Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வெற்றிபெறுகிற வாழ்க்கை

    தேவனுக்காக நாம் சாட்சியாக இருப்பதற்கு சத்தியத்தைப் போதித்தால்மட்டும் போதாது; துண்டுப்பிரதிகளைக் கொடுத்தால் மட்டும் போதாது. கிறிஸ்துவைப்போல வாழ்வதுதான் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு ஆதாரவான ஆற்றல்மிக்கவாதம். கிறிஸ்தவர்களிடம் உள்ள இழிவான குணமானது உலகப்பிரகாரமான மனிதரின் குணத்தைவிட உலகில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. இவை இரண்டையும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும். 29T, p 21TamChS 39.2

    எழுதப்பட்டபுத்தகங்கள் எல்லாம் பரிசுத்தமான வாழ்க்கைக்கு துணைபோய் விட முடியாது. ஊழியக்காரர் போதிப்பதை அல்ல, சபையின் வாழ்க்கையைப் பார்த்துதான் மனிதர்கள் நம்புவார்கள். பிரசங்க மேடையிலிருந்து பிரசங்கிக்கப்படும் பிரசங்கத்தின் தாக்கத்தை, சத்தியத்தின் சார்பாகப் பேசுவதாகச் சொல்கிற சிலரின் மோசமான வாழ்க்கையில் வெளிப்படுகிற பிரசங்கம் தடுத்துவிடுகிறது. 39T, p 21TamChS 39.3

    கிறிஸ்துவின் வாழ்க்கையால் ஏற்பட்ட தாக்கம் எப்போதும் எல்லையற்று வளருவதாக இருந்தது. அந்தத் தாக்கம் அவரை தேவ னோடும் முழு மனிதகுடும்பத்தோடும் இறுக்கிக் கட்டியது. இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்துகிற வல்லமையை கிறிஸ்துமூலம் மனிதனுக்கு தேவன் கொடுக்கிறார்; அவன்தனக்காக மட்டும் வாழாமல் இருக்கும்படி அந்த வல்லமை அவனை மாற்றுகிறது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் தேவனுடைய மாபெரும் குடும்பத்தின் ஒருபகுதியான நம் சகமனிதர்களுடன் பிணைக்கப்பட்டுள் ளோம். நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கடமைப்பட்டுள்ளோம். எந்த மனிதனும் சகமனிதர்களைச் சாராமல் இருக்க முடியாது; ஏனெனில், ஒருவருடைய செழிப்பு மற்றவரில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்றவரின் நலனுக்கு நான் தேவை’ என்று ஒவ் வொருவரும் உணரவேண்டும். மற்றவர்களுடைய சந்தோஷத்தை மேம்படுத்த முயலவேண்டும். இது தேவதிட்டம். 1COL, p 339TamChS 39.4

    வேதாகமத்தின் மார்க்கத்தை ஒருபுத்தகத்தின் அட்டைகளுக்கு இடையிலோ, சபையின் மதில்களுக்கு மத்தியிலோ அடைத்துவிடக்கூடாது. நம் நலனுக்காக மட்டும் அவ்வப்போது வெளியே எடுத்து விட்டு, மீண்டும் பத்திரமாக மூடிவைத்தல் கூடாது. அது நம் அனுதின வாழ்வைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்; நம்முடைய அனுதின வியாபாரக்கொடுக்கல் வாங்கலிலும், எல்லாச் சமூக உறவுகளிலும் அது தன்னை வெளிப்படுத்தவேண்டும். 2DA, pp 306,307TamChS 40.1

    உலகத்திற்கு முன்பாக தம் மக்களில் தம்மை மகிமைப்படுத்துவதே தேவனுடைய திட்டம். கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்திருப்பவர்கள் சிந்தையிலும் சொல்லிலும் செய்கையிலும் தம்மை வெளிப்படுத்த வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். அவர்களுடைய எண்ணங்கள் பரிசுத்தமாகவும், வார்த்தைகள் தூய்மையும் மேலானவையுமாக இருக்கவேண்டும்; அவர்களைச் சுற்றிலுமுள்ளவர்களை இரட்சகரின் அருகில் இழுக்கவேண்டும். அவர்கள் செய்கிற, சொல்கிற அனைத்திலும் கிறிஸ்துவின் மார்க்கம் பின்னிப்பிணைந்திருக்க வேண்டும். அவர்களுடைய ஒவ்வொரு வியாபார பரிவர்த்தனையும் தேவ பிரசன்னத்தால் நறுமணம் வீசவேண்டும். 339T, 21TamChS 40.2

    வியாபாரம் செய்கிறவர் உண்மையோடு செயல்படுவதால் தன் ஆண்டவருக்கு மகிமை உண்டாகிறவிதத்தில் வியாபாரத்தைச் செய்ய வேண்டும். தான் செய்கிற ஒவ்வொன்றிலும் தனக்கு இருக்கிற கிறிஸ்தவ நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். அவன் கிறிஸ்துவின் ஆவியை மனிதர்களிடம் தன் வியாபாரத்தில் பிரதி பலிக்கவேண்டும். ஆண்டவர் யூதேய நகரங்களில் எவ்வாறு சாதாரண வேலைசெய்து, கடுமையாக உழைத்தாரோ, அதுபோல இயந்திரவல்லுநர் கருத்துதோடும் உண்மையோடும் வாழ்ந்து, அவரைப் பிரதிபலிக்கவேண்டும். கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கையிடுகிற ஒவ்வொருவரும் தன்னுடைய நற்கிரியைகளை பிறர் கண்டு, தன்னுடைய சிருஷ்டிகரும் மீட்பருமானவரை மகிமைப்படுத்த வழி நடத்தப்படும் விதத்தில் வேலைசெய்ய வேண்டும். 4BEcho, Jun 10, 1901TamChS 40.3