Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    7—ஊழியர்களும் சுயாதீன ஊழியர்களும் ஒத்துழைத்தல்

    ஐக்கியத்துடன் களச்சேவை செய்தல்

    அறுவடைக்கு ஆயத்தமாகும் களங்களுக்கு ஊழியர்களும் சுயாதீன ஊழியர்களும் செல்லவேண்டும். மறக்கப்பட்டுள்ள வேதாகமச் சத்தியங்களை எங்கெல்லாம் போதிக்கிறார்களோ அங்கே அவர்கள் அறுவடையைக் காணமுடியும். சத்தியத்தை ஏற்றுக்கொள்வோரையும் கிறிஸ்துவுக்கு ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்போரையும் கண்டுகொள்ளலாம். 1STA, Aug. 3, 1903TamChS 94.1

    சத்திய விதைகளை விதைப்பதில் பெரும்பகுதி வேலையை ஊழியர்களிடம் விட்டுவிடவேண்டும் என்பது ஆண்டவருடைய நோக்கமல்ல. ஊழிய அழைப்பைப் பெறாதவர்களை அவர்களுடைய பல்வேறு திறமைகளுக்கேற்ப எஜமானுக்காக உழைக்க ஊக்குவிக்க வேண்டும். இப்போது சோம்பலாக இருக்கும் நூற்றுக் ஆண்களும் பெண்களும் போதுமான அளவுக்குச் சேவை செய்யவேண்டும். தங்களுடைய நண்பர்கள், அயலகத்தாருடைய குடும்பங்களுக்கு சத்தியத்தை அறிவித்தாலே எஜமானுக்காக மிகப்பெரிய சேவையைச் செய்யமுடியும். 17T, 21TamChS 94.2

    அறிவிக்கவேண்டிய சத்தியத்தைதம் ஊழியர்களிடம் தேவன் ஒப்படைத்துள்ளார். திருச்சபைகள் இதைப் பெற்றுக்கொண்டு, எல்லாவிதத்திலும் பிறருக்குச் சொல்லவேண்டும். தங்களுக்குக் கிடைக்கும் முதல் ஒளிக்கதிர்களை உள்வாங்கி, மற்றவர்களுக்குப் பிரதிபலிக்க வேண்டும். 26T, 425TamChS 95.1

    ஊழியர் ஒருபாரத்தைத் தூக்கும்போது, மக்களும் அவரோடு சேர்ந்து தூக்கவேண்டும்; அப்போது அவருடைய முயற்சிகளுக்கு உதவமுடியும். அவருடைய பாரங்களை இலகுவாக்க முடியும். அப்போதுதான் வேலையால் களைத்துப்போகாமலும், அதைரியமடையாமலும் இருப்பார். புத்திசாலித்தனமாக செயல்பட்டு, தேவ பணியைப்பரப்புவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் மக்கள் செய்யாவிட்டால், திருச்சபையில் நிலையான மாற்றம் உண்டாக்குகிற தாக்கத்தை உண்டாக்க முடியாது. 3RH, Aug. 23, 1881TamChS 95.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents