Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    வேறு நிறத்தவர்

    இந்தத் தேசத்தில் இதுவரை ஊழியம் செய்யப்பட்டிராத மிகப்பெரிய ஒரு களம் உள்ளது. ஆயிரமாயிரமான எண்ணிக்கையில் வேறு நிறத்தவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்துவில் நடைமுறை ரீதியான, உண்மையான விசுவாசம் உடையவர்கள் இவர்களிடம் பரிவும் இரக்கமும் காட்டவேண்டும். இவர்கள் அயல்நாட்டில் வாழவில்லை; மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களைப் பணியவுமில்லை. அவர்கள் நம்மத்தியில் வாழ்கிறார்கள்; அவர்களை நாம் புறக்கணித்திருப்பதாகச் சொல்லி, அவர்கள் பக்கமாக நம் கவனத்தை தேவன் திருப்புகிறார். ஊழியம் சென்றிராத பரந்த களம் நமக்கு முன்னால் உள்ளது; தேவன் நம்மை நம்பி ஒப்படைத்துள்ள வெளிச்சத்தை அவர்களுக்கு வீச அழைக்கிறார். 28T; 205TamChS 284.1

    வெள்ளைநிறத்தவருக்கும் கறுப்புநிறத்தவருக்கும் இடையே பிரிவினைச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக சிருஷ்டிகரை நேசிக்கவும், தங்கள் அயலகத்தார்மேல் பாரபட்சமற்ற அன்புகாட்டவும் சொல்கிற வேத வசனங்களுக்கு கிறிஸ்தவர்கள் கீழ்ப்படியும்போது, இந்நிலை மாறும். எரிகோ மதில்கள் தகர்ந்ததுபோல, தப்பெண்ணமாகிய இந்த மதில்களும் தகர்ந்து விழும். இக்காலத்திற்கான சத்தியத்தை விசுவாசிப்பதாகச் சொல்கிறவர்களுடைய ஒவ்வொரு திருச்சபையும், புறக்கணிக்கப்பட்டவர்களும் சிந்தித்துச் செயல்படுகிற சிலாக்கியம் பறிக்கப்பட்டவர்களுமான இந்த மக்களை நோக்கிப் பார்க்க வேண்டும். 3RH, Dec. 17, 1895TamChS 284.2

    தென்பகுதி மக்களுக்கான ஊழியத்தைச் செய்யத்துவங்குவோம். எதுவுமே செய்யாமல், செயல்படுத்தாத தீர்மானங்களை எடுப்பதோடு திருப்தியடையக் கூடாது; கறுப்பினத்தவரான நம் சகோதரரின் இக்கட்டைத் தணிக்கும்படி, நம் ஆண்டவருக்காக மனப்பூர்வமாக ஏதாவது செய்வோம். 1RH, Feb. 4, 1896TamChS 285.1

    ஜீவப்புத்தகத்தில் வெள்ளை இனத்தவரின் பெயருக்கு அருகில்தான் கறுப்பு இனத்தவனின் பெயரும் எழுதப்படுகிறது. எல்லாருமே கிறிஸ்துவுக்குள் ஒன்றுதான். பிறப்பும் தேசமும் நிறமும் மனிதர்களை உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாது. குணம்தான் மனிதனைத் தீர்மானிக்கிறது. ஒரு செவ்வின மனிதனும், ஒருசீனாக்காரனும் ஓர் ஆப்ரிக்கனும் கீழ்ப்படிதலோடும் விசுவாசத்தோடும் தன் இருதயத்தை தேவனிடம் கொடுக்கும்போது, இயேசு அவர்களை நேசிப்பது எவ்விதத்திலும் நிறத்தை வைத்து இருக்காது. அவர்களில் ஒருவரை இயேசு, ‘என்னுடைய பிரியமான சகோதரன்’ என்றுதான் அழைப்பார். 2SW, 8, Mar. 20, 1891TamChS 285.2

    நற்செய்தியின் நம்பிக்கையை இறுகப் பிடித்துக்கொண்ட தாழ்மையான ஓர் ஆப்ரிக்கனுடன் பூமியின் இராஜாக்களும் பிரபுக்களும் சந்தோஷமாக இடங்களைப் பரிமாறிக்கொள்ளப் போகிற நாள் வருகிறது. 3SW, 8, Mar. 20, 1891TamChS 285.3

    தேவன் இஸ்ரவேலர்மேல் காட்டிய அக்கறையைவிட தம்மை ஏற்றுக்கொண்டு தமக்காகச் சேவை செய்யக்கூடிய ஆப்பிரிக்க இன ஆத்துமாக்கள்மேல் காட்டுகிற அக்கறை எந்தவிதத்திலும் குறைவானதில்லை. எல்லா வகுப்புகளையும் சேர்ந்த மக்கள் மத்தியில், குறிப்பாக கறுப்பின மக்களுக்கு மத்தியில் நற்செய்தி ஊழியம் செய்வதில் இதுவரை செய்திருப்பதைவிட தேவன் அதிகம் எதிர்பார்க்கிறார். நம் அன்புக்கு பாத்திரமானோருக்கு நாம் செய்வதை விட கறுப்பின மக்களுக்கு அதிகமாகச் செய்ய கடன்பட்டிருக்க வில்லையா? இவர்களை அடிமைத்தனத்தில் வைத்திருந்தவர்கள் யார்? இவர்களை அறியாமையில் வைத்திருந்தவர்கள் யார்? இவர்கள் சீர்கெட்டிருந்தால், மோசமான பழக்கவழக்கங்களும் நடத்தைகளும் உடையவர்களாக இருந்தால், அதற்குக் காரணம் யார்? இவர்களுக்கு ஊழியம் செய்கிற கடன் வெள்ளை இனத்தவர்களுக்கு இல்லையா? இவர்களுக்கு இவ்வளவு பெரிய தீங்கு இழைக்கப்பட்டிருக்கும்போது, இவர்களை உயர்த்துவதற்கு ஊக்கமான முயற்சி எடுக்கப்படக்கூடாதா? இவர்களுக்கு சத்தியத்தைக் கொண்டு செல்ல வேண்டும். நம்மைப்போல இவர்களிலும் இரட்சிக்கப்பட வேண்டிய ஆத்துமாக்கள் இருக்கிறார்கள். 1Sw, 11,12, Mar. 20, 1891 TamChS 285.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents