Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஒளியின் வாய்க்கால்களும் ஆசீர்வாதங்களும்

    நாம் பரிசுத்தமாக்கப்பட்ட ஊடகங்களாக இருக்கவேண்டும். பரலோகஜீவன் நம்மூலமாக மற்றவர்களுக்குப்புறப்பட்டுச் செல்ல வேண்டும்.பரிசுத்த ஆவியானவர் ஒட்டுமொத்ததிருச்சபையையும் ஆக்கிரமித்து, உயிரூட்டி, சுத்திகரித்து, இருதயங்களை இணைக்க வேண்டும். 29T, 20TamChS 29.1

    கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் ஊழியப்பணியாளரே; அவர்கள் அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும்; குடும்பத்திலும் அக்கம்பக்கத்திலும் தான் வாழ்கிற நகரத்திலும் பெருநகரத்திலும் செய்யவேண்டும். தேவனுக்காக பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் ஒளியின் ஊடகங்களாக இருக்கிறார்கள். சத்தியத்தின் வெளிச்சத்தை மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி தேவன் அவர்களை நீதியின் கருவிகளாக மாற்றுகிறார். 32T, p 632TamChS 29.2

    பசியோடும் களைப்போடும் கிணற்றருகே உட்கார்ந்திருந்தபோது, இயேசு செய்த ஊழியத்தால் பரவலான ஆசீர்வாதம் உண்டானது. ஒரு ஆத்துமாவுக்கு அவர் உதவி செய்தார்; மற்றவர்களைத் தேடிச்சென்று, அவர்களை இரட்சகரிடம் அழைத்துவருவதற்கு அந்த ஆத்துமா ஒரு கருவியாக விளங்கியது. கிறிஸ்துவின் பணியானது இப்படித்தான் எப்போதுமே பூமியில் பரவியிருக்கிறது. உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்; மற்ற விளக்குகளும் பற்றிக் கொள்ளும். 4GW, p 195TamChS 29.3

    தாங்கள் பெற்ற வெளிச்சத்திற்கும் அனுபவத்திற்கும் கிறிஸ்து வுக்குமட்டுமேதாங்கள் பொறுப்பாளிகளாக இருப்பதாகவும், பூமியில் அவர் அங்கீகரித்துள்ள சீடர்கள் தேவையில்லையென்றும் பலர் நினைக்கிறார்கள். பாவிகளின் நண்பர் இயேசு; அவர்களின் இழிநிலை கண்டு உள்ளம் வருந்துகிறார். பரலோகத்திலும் பூமியிலும் அவருக்கு சகல அதிகாரமும் இருக்கிறது; ஆனால், மனிதர்களுக்குப் போதித்து, இரட்சிப்பை அறிவிக்கதாம் நியமித்திருக்கும் ஏற்பாடுகளை அவர் மதிக்கிறார். உலகத்திற்கு ஒளிகொடுப்பதற்கு வாய்க்காலாக தாம் வைத்திருக்கிற திருச்சபைக்கு பாவிகளை அவர் நடத்துகிறார். 1AA, p 122TamChS 29.4

    விரிவாக்கப்பணியைத் தொடர்ந்து செய்கிறவேலையைச் சபையிடம் நம்பி ஒப்படைத்தார். அதாவது, கிறிஸ்துவின் சேவைக்காக தங்களை ஒப்புக்கொடுக்கிற உண்மையுள்ள ஆத்துமாக்கள் இருக்கிற இடங்கள் அனைத்திலும் வெளிச்சமும் ஆசீர்வாதமும் வெளிப்படுகிற மையங் களை நிறுவுவதுதான் அந்தப் பணி. 2AA, p 90TamChS 30.1

    உலகின் மூலைமுடுக்குகளை சூரியக்கதிர்கள் ஊடுருவிச் செல்வதுபோல, பூமியிலுள்ள ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் நற்செய்தியின் வெளிச்சம் கிடைக்கவேண்டும் என்பது தேவனுடைய திட்டம். கிறிஸ்துவின் சபை நம் ஆண்டவருடைய நோக்கத்தை நிறைவேற்றி வந்திருந்தால், இருளிலும் மரணப்பகுதியிலும் மரணநிழலிலும் உட்கார்ந்திருப்பவர்கள்மேல் வெளிச்சம் வீசியிருக்கும். 3MB, p 42TamChS 30.2

    ஒவ்வோர் ஆத்துமாவும் ஜீவனுள்ள ஓர் ஊடகமாக விளங்கலாம் என்பது நமக்குள்ள சிலாக்கியம். அதன்மூலமாக தேவன் உலகத்திற்கு தம் கிருபையின் பொக்கிஷங்களையும், கிறிஸ்துவின் ஆராய்ந்து முடியாத ஐசுவரியங்களையும் அறிவிக்க முடியும். தம்முடைய ஆவியையும் குணத்தையும் உலகிற்கு வெளிப்படுத்துகிற முகவர்களைத்தாம் மற்ற அனைத்தையும்விட அதிகமாக இரட்சகர் விரும்புகிறார். இரட்சகரின் அன்பானது மனிதர்கள் மூலம் வெளிப்படவேண்டும்; அதைவிடப் பெரிய தேவை இந்த உலகில் வேறு எதுவுமில்லை .மனித இருதயங்களில் மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் கொடுக்கக்கூடிய பரிசுத்த எண்ணெயை ஊற்றுவதற்கு, அதற்கான ஊடகங்களுக்காக பரலோகம்முழுவதுமே காத்திருக் கிறது. 4COL, p 419TamChS 30.3

    அங்கத்தினர்களின் தேவபக்தியைப் பொறுத்துதான் தேவசபை யின் மகிமை இருக்கிறது; அங்குதான் கிறிஸ்துவின் வல்லமை மறைந்திருக்கிறது. தேவனுடைய உண்மை பிள்ளைகள் ஏற்படுத்து கிறதாக்கம் அதிகபயன் தரவில்லை என்பதுபோலத் தோன்றலாம்; ஆனால், அந்தத் தாக்கம் காலம்நெடுகிலும் இருந்துள்ளது; பிரதிபலனின் நாளில் அதற்கேற்ற பலன் இருப்பதைக் காணலாம். குறையாத தேவபக்தியிலும், அசையாத விசுவாசத்திலும் மிளிர்கின்ற மெய்க்கிறிஸ்தவனின் வெளிச்சமானது, ஜீவனுள்ள இரட்சகரின் வல்லமையை உலகிற்கு எடுத்துக்காட்டும். கிறிஸ்து நித்திய ஜீவனுக்கேதுவாக ஊறுகிற ஒரு நீரூற்று என்பது அவருடைய சீடர் களில் வெளிப்படும். உலகத்திற்கு அவர்கள் அதிகம் பரிச்சயமில்லாதவர்களாக இருக்கலாம்; ஆனால், தேவனுடைய விசேஷித்த மக்களாகவும், தெரிந்துகொள்ளப்பட்ட இரட்சிப்பின் பாத்திரங் களாகவும், உலகிற்கு வெளிச்சம் வீசும் அவருடைய ஊடகங்களாகவும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். 1Review; Mar 24, 1891TamChS 30.4

    சபை அங்கத்தினர்களே,வெளிச்சம் வீசுங்கள். உங்களுடைய தாழ்மையான ஜெபங்களும், இவ்வுலகின் இச்சைக்கும் மூடத்தனத்திற்கும் கேளிக்கைகளுக்கும் எதிரான சாட்சியும், இக்காலத்திற்கான சத்தியத்தின் அறிவிப்பும் எங்கும் கேட்கட்டும். உங்கள் பேச்சும் தாக்கமும் நேரமும் தேவன் தருகிற ஈவுகள். ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்துவதற்கு அவற்றைப்பயன்படுத்த வேண்டும். 29T, p 38TamChS 31.1

    கிறிஸ்துவின் சீடர்கள்தாம் பூமியில் அவருடைய பிரதிநிதி கள்; இந்த உலகின் ஒழுக்க அந்தகாரத்தைப் போக்குகிற விளக்குகளாக இருக்கவேண்டிவர்கள். உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையாக பெருநகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் என தேசம் முழுவதிலும் ஆங்காங்கே பிராகாசிக்க வேண்டும். இவ்வாறு எனக்குக் காட்டப்பட்டது. 32T, p 631TamChS 31.2

    கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் உலகிற்கு விளக்காக இருக்கவேண்டும்; பிரகாசிக்க முயலும்படி அவர் கட்டளையிடவில்லை. உயர்ந்தபட்ச நற்குணத்தை வெளிப்படுத்த தங்களுக்குப் பிடித்தமானவிதத்தில் முயல்வதையும் அவர் அங்கீகரிப்பதில்லை. பரலோகத்தின் நியதிகள் அவர்கள் ஆத்துமாக்களில் நிறைந்திருப்பதை அவர் விரும்புகிறார். அப்போதுதான், உலகத்தோடு தொடர்புகொள்ளும்போதெல்லாம் தங்களிலுள்ள வெளிச்சத்தை அவர்கள் வெளிப்படுத்த முடியும். வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் உண்மையிலிருந்து கொஞ்சமும் பிறழாமல் இருக்கும்போது, வெளிச்சம் வீசுகிற கருவிகளாக விளங்கலாம். 4MH, p 36TamChS 31.3

    குருட்டுத்தனமான பொய்யிலும் தவறான அபிப்பிராயத்திலும் இருந்த சவுலுக்கு,அவன் உபத்திரவப்படுத்தி வந்த கிறிஸ்துவைக் குறித்த வெளிப்பாடு கொடுக்கப்பட்டது. உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறதிருச்சபையுடன் அவன் நேரடியாகத் தொடர்புகொள்ளும்படிச் செய்தார். இந்தச் சம்பவத்தில், கிறிஸ்துவின் இடத்திலும் கிறிஸ்துவுக்காகச் செயல்படுவதற்கு பூமியில் நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் ஊழியர்கள் இடத்திலுமிருந்து அனனியா பேசினான். சவுல் பார்வையடையும்படி, கிறிஸ்துவின் பிரதிநிதியாக சவுலின் கண்களை அனனியா தொட்டான். கிறிஸ்துவின் பிரதிநிதியாக, தன்னுடைய கரங்களை அவன்மேல் வைத்து, கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபித்தபோது, சவுல் பரிசுத்தாவியைப் பெறுகிறான். இவை எல்லாமே கிறிஸ்துவின் நாமத்தினாலும், அவருடைய அதிகாரத்தின்படியும் நடைபெற்றன. கிறிஸ்துவே ஆதாரம்; சபைதான் தொடர்புசாதனம். 1AA, p 122TamChS 31.4

    எங்கும் தவறு மலிந்திருக்கிறது. ஆத்துமாக்களின் சத்துரு தன் படைகளைத் திரட்டிவருகிறான். வஞ்சகமான தவறுகளால் மனிதர்களுடைய மனங்களைக் குழப்பும்படி எல்லாத் திட்டங்களையும் கையாண்டு, ஆத்துமாக்களை அழிக்கிறான். தேவன் யாரை நம்பி தம்முடைய சத்தியப் பொக்கிஷங்களை ஒப்படைத்திருக்கிறாரோ, அவர்கள் ஒழுக்க அந்தகாரத்தின்மத்தியில் வெளிச்சம் வீசவேண்டும். 2HS, p 290TamChS 32.1

    தம்முடைய மக்கள் உலகத்தில் விளக்குகளாகப் பிரகாசிப்பதை தேவன் விரும்புகிறார். ஊழியர்கள் மட்டும்தான் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை; கிறிஸ்துவின் ஒவ்வொரு சீடரும் செய்ய வேண்டும். பரலோகத்திற்கேற்றவைகளை அவர்கள் பேசவேண்டும்.தேவனோடு பேசுவதில் மகிழ்ச்சியடைகிற அதேவேளையில், தங்களுடைய இருதயங்களை உயிர்ப்பிக்கிற தேவ அன்பை தங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் வெளிப்படுத்தும்படி, தங்கள் சகமனிதர்களோடு பேசிப்பழக விரும்புவார்கள். இவ்வாறு அவர்கள் உலகிற்கு விளக்குகளாக இருப்பார்கள். அவர்கள் மூலமாகப் பாய்கிற வெளிச்சமானது அணைந்து போவதில்லை; அகற்றப்படுவதும் இல்லை . 32T, pp 122,123TamChS 32.2

    கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் பரலோகத் தூதர்களின் பிரசன்னத்தை அதிகமாக வெளிப்படுத்த வேண்டுமென்றால், அவர்கள் நீதியின் கருவிகளாகவும், தேவ பணியாட்களாகவும், ஜீவனுள்ள கற்களாகவும், வெளிச்சம் வீசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். சத்தியத்தின் ஆவியும், நீதியின் ஆவியும் பாய்ந்தோடுகிற ஊடகங்களாக அவர்கள் விளங்கவேண்டும். 42T, p 126, 127TamChS 32.3

    தெய்வீக செல்வாக்கின் களஞ்சியமாகத்தான் ஆண்டவர் தம் சபையை உண்டாக்கியிருக்கிறார். அங்கத்தினர்கள் ஊடகங்களாக மாறவேண்டும்; அந்த ஊடகங்கள்மூலம் ஜீவ ஊற்று உலகத்திற்குள் பாயவேண்டும். அதனால் அநேகர் மனமாற்றமடையலாம்; பிறகு அவர்களும் ஊடகங்களாக மாறி, அந்த ஊடகங்கள்மூலம் கிறிஸ்துவின் கிருபையானது ஆண்டவருடைய திராட்சத்தோட்டத்தின் வறண்ட பகுதிகளுக்குப்பாயமுடியும். ஒட்டுமொத்த பரலோகமும் அதற்காகக் காத்திருக்கிறது. 1BEcho, Aug 12, 1901TamChS 32.4

    தேவனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு வெளிச்சம் வீசுவார்கள். வீசும்படி வெளிச்சம் இல்லாமல் இருந்தால், ஒளியின் ஊற்றோடு அவர்களுக்குத் தொடர்பில்லை. 22HS, p 291TamChS 33.1

    மற்றவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்க தேவன் தம் பிள்ளைகளை நியமித்திருக்கிறார்; அதைச் செய்யத் தவறினால், அது தவறு. பரிசுத்தாவியால் ஏற்கனவே பிறந்திருந்தும் தாங்கள் செய்திருக்கவேண்டிய வேலையைச் செய்யத்தவறி, அதனால் ஆத்துமாக்கள் அந்தகாரத்தில் விடப்பட்டிருந்தால், அவர்கள் தேவனுக்குக் கணக்கு ஒப்புவித்தாகவேண்டும். கிறிஸ்துவின் புண்ணியங்களை நாம் அறிவிக்கும்படி நாம் அந்தகாரத்திலிருந்து அவருடைய ஆச்சரியமான ஒளிக்குள் அழைக்கப்பட்டிருக்கிறோம். 3RH, Dec 12, 1893TamChS 33.2

    தேவனுக்கென்று தங்களை பரிசுத்தம் பண்ணியிருக்கிற அனைவருமே ஒளியின் ஊடகங்களாக விளங்குவார்கள். தம் கிருபையின் ஐசுவரியங்களை பிறருக்கு அறிவிக்கிற தம்முடைய ஏது கரங்களாக தேவன் அவர்களை மாற்றுகிறார். நாம் என்ன பேசுகிறோம் என்பது அல்ல; நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை வைத்துதான் மற்றவர்கள்மேல் நம்முடைய தாக்கம் இருக்கிறது. நம்முடைய பகுத்தறிவான வார்த்தைகளை மனிதர்கள் எதிர்த்து மறுக்கலாம், நம்முடைய மன்றாட்டுகளைப் புறக்கணிக்கலாம். ஆனால், சுயநலமற்ற அன்புடன் வாழ்வது அவர்கள் மறுத்துப் பேசமுடியாத ஒரு வாதமாகும். கிறிஸ்துவின் சாந்தமுள்ளவர்களாக முரணற்ற வாழ்க்கை வாழ்வது உலகத்தில் ஒரு வல்லமையாகும். 4 DA, pp 141,142TamChS 33.3

    உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கவேண்டியவர்கள் மங்கலான, விட்டுவிட்டு எரிகிற சுடர்களாக எரிகிறார்கள். வெளிச்சம் என்றால் என்ன? பயபக்தி, நற்குணம், சத்தியம், இரக்கம், அன்பு ஆகியவை ஆகும்; சத்தியத்தை நம் வாழ்க்கையிலும் குணத்திலும் வெளிப்படுத்துவது ஆகும். ஆற்றல்மிக்க வல்லமையாக சுவிசேஷம் விளங்கவேண்டுமென்றால் விசுவாசிகளின் தனிப்பட்ட பயபக்தியைச் சார்ந்தே அது உள்ளது; ஒவ்வோர் ஆத்துமாவும் நற் கிரியையைச் செய்வதற்கான அனைத்து வசதியையும் பெறும்படிக்கு தம்முடைய நேசகுமாரனுடைய மரணத்தின்மூலம் தேவன் வழியை ஏற்படுத்தியிருக்கிறார். ஒவ்வோர் ஆத்துமாவும் பிரகாசமான, சுடர்விட்டெரிகிற விளக்காக இருக்கவேண்டும். அந்தகாரத்திலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளிக்கு அழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கவேண்டும். நாம் தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருக்கிறோம். ஆம், வேலையாட்கள்; வேலையாட்கள் என்றால், ஆண்டவருடைய திராட்சத்தோட்டத்தில் ஊக்கத்துடன் சேவை செய்கிறவர்கள். இரட்சிக்கப்படவேண்டிய ஆத்துமாக்கள் இருக்கிறார்கள்; நம் சபைகளிலும், நம் ஓய்வு நாள் பள்ளிகளிலும், நம் அக்கம்பக்கத்திலும் இரட்சிக்கப்படவேண்டிய ஆத்துமாக்கள் இருக்கிறார்கள். 1RH, Mar 24,1891TamChS 33.4

    பிறருக்காகப் பணிசெய்யும்போதுதான், அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை உயிரோடு வைத்திருக்கமுடியும். அவர்கள் இயேசுவுடன் உடன்வேலையாட்களாக மாறினால், நம் சபைகளிலுள்ள விளக்குகள் பிரகாசமாகிக்கொண்டேபோகும்; அந்த ஒளிச் சுடர்கள் நம் எல்லைகளுக்கும் அப்பால்,அந்தகாரத்தை ஊடுருவிச் செல்வதை நாம் பார்க்கலாம். 2HS, p 291TamChS 34.1

    நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். இரட்சிப்பின் நன்மைகள் தங்களுடைய தேசத்திற்குமட்டுமே உரியவை என்று யூதர்கள் நினைத்தார்கள்; ஆனால், இரட்சிப்பானது சூரிய வெளிச்சம் போன்றது என்பதை கிறிஸ்து அவர்களுக்குக் காண்பித்தார். அது உலகம் முழுவதிற்கும் சொந்தமானது. 3DA, p 30TamChS 34.2

    பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு இணங்குகிற இருதயங்கள்தாம் தேவனுடைய ஆசீர்வாதம் புரண்டோடும் வாய்க்கால்களாக இருக்கின்றன. தேவனைச் சேவித்தவர்கள் இந்த உலகத்திலிருந்து அகற்றப்பட்டு, மனிதர் மத்தியிலிருந்து அவருடைய ஆவி எடுக்கப்பட்டால், இந்தப் பூமி அழிந்து, பாழ்நிலமாக மாறியிருக்கும்; அது சாத்தானுடைய ஆளுகையின் விளைவு. நீதிமான்களை துன்மார்க்கர் புறக்கணித்து, ஒடுகுகிறார்கள்; ஆனால், நீதிமான்கள் இந்த உலகில் இருப்பதால்தான் துன்மார்க்கரும் இவ்வுலகில் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். இது துன்மார்க்கருக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், பெயரில் மட்டும் கிறிஸ்தவர்களாக இருக்கிறவர்கள் எல்லோரும் சாரமற்ற உப்பைப்போல இருக்கிறார்கள். இந்த உலகில் நன்மைக்கான தாக்கம் செலுத்தாத அவர்கள் தங்கள் வாழ்வில் தேவனைத் திரித்துக்காட்டுவதன்மூலம் அவிசுவாசிகளைவிட மிகவும் மோசமானவர்களாக இருக்கிறார்கள். 1DA, p 306TamChS 34.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents