Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கலந்துகொள்ளாவிட்டால் உண்டாகும் கடும் நஷ்டம்

    அதிகப் பொருட்செலவில் நம் முகாம் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்படுகின்றன. பிரபலமற்ற சத்தியத்திற்கு ஆதரவாகப் பேசுகிற தேவ ஊழியர்கள் சிலுவையிலறையப்பட்ட மீட்பரிடமிருந்து விழுந்துபோன எளிய பாவிகளுக்குக் கொடுக்கப்படுகிற இரக்கத்தின் செய்தியை அறிவிப்பதற்கு இந்தப் பெருங்கூட்டங்களில் கடுமையாகப் பிரயாசப்படுகிறார்கள். இந்தச் செய்தியை அலட்சியமாகப் புறக்கணிப்பதும் நினைப்பதும் தேவனுடைய இரக்கத்தையும் அவருடைய எச்சரிப்பின் சத்தத்தையும் வேண்டுதலின் சத்தத்தையும் புறக்கணிப்பதாகும். இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளாவிட்டால் உங்களுடைய ஆத்தும நலனுக்கு மிகுந்த கேடுவிளைவிக்கிறீர்கள். பிரசங்கிக்கப்படும் தேவ வார்த்தையைக் கேட்பதன்மூலம், சத்தியத்தை விசுவாசிப்பவர்களுடன் பழகுவதன்மூலம் அங்கு நீங்கள் பெற்றிருக்க வேண்டிய பெலத்தை இழந்துபோகிறீர்கள். 24T; 115TamChS 258.1

    ஒரு குடும்பமாக தேவனுடைய பிரதிநிதிகளாக நிற்பதும், அவிசுவாசக் கூட்டத்தார்மத்தியில் தேவ கற்பனையைக் கைக்கொள்வதும் சாதாரண விஷயமல்ல. உயிருள்ள நிருபங்களாக, சகலமனிதராலும் அறிந்தும் வாசிக்கப்பட்டும் இருக்க வேண்டுமென நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகுந்த பயபக்திக்குரிய பொறுப்புகள் அடங்கிய ஒரு நிலையாகும். ஒளியில் வாழவேண்டுமென்றால், வெளிச்சம் பிரகாசிக்கிற இடத்திற்கு நீங்கள் வரவேண்டும். சகோதரர் கே அவர்கள், எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து, சத்தியத்தை நேசிப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை கூடுகிற கூட்டங்களிலாவது தன் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டிய மாபெரும் கடமை தனக்கிருப்பதை உணரவேண்டும். இது அவரையும் அவர்களையும் பெலப்படுத்தும்; சோதனைக்கும் கடமைக்கும் அவர்களைத் தகுதிப்படுத்தும். தங்களைப் போன்ற விசுவாசமுடையவர்களுடன் ஒன்று கூடி வருகிற சிலாக்கியத்தை அவர்கள் இழப்பது நல்லதல்ல; ஏனென்றால் சத்தியமானது அவர்களுடைய உள்ளங்களில் முக்கியத்துவமிழக்கிறது. அதன் பரிசுத்தப்படுத்துகிற செல்வாக்கால் அவர்கள் தங்கள் இருதயங்களில் வெளிச்சமும் தெளிவும் பெறுவது நின்று போகிறது. அவர்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை இழக்கிறார்கள். ஜீவனுள்ள பிரசங்கியின் வார்த்தைகளால் அவர்கள் பெலப்படுவதில்லை. ஆவிக்குரிய விஷயங்களே மனதில் தோன்றாத அளவிற்கு உலக எண்ணங்களும் உலகப்பிரகாரமான முயற்சிகளும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 14T, 106TamChS 258.2

    அனைவருமே முடிந்தவரையில் இந்த வருடாந்தரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும். இதை தேவன் தங்களிடம் எதிர் பார்க்கிறாரென அனைவரும் உணரவேண்டும். அவர்கள் தம்மிலும் தம்முடைய கிருபையின் வல்லமையிலும் பெலப்படுவதற்கு அவர் அருளியுள்ள சிலாக்கியங்களை பயன்படுத்தாவிட்டால், அவர்கள் மேலும் மேலும் பெலவீனமடைவார்கள்; அனைத்தையும் தேவனுக்கென பரிசுத்தப்படுத்துகிற ஆவல் மேலும் மேலும் குறையும்.TamChS 259.1

    சகோதர சகோதரிகளே, இயேசுவைக் கண்டுகொள்ளும்படி இந்தப் பரிசுத்தமான முகாம் கூட்டங்களுக்கு வாருங்கள். அவரும் விருந்துக்கு வருவார். அவர் கலந்துகொள்வார். நீங்கள் நிச்சயம் செய்தாக வேண்டியதை உங்களுக்காகச் செய்வார். ஆத்துமாவின் மேலான நலன்களைவிட உங்களுடைய வயல்நிலங்களை மிகுந்த மதிப்புடையவையாகக் கருதமுடியாது. நீங்கள் பெற்றிருக்கிற பொக்கிஷங்கள் அனைத்துமே, அவை எவ்வளவுதான் முக்கிய மானவையாக இருந்தாலும், எல்லையே இல்லாத ஆதாயமாகிய சமாதானத்தையும் நம்பிக்கையையும் அவை பெற்றுத்தர முடியாது. வாழ்க்கை முழுவதும் அவற்றிற்காக நீங்கள் உங்களிடமுள்ளதையெல்லாம் செலவழிக்கவும், பாடுபடவும், கடுமையாக உழைக்கவும் வேண்டியிருந்தாலும், சமாதானமும் நம்பிக்கையுமே முக்கியமானவை. நித்தியமானவை பற்றிய ஒரு வலுவானதும் தெளிவானதுமான உணர்வும், அனைத்தையும் கிறிஸ்துவிடம் அர்ப்பணிக்க ஆயத்தமாயிருக்கிற ஓர் இருதயமும் தான் இந்த உலகத்தின் சகல ஐசுவரியங்களையும் சந்தோஷங்களையும் மகிமைகளையும் விட முக்கியமானவையாகும். 22T, 575, 576TamChS 259.2