Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தடைகளை எதிர்கொள்ளுதல்

    இராணுவப் பாதுகாப்புடன் எருசலேமுக்குச் சென்ற செயலானது முக்கியமான பணிக்காக அவன் வந்திருப்பதைக் காட்டியது. அதனால் இஸ்ரவேலின் எதிரிகளின் வெறுப்பையும் பொறாமையையும் அது தூண்டியது. எருசலேமுக்கு அருகே குடியேறியிருந்த அஞ்ஞானக் கோத்திரத்தார் யூதர்மேல் நிந்தைக்குமேல் நிந்தையையும் அழிவுக்குமேல் அழிவையும் குவித்து, அவர்களுக்கு எதிராக துணிகரமான பகைச் செயல்களில் முன்பு ஈடுபட்டிருந்தார்கள். ஓரேனியனாகிய சன்பல்லாத்து, அம்மோனியனாகிய தொபியா, அரேபியனாகிய கேஷேம் போன்று அக்கோத்திரங்களைச் சேர்ந்த ஒரு சில தலைவர்கள் தாம் அந்த நாசவேலையில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள். அந்நேரமுதல் நெகேமியாவின் நடவடிக்கைகளை அவர்கள் பொறாமையான கண்களுடன் பார்த்தார்கள்; தங்களுடைய அதிகாரத்தை வைத்து அவனுடைய திட்டங்களைத் தகர்த்து, வேலையைத் தடுப்பதற்கு எல்லாவிதங்களிலும் கடுமையாக முயன்றார்கள். 2SW, March 22, 1904TamChS 227.1

    பணியாளர்களிடம் சந்தேக வார்த்தைகளைப் பேசி, வெற்றி கிடைக்காதென்கிற அவநம்பிக்கையை அவர்களில் உண்டாக்கி, அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்க முயன்றார்கள். மேலும் கட்டுகிறவர்களுடைய பிரயாசங்களை நிந்தித்தார்கள்; அந்த முயற்சி வெற்றியடைய வாய்ப்பில்லை என்றார்கள். அது தோல்வியில் முடியுமென்றார்கள். மதிலின்மேல் நின்ற கட்டுமானக்காரர்கள் முன்பைவிட அதிகத் தீவிரமான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. சற்றும் அயராத எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க தங்களை எப்போதும் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். எதிரிகளின் தூதுவர்கள் பொய் அறிக்கைகளைப் பரப்பி, அவர்களுடைய தைரியத்தை இழக்கச் செய்வதற்கு பிரயத்தனம் பண்ணினார்கள்; போலிக்காரணங்களைச் சொல்லி, நெகேமியாவை தங்களுடைய பிரயத்தனத்தில் இணைத்துக்கொள்ள சதித்திட்டம் தீட்டினார்கள்; வஞ்சக இருதயம் படைத்த யூதர்கள் இந்தத் துரோகப்போக்குக்கு உதவ ஆயத்தமாக இருந்தார்கள். எதிரிகளின் தூதுவர்கள் தங்களை நண்பர்களெனச் சொல்லிக் கொண்டு, கட்டுகிறவர்களோடு கலந்தார்கள்; திட்டத்தை மாற்றும் படி ஆலோசனை சொன்னார்கள்; குழப்பத்தையும் கலக்கத்தையும் உண்டாக்கவும், அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும் உருவாக்கவும், பணியாளர்களுடைய கவனத்தைத் திசைதிருப்புவதற்கும் பல வழிகளில் முயன்றார்கள். 1SW, April 12, 1904TamChS 227.2