Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பெண் ஊழியப்பணியாளர்கள்

    சத்தியத்தை விதைக்கிற வேலையில் ஆண்களும் பெண்களும் ஈடுபடலாம்; அங்கிருந்து அது புறப்பட்டு, வெளியே கிளம்பிவரும். நெருக்கடி நேரத்தில் அவர்கள் தங்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தினால், ஆண்டவர் அவர்கள்மூலம் கிரியை செய்வார். தங்கள் கடமை குறித்த உணர்வோடு,தேவ ஆவியானவரின் செல்வாக்கின் கீழ் பிரயாசப்பட்டால், இக்காலத்திற்கு தேவையான தன்னம்பிக்கையை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். தங்களையே தியாகம் செய்கிற இந்தப் பெண்கள்மேல் தம் முகத்தின் ஒளியை இரட்சகர் பிரகாசிப்பிப்பார். ஆண்களை மிஞ்சின வல்லமையை இது அவர்களுக்குக்கொடுக்கும்.ஆண்கள் செய்ய முடியாத ஒரு வேலையை, உள்ளத்தைத் தொடுகிற ஒரு வேலையை அவர்கள் செய்யமுடியும். ஆண்கள் அணுக முடியாதவர்களின் இருதயங்களுக்கு நெருக்கமானவர்களாக இவர்கள் மாறமுடியும். அவர்கள் இந்தப்பணியைச் செய்யவேண்டியது அவசியம். பகுத்தறிவும் தாழ்மையுமுள்ள பெண்கள் தங்கள் வீடுகளில் உள்ளவர்களுக்கு சத்தியத்தை விளக்கிச்சொல்கிற ஒரு நல்ல வேலையைச் செய்யமுடியும். அவ்வாறு விளக்கிச்சொல்லப்படும் தேவ வார்த்தை புளிக்கச்செய்கிற வேலையைத் துவங்கும். அதன் செல்வாக்குமூலம் குடும்பம்முழு வதுமே மனமாற்றத்தை அடையும். 19T, pp 128,129TamChS 41.1

    தேவனுக்காக ஊழியம் செய்பவர்களிடம் மார்த்தாள்-மரியாளின் குணநலன்கள் இருக்கவேண்டும்; அதாவது, பணிவிடைசெய்யும் விருப்பமும், சத்தியத்தின் மேலுள்ள மெய்யான வாஞ்சையும் கலந்து காணப்படவேண்டும். சுயநலத்தை முற்றிலும் அகற்றவேண்டும். ஊக்கமான பெண் ஊழியர்களை தேவன் அழைக்கிறார்; விவேகமும் அன்பும் கனிவும் உள்ள ஊழியர்களாக அவர்கள் இருக்கவேண்டும். விடாமுயற்சியுள்ள பெண்களை அவர் அழைக்கிறார்; அவர்கள் சுய எண்ணங்களிலிருந்து விடுபட்டு, கிறிஸ்துவையே மையமாக வைப்பார்கள், சத்திய வார்த்தைகளைப் பேசுவார்கள்; அனுமதிக்கிற நபர்களோடு சேர்ந்து ஜெபிப்பார்கள், ஆத்துமாக்களின் மனமாற்றத்திற்காக ஊழியம் செய்வார்கள். 26T, 118TamChS 41.2

    நம் பத்திரிக்கைகளுக்கு சந்தாதாரர்களைப் பிடிப்பதற்கு சகோதரிகள் முழுவதும் பிரயாசப்படலாம். அதன்மூலம் அநேகரின் இரு தயங்களில் வெளிச்சத்தைக் கொண்டுவரலாம். 3RH, Jun 10, 1880TamChS 41.3

    சத்தியத்தின் உறுதியான ஆதாரத்தை முன்னிட்டு, சத்தியத்திற் காகத் தீர்மானம் செய்கிற ஒழுக்கத் தைரியத்தைப் பெற்ற உயர்வான பெண்கள் இருக்கிறார்கள். மனச்சாட்சியின்படி அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அவர்களிடம் சாமர்த்தியமும் அறிவும் நல்ல திறனும் காணப்படுகிறது; தங்கள் எஜமானுக்கான வெற்றிகரமான ஊழியர்களாக அவர்கள் விளங்கமுடியும். கிறிஸ்தவப் பெண்கள் அதற்காக அழைக்கப்பட்டவர்கள். 1RH, Dec 19, 1878TamChS 41.4

    நம் பத்திரிக்கைகள், துண்டுப்பிரதிகளுக்கு நம் சகோதரிகள் எழுதலாம்; அவற்றைப் பெற்ற நண்பர்களின் உள்ளான உணர்வுகளை வெளியே கொண்டு வருகிற கருத்துள்ள ஊழியர்களாக ஊழியம் செய்யலாம். உறுதியான நியதியும், உறுதியான குணமும் படைத்த பெண்கள் தேவை. நாம் உண்மையிலேயே கடைசி நாட்களில் வாழ்கிறோம்; உலகத்திற்குக் கொடுக்கவேண்டிய மேலான எச்சரிப்பின் செய்தி நம்மிடம் இருக்கிறது. இதை அவர்கள் நம்ப வேண்டும். இவர்களைத்தான் துண்டுப்பிரதி ஊழியத்திலும், ஊழியப்பணியிலும் தேவன் பயன்படுத்த முடியும். இவர்கள் துண்டுப்பிரதிகளைக் கொடுப்பதிலும், ஞானத்தோடு பத்திரிக்கை விநியோகிப்பதிலும் மேலான பணியைச் செய்யமுடியும். 2RH, Dec 19, 1878TamChS 42.1

    சபை அதிகாரிகளைத் தேர்வு செய்தல், அதிகாரி ஆகுதல் போன்றவற்றைச் செய்ய பெண்கள் முயலவேண்டுமென நான் பரிந்துரை செய்யவில்லை; மாறாக, ஊழியப்பணி, கடிதம்மூலம் சத்தியம் போதித்தல், நிகழ்காலச் சத்தியம் அடங்கிய பத்திரிக்கை களுக்கு சந்தாதாரர் சேர்த்தல் போன்றவைமூலம், அவள் மிக அதிகமான ஊழியத்தைச் செய்யமுடியும். 3RH, Dec 19, 1878TamChS 42.2

    இந்தப் பரிசுத்தமான ஊழியத்தை விருப்பமான பணியாக இன்று ஒரு பெண் செய்கிற இடத்தில் இருபது பெண்கள் செய்திருப்பார்களானால், அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு மனம்மாறியிருப்பதை நாம் கண்டிருக்கலாம். 4RH, Jan 2, 1879TamChS 42.3

    வேலை செய்கிற பெண்கள், சுயத்தை முக்கியப்படுத்தாத பெண்கள், சாந்தமும்மனத்தாழ்மையுமுள்ள பெண்கள், ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்கான வாய்ப்பு காண்கிற இடங்களிலெல்லாம் கிறிஸ்துவின் சாந்தத்தோடு பணிசெய்கிற பெண்கள்தாம் இன்றைய தேவை. 5RH, Jan 2, 1879TamChS 42.4

    நம் சகோதரிகள்மட்டும் விரும்பியிருந்தால், இன்று நூற்றுக் கணக்கானவர்கள் ஊழியத்தில் இருப்பார்கள். அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் எளிய, சுத்தமான, நீடித்து உழைக்கிற ஆடைகளை அணியவேண்டும்; அவசியமற்ற வேலைகளில் தாங்கள் செலவிட்டு வந்த நேரத்தை ஊழியப்பணிகளில் செலவிட வேண்டும். தூரத்தில் வசிக்கிற நண்பர்களுக்கு கடிதம் எழுதலாம். மிகச்சிறப்பான விதத்தில் எவ்வாறு ஊழியம் செய்யலாம் என்று நம் சகோதரிகள் ஒன்றுகூடி விவாதிக்கலாம். தேவனுக்குக் காணிக்கை செலுத்தவும், தங்கள் நண்பர்களுக்கு பத்திரிக்கையும் துண்டுப்பிரதிகளும் அனுப்புவதற்காகச் செலவிடவும் பணம் மிச்சப்படுத்தலாம். இப்போது எதுவும் செய்யாமல் இருப்பவர்கள் ஊழியம் செய்யப் புறப்படவேண்டும். நான் தேவனுடைய பிள்ளை ‘என அழைத்துக் கொள்ளும் ஒவ்வொரு சகோதரியும் தன்னுடைய செல்வாக்கிற்கு உட்பட்ட அனைவருக்கும் உதவுவது தன் கடமையென்பதை உணரவேண்டும். 1RH, Dec 12, 1878TamChS 42.5

    சிந்தித்து, புத்தியோடு செயல்படவேண்டிய கடமைகளைச் செய்யாமல் இருப்பதற்கான சாக்குப்போக்குச் சொல்வதற்கு நம் சகோதரிகள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்; ஆனால் கிறிஸ்தவ அனுபவத்தில் பூரணப்படுவதற்கு இந்தக கடமைகள் மிகவும் அவசியமானவை. அவர்கள் ஊழியக்களத்தில் ஊழியப்பணி செய்யலாம்; நம் கொள்கைகளை உள்ளபடி எடுத்துக்காட்டுகிற துண்டுப்பிரதிகளையும் புத்தகங்களையும் விநியோகிப்பதில் தனிப்பட்ட கவனம் செலுத்தலாம். 2RH, Dec 12, 1878TamChS 43.1

    சகோதரிகளே, விழிப்போடு நற்செய்தி ஊழியத்தைச் செய்வதில் சோர்ந்துபோகாதீர்கள். நீங்கள் தேவனோடு தொடர்பிலிருந்தால், நீங்கள் அனைவருமே வெற்றிகரமாக இதில் ஈடுபட முடியும். விசாரித்து, கடிதம் எழுதுவதற்கு முன்பாக, ஜெபத்தின்மூலம் தேவனிடம் உங்கள் இருதயங்களை ஒப்படையுங்கள். அப்போது தான் சுபாவக்கிளையில் ஒட்டவைத்து, தேவமகிமைக்கென கனி கொடுக்கிற சில காட்டுக்கிளைகளை நீங்கள் சேர்க்கமுடியும். இந்த ஊழியத்தில் தாழ்மையான இருதயத்தோடு பங்கெடுக்கிற அனைவருமே, ஆண்டவருடைய திராட்சத்தோட்டத்தில் எப்போதும் கற்றுக்கொள்கிற ஊழியர்களாக இருக்கிறார்கள். 3RH, Jun 10, 1880TamChS 43.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents