மீண்டும் பயிற்சியளிக்கப்பட்டது. சகலவிதமான படைத்துறை நடவடிக்கைகளிலும் பயிற்சியளிக்கப்பட்டது. இவ்வாறு எத்தகைய அவசர நிலையையும் சமாளிப்பதற்கு மனிதர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இம்மானுவேல் பிரபுக்காக யத்தம் செய்கிறவர்கள் அந்த ஆவிக்குரிய யுத்தத்தில் வேலைசெய்வதற்காக ஊக்கத்தோடும் கடும் முயற்சியோடும் ஆயத்தம் செய்யவேண்டாவா? 2 GW, 75TamChS 89.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents