அங்கீகாரம்
கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் அவரைப்போல பிரயாசப்பட வேண்டும். பசியுள்ளோருக்கு உணவளிக்கவேண்டும்; வஸ்திரமில்லாதோருக்கு உடை தரவேண்டும்; உபத்திரவத்திலும் வேதனையிலும் இருப்போரைத் தேற்றவேண்டும். நம்பிக்கையிழந்தோருக்கு ஊழியம் செய்து, நம்பிக்கையூட்டவேண்டும். அப்போது நமக்கும் தேவன் கொடுத்த, ‘உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்’ என்கிறவாக்குறுதி நிறைவேறும். TamChS 245.1
இந்த கிறிஸ்தவ உதவிப்பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், ஆண்டவர் என்ன செய்ய விரும்பியிருப்பாரோ அதைத்தான் செய்கிறார்கள். அவரும் இவர்களுடைய பிரயாசங்களை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறு செய்யப்படுகிற ஊழியம் ஒவ்வொரு செவந்த் -டே அட்வென்டிஸ்டும் மனதார ஏற்றுக்கொண்டு, அங்கீகரிக்க வேண்டிய ஓர் ஊழியமாகும். தங்களுடைய எல்லைகளுக்குட்பட்ட இந்த வேலையைச் செய்ய மறுப்பதால், இந்தப் பாரங்களைச் சுமக்க மறுப்பதால், சபை மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கிறது. திருச்சபையானது தான் செய்திருக்க வேண்டியதின்படி இந்த வேலையைச் செய்திருந்தால், பல ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கு பலவிதங்களில் உதவியிருக்கும். TamChS 245.2
அவருடைய சகல ஈவுகளையும் மனிதர்களுக்கு ஆசீர்வாதமாக, துன்பம் நீக்க, தேவையைச் சந்திக்கப் பயன்படுத்தவேண்டும். பசியுள்ளவர்களுக்கு உணவளித்து, வஸ்திரமில்லாதோருக்கு உடைகொடுத்து, விதவைகளையும் திக்கற்றோரையும் பராமரித்து, இடுக்கணிலும் நெருக்கத்திலும் உள்ளோருக்கு ஊழியஞ்செய்ய வேண்டும். உலகம் முழுவதிலும் துயரநிலை இருக்கவேண்டுமென் பது தேவனுடைய சித்தமல்ல. யாராவது ஒருவன் வாழ்வின் சுக போகங்களை ஏராளமாகப் பெற்றிருப்பதும், மற்றவர்கள் அப்பத் திற்காக அலைந்துதிரிவதும் அவருடைய சித்தமல்ல. வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கும் அதிகமாக ஒருவனுக்கு வசதிகள் கொடுக்கப்பட்டிருப்பது, அவன் நன்மை செய்வதற்கும், மனிதர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவதற்குமே.’ ‘உங்களுக்கு உள்ள வைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘தாராளமாய்க் கொடுங்கள், உதாரகுணம் உள்ளவர்களுமாயிருங்கள்.’ ‘நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரை யும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.’ ‘அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்; நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்; நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கு; சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடு; பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடு; துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்; வஸ்திரமில்லாதவனைக் கண்டால், அவனுக்கு வஸ்திரங்கொடு; சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கு.’ “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று ஆண்டவர் சொல்கிறார். இவை அனைத்தும் தேவனுடைய கட்டளைகள். கிறிஸ்தவர்களெனச் சொல்லிக்கொள்ளும் பெருங்கூட்டத்தார் இப்பணியைச் செய்கிறார்களா? TamChS 245.3
அன்பான வார்த்தைகள், தயாளமிக்க செயல்கள், தரித்திரர் - எளியோர் வேதனைப்பட்டோர்மேல் கரிசனை போன்ற நற்கிரியைகள் நம்மில் இருப்பதை கிறிஸ்து விரும்புகிறார். அதைரியத்தோடும் துக்கத்தோடும் இருப்பவர்கள்மேல் இருதயங்களில் பரிவு உண்டாகும்போது, எளியோருக்குக் கொடுத்து உதவும்போது, வஸ்திரமற்றோருக்கு வஸ்திரம் கொடுக்கும்போது, அந்நியர் உங்களுடைய வீட்டில் உட்கார இடமளிக்கும்போது, தூதர்கள் உங்களுக்கு மிகஅருகில் வருகிறார்கள்; அதற்கேற்ற பிரதிபலனை வழங்கபரலோகம் செயல்படுகிறது. நீதியும் இரக்கமும் தயாளமும் வெளிப்படுகிற ஒவ்வொரு செயலும் பரலோகத்தில் இன்னிசையாக ஒலிக்கின்றது. இந்த இரக்கத்தின் செயல்களைச் செய்பவர்களை பிதா தம் சிங்காசனத்திலிருந்து பார்க்கிறார்; மிகவும் விலையேறப் பெற்ற தம்முடைய பொக்கிஷங்களில் ஒருவராக அவர்களைப் பார்க்கிறார். ‘என் சம்பத்தை நான் சேர்க்கும் அந்நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.’ எளியோருக்கும் உபத்திரவப்படுவோருக்கும் செய்கிற ஒவ்வொரு இரக்கத்தின் செயலும் இயேசுவுக்கே செய்யப் பட்டதுபோலக் கருதப்படுகின்றது. தரித்தரருக்கு உதவி செய்து, வேதனைப்பட்டோருக்கும் உபத்திரவப்பட்டோருக்கும் பரிவு காட்டி, திக்கற்றோரிடம் சிநேகம் பாராட்டும்போது, இயேசுவுடன் ஒரு நெருங்கிய உறவுக்குள் உங்களைக் கொண்டுவருகிறீர்கள். TamChS 246.1
எளியோரையும் உபத்திரவப்பட்டோரையும் தரித்திரரையும் அரவணைத்துக்கொள்கிற ஊழியம்தான், இக்காலத்திற்கான சத்தியத்தை நம்புகிற ஒவ்வொரு சபையும் வெகுகாலமாக செய்துவரு கிறஊழியமாகும். சரீரத் தேவைகளைச் சந்திப்பதிலும், பசியுள்ளோருக்கு உணவளிப்பதிலும், வீடுகளிலிருந்து துரத்தப்பட்ட ஏழையை நம் வீடுகளில் சேர்த்துக்கொள்வதிலும், மனித துயரநிலையின் அடித்தளத்திற்கே சென்று பார்க்க நமக்கு திறனளிக்கிற கிருபையை யும்பெலத்தையும் அனுதினமும் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்வதிலும், தங்களுக்கு தாங்களே உதவி செய்ய முடியாதவர்களுக்கு உதவி செய்வதிலும் அந்த சமாரியனிடம் காணப்பட்ட கனிவான இரக்கத்தை நாம் காட்டவேண்டும். இந்த ஊழியத்தைச் செய்யும் போது, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை வெளிப்படுத்துகிற ஒரு சாதகமான வாய்ப்பைப் பெறுகிறோம். TamChS 247.1
‘எங்களுடைய ஜெபங்களில் ஏன் உயிரில்லை? எங்களுடைய விசுவாசம் ஏன் பெலனற்றதாக, தடுமாற்றமுள்ளதாக இருக்கிறது? எங்களுடைய கிறிஸ்தவ அனுபவம் ஏன் இருண்டும் நிச்சயமற்றும் காணப்படுகிறது’ என்று அநேகர் திகைக்கிறார்கள். “சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நாங்கள் துக்கித்து நடக்கவில்லையா?” என்று கேட்கிறார்கள். இந்த நிலையை எவ்வாறு மாற்றலாம் என்பதை ஏசாயா புத்தகத்தின் ஐம்பத்தெட்டாம் அதிகாரத்தில் கிறிஸ்து காண்பித்திருக்கிறார். வசனங்கள் 6,7. இருதயத்தில் களைப்பும் சந்தேகமும் நடுக்கமும் உள்ள ஆத்துமாவுக்கு கிறிஸ்து கொடுக்கும் மருந்து இதுதான். துக்கப்பட்டு, தேவனுக்கு முன்பாக தாழ்மையாக நடக்கிறவர்கள் எழுந்து, உதவி தேவைப்படுகிற ஒருவருக்கு உதவி செய்வார்களாக. TamChS 247.2
விழுந்துபோனவர்களைத் தூக்கிவிடுவதிலும், துயரப்பட்டோரை ஆறுதல் படுத்துவதிலும்தான் பரலோகத்தின் மகிமை காணப்படுகிறது. கிறிஸ்துவாசஞ்செய்கிற இருதயங்களிலெல்லாம் இவ்வாறே அவர் வெளிப்படுவார். இது எங்கெல்லாம் செயலில் வெளிப்படுகிறதோ, அங்கே கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும். இது எங்கெல்லாம் செயல்படுகிறதோ, அங்கே பிரகாசம் நிறைந் திருக்கும். TamChS 247.3
சாறிபாத்தின் விதவை தன்னிடமிருந்த சிறிதளவு உணவையும் எலியாவோடு பகிர்ந்துகொண்டாள். அதற்குப் பதிலாக அவளுடைய ஜீவனும் அவளுடைய குமாரனின் ஜீவனும் காக்கப்பட்டன. வேதனையும் வறுமையுமான காலங்களில், தங்களைவிட அதிக தேவையில் இருப்போருக்கு இரங்கி, உதவும்யாவருக்கும் தேவன் மேன்மையான ஆசீர்வாதத்தை வாக்களித்திருக்கிறார். அவர் மாறாதவர். எலியாவின் நாட்களில் இருந்ததைவிட இன்று அவருடைய வல்லமை எவ்விதத்திலும் குறைந்துபோகவில்லை. TamChS 248.1
சுயநலமற்ற ஊழியத்தில் வெளிப்பட்ட கிறிஸ்துவின் அன்பு தான் நீதிமன்றத்தையோ பட்டயத்தையோவிட பாவியைச் சீர்திருத்துவதில் வல்லமை வாய்ந்ததாகும். சட்டத்தை மீறுகிறவர்களில் கடும் பயத்தை உண்டாக்க இவை முக்கியம்தான்; ஆனால், அன்பின் ஊழியப்பணி இதைவிட அதிகம் சாதிக்கமுடியும். கடிந்துகொள்ளும்போது கடினமாகிற இருதயமானது பெரும்பாலும் கிறிஸ்துவின் அன்பில் உருகுகிறது. TamChS 248.2