சாமர்த்தியம்
தேவனுக்கு முற்றிலுமாக அர்ப்பணக்கிறவர்கள் தங்கள் பிரயாசங்களில் எல்லாம் சிந்தனையோடும் ஜெபத்தோடும், ஊக்கத்தோடும், அர்ப்பணிப்புமிக்க சாமர்த்தியத்தோடும் நடந்துகொள்வார்கள். TamChS 301.2
சாமர்த்தியமும் கடின உழைப்பும் ஆர்வமும் உள்ள ஒருவன் தான் செய்கிற தொழிலில் வெற்றியடைவான். அதே தன்மைகளை தேவ ஊழியத்திற்கும் அவன் அர்ப்பணித்தால், மனித முயற்சியோடு தெய்வீகவல்லமையும் இணைவதால் இரட்டிப்பான செயல்திறன் வெளிப்படும். TamChS 301.3
ஆத்தும ஆதாய ஊழியத்தில் மிகுந்த சாமர்த்தியமும் ஞானமும் அவசியம். இரட்சகர் சத்தியத்தை மறைத்து ஒருபோதும் பேசவில்லை; மாறாக, எப்போதும் அன்போடு அதைச் சொன்னார். மக்களோடு இடைபட்ட சமயங்களிலெல்லாம் மிகுந்த சாமர்த்தியத்துடன் நடந்துகொண்டார். எப்போதும் சிந்தனையோடும் அன்போடும் செயல்பட்டார். அவர் ஒருபோதும் மோசமாக நடக்கவில்லை ; தேவையின்றி கடுமையாக ஒரு வார்த்தைகூட ஒருபோதும் பேசவில்லை; எளிதில் உணர்ச்சிவசப்படும் ஓர் ஆத்துமாவுக்கு தேவையற்ற வேதனையை அவர் கொடுத்ததே இல்லை. மனித பெலவீனத்தை அவர் விமர்சித்ததில்லை.மாய்மாலத்தையும் அவநம்பிக்கையையும் அக்கிரமத்தையும் பயமின்றி கடிந்துகொண்டார்; கடிந்துகொண்டு அவர் பேசிய போதும் கூட, குரலில் கண்ணீர் இருந்தது. சத்தியத்தை வேதனை தரக்கூடியதாக அவர் மாற்றியதே இல்லை. ஆனால் மனிதர்கள்மேல் எப்போதும் மிகுந்த கனிவை வெளிப்படுத்தினார். ஒவ்வோர் ஆத்துமாவும் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றதாக இருந்தது. தெய்வீக கண்ணியத்துடன் நடந்துகொண்டார்; அதேசமயம், தேவ குடும்பத்தின் ஒவ்வோர் அங்கத்தினர் மேலும் கனிவான மனதுருக்கத்துடன் இரங்கினார்; பரிவுகொண்டார். ஆத்துமாக்களை இரட்சிப்பதே தம் ஊழியப்பணி என்பதை ஒவ்வொருவரிலும் கண்டார். TamChS 301.4
யோசிக்காமல், திடுதிப்பெனச் செயல்படுகிற, ஆனால் உண்மையுள்ள ஆத்துமாக்கள் சிலர், மனதை ஊடுருவுகிற பிரசங்கம் கொடுக்கப்பட்டதுமே, உடனடியாக நம்மைச் சேராதவர்களிடம் சென்று அதைப்பற்றிப் பேசுகிறார்கள்; அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நாம் விரும்புகிற சத்தியங்களை அவர்களுக்கு வெறுப்பாக்கி விடுகிறார்கள். ‘ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக் கிறார்கள்.’ தொழில் செய்கிறவர்களும் அரசியல்வாதிகளும் பணிவன்புபற்றிப் படிக்கிறார்கள். முடிந்த வரையிலும் மற்றவர்களுக்கு தங்களைப் பிடிக்கவேண்டும் என்பது அவர்களுடைய கொள்கை. ‘தங்களைச் சுற்றிலுமுள்ளவர்களின் மனதில் மிகுந்த தாக்கத்தை உண்டக்க, எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறு பேசவேண்டும்?’ என்று படிக்கிறார்கள். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தங்கள் அறிவையும் திறன்களையும் முடிந்தவரையிலும்திறமையாகப்பயன்படுத்துகிறார்கள். TamChS 302.1
இந்தச் செய்தியைக் கொடுத்தாக வேண்டும்; ஆனால், அதைக் கொடுக்கும்போது, நம்மைப் போல வெளிச்சத்தைப் பெற்றிராதவர்களைத் தாக்கவும் நசுக்கவும் குற்றப்படுத்தவும் கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும். கத்தோலிக்கர்கள் மேல் கடுமையான தாக்குதல்களைத் தொடுக்குமளவிற்குச் செல்லக்கூடாது. கத்தோலிக்கர்கள் மத்தியிலும் கூட மனசாட்சிமிக்க கிறிஸ்தவர்கள் பலர் இருக்கிறார்கள். தங்கள்மேல் பிரகாசிக்கிற வெளிச்சத்தின்படி யெல்லாம் அவர்கள் நடக்கிறார்கள்; அவர்களுக்காக தேவன் செயல்படுவார். TamChS 302.2