Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சொந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்

    கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்கள், பரிசுத்த ஆவியானவருடைய படிப்படியான வழி நடத்துதல்களை ஒன்று விடாமல் சொல்லி, தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வார்கள். அதாவது, தேவனைப்பற்றியும் அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், வேதவாக்கியங்களை ஆராய்ந்ததால் உண்டான விளைவுகள் பற்றியும், தாங்கள் ஜெபித்தது, ஆத்தும வியாகுலமடைந்தது, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது’ என்று கிறிஸ்து சொன்னது பற்றியும் சொல்வார்கள். இவற்றை இரகசியமாக வைத்திருப்பது இயற்கைக்கு முரணானது; கிறிஸ்துவின் அன்பால் நிரப்பப்பட்டவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். கிறிஸ்துவின் சத்தியத்தை எந்த அளவுக்கு அவர்கள் அறிந்துகொள்ள ஆண்டவர் அருளியுள் ளாரோ, அந்த அளவுக்கு அந்த ஆசீர்வாதத்தை பிறரும் பெற வேண்டுமென்கிற வாஞ்சை இருக்கும். தேவ கிருபையின் ஐசுவரியங்களை பிறருக்கு அறிவிக்கும்போது, கிறிஸ்துவின் கிருபை அதிகமதிகமாக அவர்களுக்கு அருளப்படும். 1COL, 125TamChS 164.3

    செயல்படும்படி ஒவ்வோர் ஆவிக்குரிய ஆற்றலையும் உசுப்பி விடுங்கள். எல்லாவற்றிற்கும் முடிவு சமீபித்து விட்டதென நீங்கள் சந்திப்போரிடம் சொல்லுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்களுடைய இருதயக்கதவுகளைத் திறப்பார். நிலையான தாக்கங்களை அவர்களுடைய உள்ளங்களில் ஏற்படுத்துவார். ஆவிக்குரிய உணர்வற்ற நிலையிலிருந்து ஆண்களையும் பெண்களையும் உசுப்பிவிட கடுமையாக முயலுங்கள். இயேசுவை நீங்கள் கண்டுகொண்ட விதத்தையும், அவருடைய சேவையில் அனுபவம் பெற்றபிறகு உங்களுக்கு எவ்வளவு ஆசீர்வாதம் கிடைத்தது என்பதையும் அவர்களிடம் சொல்லுங்கள். இயேசுவின் பாதத்தண்டை உட்கார்ந்து, அவருடைய வார்த்தையிலிருந்து விலையேறப்பெற்ற பாடங்களைக் கற்றுக்கொண்டபோது கிடைத்த ஆசீர்வாதங்களைச் சொல்லுங்கள். கிறிஸ்தவ வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்குச் சொல்லுங்கள். மிகவும் விலையேறப்பெற்ற முத்தை நீங்கள் கண்டுகொண்டதை உங்களுடைய அன்பான, ஆர்வமிக்க வார்த்தைகள் அவர்களுக்கு உணர்த்தும். மேலான வழியை நீங்கள் கண்டுகொண்டதை சந்தோஷமிக்க, ஊக்கமூடுகிற உங்கள் வார்த்தைகள் காட்டுவதாக. இது உண்மையான ஊழியப்பணி. இப்பணியைச் செய்யும்போது அநேகர் கனவிலிருந்து விழித்துக்கொள்வார்கள். 29T, 38TamChS 165.1

    தம் கருவிகளாக தேவன் பயன்படுத்துகிறவர்களை திறமையற்றவர்களென சிலர் நினைக்கலாம்; ஆனால் அவர்கள் ஜெபித்தால், சத்தியத்தின் மேலான அன்பினால் எளிய வார்த்தைகளினால் அவற்றைச் சொன்னால், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையால் அவர்கள் மக்களை ஆதாயப்படுத்தலாம். எளிய வார்த்தைகளால் அவர்கள் சத்தியத்தைச் சொல்லி, வேதவசனங்களிலிருந்து வாசிக்கும்போது, அல்லது அனுபவங்களை விவரித்துச்சொல்லும் போது, மனதிலும் குணத்திலும் பரிசுத்த ஆவியானவர் தாக்கத்தை உண்டாக்குவார். மனித சித்தமானது தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படுகிறது; புரிந்துகொள்ளப்படாத சத்தியம் அவர்களுடைய இருதயத்தில் உணர்த்துதலை உண்டாக்குகிறதாக மாறுகிறது; அது ஓர் ஆவிக் குரிய நிஜமாகிறது. 36T, 444TamChS 165.2