Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மதிப்பறியப்படாத வாக்குத்தத்தம்

    ஆவியானவருடைய தெய்வீக செல்வாக்கானது தம்மைப்பின் பற்றுகிறவர்களோடு கடைசி மட்டும் இருக்கவேண்டுமென கிறிஸ்து அறிவித்தார். ஆனால் அந்த வாக்குறுதியின் மதிப்பு பலருக்குத் தெரியவில்லை ; அதனால் அதன் நிறைவேறுதலையும் உள்ளபடி காணமுடியவில்லை . ஆவியானவர் குறித்த வாக்குறுதி அதிகம் சிந்திக்கப்படாத ஒரு விஷயமாகவே இருக்கிறது; அதனால் அதற்கேற்ற விளைவுதான் உண்டாகியிருக்கிறது; அதாவது ஆன்மிக வறட்சியும், ஆவிக்குரிய அந்தகாரமும், ஆவிக்குரிய வீழ்ச்சி யும் மரணமும் உண்டாகியிருக்கின்றன. அற்ப விஷயங்கள் நம் கவனத்தை ஆட்கொள்ளுகின்றன; திருச்சபையின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் அவசியமான அனைத்து ஆசீர்வாதங்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு வருகிற தெய்வீக வல்லமையானது எல்லையற்ற அளவுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் கூட, சபையில் அந்த வல்லமை காணப்படவில்லை. 18T, 21TamChS 333.4