Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    தேவன் கொடுப்பதற்கு விரும்புகிறார்

    பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுப்பதற்கு ஆயத்தமாக இருப்பதைவிட, ஆண்டவர் தம்மை உண்மையோடு சேவிப்பவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பதற்கு அதிக விருப்பமுள்ளவராக இருக்கிறார். 2 AA, 50TamChS 329.1

    சகல நேரங்களிலும் சகல இடங்களிலும் சகல துக்கங்களிலும் சகல வேதனைகளிலும் வெளித்தோற்றம் இருளாகவும் எதிர்காலம் குழப்பமாகவும் தோன்றலாம்; நாம் உதவியற்ற நிலையில் தனிமையாக இருப்பதுபோல நாம் உணரலாம். அப்போது விசுவாசத்தோடு ஏறெடுக்கப்படுகிற ஜெபத்திற்குப் பதிலாக தேற்றரவாளன் அனுப்பப்படுவார். பூமியிலுள்ள ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் சூழ்நிலைகள் நம்மைப்பிரிக்கலாம்; ஆனால், எந்தச் சூழ்நிலையும், எந்தத் தூரமும் பரலோகத் தேற்றரவாளனிடமிருந்து நம்மைப் பிரிக்கமுடியாது. நாம் எங்கிருந்தாலும், நாம் எங்குச் சென்றாலும், நம்மை ஆதரித்து, தாங்கி, தூக்கி, சந்தோஷப்படுத்துவதற்கு அவர் நம் வலது பாரிசத்திலேயே எப்போதும் இருக்கிறார். 3 DA, 669,670TamChS 329.2

    சுவிசேஷத்தை அறிவிப்பவர்கள் காலைதோறும் ஆண்டவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு, அர்ப்பணிப்பின் உடன்படிக்கைகளைப் புதுப்பிக்கவேண்டும்; அப்போது, தம் ஆவியின் பிரசன்னத்தை அவர்களுக்கு அருளுவார். பரிசுத்தாவியின் புதுப்பிக்கிற வல்லமையையும், பரிசுத்தப்படுத்துகிற வல்லமையையும் அவர்கள் உணரலாம். ஒவ்வொரு நாளின் கடமைகளையும் செய்ய அவர்கள் செல்லும்போது, கண்ணுக்குத் தெரியாத ஏதுகர மாகிய பரிசுத்த ஆவியானவர் ‘தேவனுக்கு உடன்வேலையாட்களாக’ நாம் இருப்பதற்கு தங்களைத் தகுதிப்படுத்துவதின் நிச்சயத்தைப் பெற்றிருப்பார்கள். 4AA, 56TamChS 329.3

    பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதர்கள் என்கிற ஏதுகரங்கள் மூலமாக உலகத்தில் தம் செல்வாக்கைப் பெருக்க அவர் முயன்று வருகிறார். 5SW, Nov. 3, 1903TamChS 329.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents