Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நாடகத்தின் இறுதி காட்சி

    தேவனுடைய பிரமாணத்திற்குப் பதிலாக மனிதர்களுடைய சட்டங்களைப் புகுத்துவதும், மனித அதிகாரத்தால் வேதாகம ஓய்வுநாளுக்குப் பதிலாக ஞாயிறை உயர்த்துவதும் தான் நாடகத்தின் கடைசிக் காட்சியாக இருக்கும். இந்த மாற்றுச்சட்டம் உலகம் முழுவதிலும் வந்ததும், தேவன் தம்மை வெளிப்படுத்துவார். பூமியை பயங்கரமாக நடுங்கச்செய்யும்படி மகத்துவமுள்ளவராக எழுந்தருளுவார். உலகத்தின் குடிமக்களை அவர்களுடைய அக்கிரமங்களுக் காகத்தண்டிக்கும்படி தம்முடைய இடத்திலிருந்து இறங்கிவருவார். பூமி தன்னில் இரத்தம் சிந்தினவர்களை வெளிப்படுத்தும்; கொலையுண்டவர்களை அதன்பிறகும் மூடிமறைக்காது. 27T, 141 TamChS 211.1

    ஞாயிறு சட்டத்தை இயற்றும்படி நம்முடைய தேசம் தன் நிர்வாகக் கொள்ளைகளைக் கைவிடும்போது, இந்தச் செயலில் புரொட்டஸ்டன்ட் மார்க்கமும் போப்புமார்க்கத்தோடு கைகோர்க்கும்; மீண்டும் சர்வாதிகாரப் போக்கில் மும்முரமாக இறங்குவதற்கு வெகுகாலமாக சமயம் பார்த்துவந்த கொடுங்கோலாட்சிக்கு இந்தச் செயலால் வாழ்வு கிடைக்கும். 35T, 712TamChS 211.2

    தேவ பிரமாணத்திற்கு எதிராக போப்புமார்க்க ஏற்பாட்டைக் கட்டாயப்படுத்த சட்டத்தை இயற்றுவதன்மூலம், நம் தேசம் முற்றிலும் நீதியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும். பெரும்பிரிவினைகளைத்தாண்டி ரோம வல்லமையோடு கைகோர்ப்பதற்கு புரொட்டஸ்டன்ட் மார்க்கமும், ஆவிமார்க்கத்தோடு கைகோர்ப்பதற்கு ரோமமார்க்கமும் செல்லும்போது, இந்த முப்பிரிவு ஐக்கியத்தின் செல்வாக்கால், நம்முடைய தேசமானதுதான் ஒரு புரொட்டஸ்டன்ட் குடியரசு நிர்வாகம் என்கிற தன்னுடைய அரசியலமைப்பு நியதியை நிராகரிக்கும்; மேலும், போப்புமார்க்க பொய்களும் வஞ்சகங்களும் எங்கும் பரவிச்செல்வதற்கு வழியுண்டாக்கும். சாத்தான் வல்லமையாகச் செயல்படுவதற்கும், முடிவு சமீபித்து விட்டதற்கும் காலம் வந்துவிட்டதென்பதை ஆதந்மூலம் அறிந்துகொள்ளலாம். 15T, 451TamChS 211.3

    ஆதிகாலச் சீடர்களைப்போல, வனாந்தரமும் தனிமையுமான இடங்களுக்கு புகலிடம் தேடி ஓடிச்செல்லவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படப்போகிற காலம் வெகுதொலைவில் இல்லை. ரோம இராணுவத்தால் எருசலேம் முற்றுகையிடப்படுவதே யூதேயக் கிறிஸ்தவர்கள் தப்பிச்செல்வதற்கான அடையாளமாக இருந்ததுபோல, போப்புமார்க்கம் தனது ஓய்வுநாளை கட்டாயமாக்கும்போது, அதற்கான சட்டத்தை இயற்ற தனக்கு அதிகாரம் உண்டென நம் தேசம் கருதுகிற காலக்கட்டமே நமக்கு அடையாளமாக இருக்கும். அதுவே மலைபாங்கான பகுதிகளிலுள்ள ஒதுக்குப்புறமான வீடுகளைத் தேடி,பெரும் நகரங்களைவிட்டு கிளம்புவதற்கான முன்னடையாளமாகும்; பின்னர், சிறு நகரங்களைவிட்டும் கிளம்பவேண்டியிருக்கும். 25T, 464,465TamChS 212.1