Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கட்டுப்படுத்துகிற ஆவியானவர் திரும்ப எடுத்துக்கொள்ளப்படுவார்

    கட்டுப்படுத்துகிற தேவ ஆவியானவர் இப்போதே உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறார். சூறாவளியும் புயலும் பெருங்காற்றும் அக்கினியும் வெள்ளமும் சமுத்திரத்திலும் நிலத்திலும் உண்டாகிற பேரழிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து நிகழ்கின்றன. இவற்றுக்கெல்லாம் விளக்கம் சொல்ல அறிவியல் முயல்கிறது. தேவகுமாரனின் சீக்கிர வருகையை அறிவித்த வண்ணம் நம்மைச் சுற்றிலும் பெருகிவருகிற அடையாளங்கள் உண்மையான ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டுகின்றன. தேவனுடைய பிள்ளைகள் முத்திரைபோட்டுத் தீருகிற வரையிலும் எக்காளத்தை ஊதாதபடிக்கு, நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கிற காவற்காரராகிய தூதர்களை நாம் பகுத்தறிய முடியாது; ஆனால், காற்றுகளை விடும்படி தேவன் தம் தூதர்களுக்குக் கட்டளையிடும்போது, எந்த எழுதுகோலாலும் சித்தரிக்கமுடியாத அழிவின் காட்சி அரங் கேறும். 26T, 408TamChS 74.1

    மிகமுக்கியமான ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தேவ ஆவியானவர் கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் உறுதியாக உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறார். தேவகிருபையை அவமதிக்கிறவர்கள்மேல் தேவ நியாயத் தீர்ப்புகளும் வாதைகளும் ஏற்கனவே நேரிட்டு வருகின்றன. நிலத்திலும் சமுத்திரத்திலும் பேரழிவுகளும், சமுதாயத்தில் பதட்டமான நிலையும், போர் எச்சரிப்புகளும் காணப்படுகின்றன. மிகப்பெரிய அளவிலான நிகழ்வுகள் நெருங்கிவருவதை அவை முன்னறிவிக்கின்றன. தீமையின் முகமைகள் தங்கள் படைகளை ஒன்றுதிரட்டி, பெலப்பட்டு வருகின்றன. கடைசி மகா நெருக்கடி நிலைக்காக அவை ஒன்றுதிரண்டுள்ளன. மாபெரும் மாற்றங்கள் சீக்கிரமே நம் உலகத்தில் நிகழப்போகின்றன; மிகவேகமாக இறுதி நிகழ்வுகள் நிகழப்போகின்றன. 39T, 11TamChS 74.2

    மனிதரின் எவ்விதத் தைலத்தாலும் குணமாக்கமுடியாத துக்கமானது உலகில் உண்டாகப்போகிற காலம் சமீபித்திருக்கிறது. தேவ ஆவியானவர் விலக்கப்பட்டு வருகிறார். கடலிலும் நிலத்திலும் உண்டாகும் பேரழிவுகள் அடுத்தடுத்து வேகமாக நிகழ்கின்றன. மிகுந்த உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் உண்டாக்கும் பூமியதிர்ச்சி, புயல், காற்று, தீ, வெள்ளம் போன்றவற்றால் உண்டாகும் அழிவுகளையும்பற்றி எவ்வளவு அதிகமாகக் கேள்விப் படுகிறோம்! முற்றிலும் மனிதனுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட, இயற்கை விதிக்குட்படாத இயற்கைச் சக்திகளின் தாறு மாறான தாக்குதல்களினால்தான் இந்த அழிவுகள் உண்டாகின்றன என்பது தெளிவு. ஆனால், அவை அனைத்திலும் தேவ நோக்கத்தைக்கண்டுகொள்ளலாம். ஆண்களும் பெண்களும் தங்கள் ஆபத்தறிந்து விழிப்படையவேண்டும். அதற்காக அவர் கைக்கொள்ளும் வழிமுறைகளில் அவைகளும் அடங்கும். 1PK, p. 277TamChS 74.3