Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    9—நித்திரையிலிருந்து எழும்புவதற்கான அழைப்பு

    அழைப்பு

    செயல்படுவதற்கு அனைவரையும் அழைக்கிற சுவிசேஷச் செய்தி நம் சபைகளில் ஒலிக்கவேண்டும். திருச்சபை அங்கத்தினர்கள் தங்கள் விசுவாசத்தில் பெருகவேண்டும். அதற்கு, பரலோகத்திலிருக்கும் தங்கள் அதரிசனமான கூட்டாளிகளின் வைராக்கியம் இவர்களுக்கு வேண்டும். வற்றாத அவர்களுடைய வளங்களின் அறிவிலிருந்தும், அவர்கள் ஈடுபட்டுள்ள பணியின் மேன்மையிலிருந்தும், அவர்களுடைய தலைவரின் வல்லமையிலிருந்தும் அதைப் பெற்றுக்கொள்ளலாம். தேவன் தங்களுடைய தலைவராயிருந்து, தங்களை வழிநடத்தும்படி அவருடைய கட்டுப்பாட்டின்கீழ் தங்களை ஒப்படைத்தவர்கள், அவர் நியமித்தபடியே சகலமும் நடைபெறுவதைக் கண்டுகொள்வார்கள். உலகத்தாரின் ஜீவனுக் காக தம் ஜீவனையே கொடுத்தவரின் ஆவியால் ஊக்கமடைவார்கள்; தங்கள் இயலாமையைக்காட்டி, செயல்படாமல் நிற்கமாட்டார்கள். பரலோகத்தின் கவசத்தை அணிந்துகொண்டு, தேவனுடைய சர்வ வல்லமை தங்கள் தேவைகளை எல்லாம் சந்திக்குமென அறிந்து, தேவனுக்காக விருப்பத்தோடும் தைரியத்தோடும் போருக்குச் செல்வார்கள். 17T, 14TamChS 106.1

    நித்திரையிலிருந்து விழிப்போம்! யுத்தம் தொடங்கிவிட்டது. சத்தியத்திற்கும் பொய்க்குமிடையே நடக்கிற போர் முடியப்போகிறது. அதிபதி இம்மானுவேலின் இரத்தம்பட்ட கொடியின்கீழ் நாம் அணிவகுத்துச் சென்று, நல்ல போராட்டத்தைப் போராடுவோம்; நித்திய கனத்தைப் பெறுவோம்; சத்தியத்திற்கே வெற்றி என்பதால், நம்மேல் அன்புகூர்ந்தவரால் நாம் ஜெயத்தின்மேல் ஜெயம் பெறுவோம். தவணையாகக்கொடுக்கப்பட்ட அருமையான தருணங்கள் முடியப்போகின்றன. நாம் நம் பரலோகப் பிதாவை மகிமைப்படுத்த வேண்டும்; கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ அந்த ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கு உதவி செய்யவேண்டும்; அவற்றுக்கு ஏதுவாக, நித்திய வாழ்வுக்கான ஊழியத்தைச் செய்கிறோமா என்று உறுதி செய்யவேண்டும். 2 RH, March 13, 1888TamChS 107.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents