Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெறுதல்

    ராஜாவிடம் நெகேமியா வேண்டிக்கொண்டதற்குச் சாதகமான பதிலை ராஜா சொன்னதால், தன் திட்டங்களின்படி செய்வதற்குத் தேவையான உதவிகளைக் கேட்கிற தைரியம் அவனுக்கு வந்தது. தன் பணிக்கு மதிப்பும் அதிகாரமும் உண்டாகும்படிக்கும், பயணம் பாதுகாப்பாக அமையவும் ராணுவ பாதுகாப்பையும் கேட்டுப்பெற்றான். ஐப்பிராத்துக்கு அப்பாலுள்ள பகுதிகளைக் கடந்துதான் யூதேயாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அங்குள்ள தேசாதிபதிகளிடம் கொடுக்க ராஜாவிடமிருந்து நிருபங்களை வாங்கினான். மேலும், நெகேமியா கட்ட நினைத்திருந்த கட்டிடங்களுக்கும் எருசலேமின் மதில்களுக்கும் தேவையான மரச்சாமான்களைக் கொடுக்கும்படிக்கு லீபனோனின் மலைப்பகுதிகளிலிருந்த ராஜாவின் வனக்காவலனுக்குக் கட்டளையிடுகிற நிருபத்தையும் பெற்றான். தான் மேற்கொண்ட பணியில் தான் வரம்புமீறிச் செயல்பட்டதாக எவ்விதத்திலும் குற்றச்சாட்டு எழாதபடிக்கு, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரமும் சலுகைகளுயும் தெளிவாக வரையறுக்கப்படுவதில் நெகேமியா கருத்துடன் இருந்தான். 2Sw, March 15, 1904TamChS 226.1

    தான் பயணம் செய்யும் பகுதியிலுள்ள தேசாதிபதிகளுக்கு ராஜாவிடமிருந்து நிருபங்களை வாங்கிச்சென்றதால், நெகேமியாவுக்கு மதிப்பான வரவேற்பும், உடனடி உதவியும் கிடைத்தன. பெர்சிய ராஜாவின் அதிகாரத்தால் பாதுகாக்கப்பட்ட அதிகாரியைச் சீண்டுவதற்கு எந்த எதிரியும் துணியவில்லை; மேலும், மாகாணத்தின் அதிகாரிகள் அவனைமதிப்போடு நடத்தினார்கள்.நெகேமியாவின் பயணம் பாதுகாப்பாக, பயன்மிக்கதாக விளங்கியது. 1SW, March 22, 1904TamChS 226.2