Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வெற்றிக்கு இன்றியமையாதது

    தற்போதைய சத்தியத்தையும் தேவநோக்கத்தோடு சம்பந்தப்பட்ட மகிமையான தேவ வழிநடத்துதல்களையும் குறித்த அறிவை மற்றவர்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது, யாருடைய நாமத்தை மேன்மைப்படுத்த விரும்புகிறோமோ அவரிடம் முற்றிலும் நம்மை நாம் முதலாவது அர்ப்பணிக்கவேண்டும். நாம் சந்திக்கச் செல்பவர்களுக்காக ஊக்கத்துடன் ஜெபிக்கவும் வேண்டும்; உயிருள்ள விசுவாசத்தால் அவர்களில் ஒவ்வொருவரையும் தேவ பிரசன்னத்திற்குள் கொண்டுவரவேண்டும். மனிதனுடைய எண்ணத்தையும் நோக்கங்களையும் தேவன் அறிவார்; நம்மை உருக்குவது அவருக்கு கடினமே அல்ல! கடினமான இருதயத்தை, அக்கினிபோன்ற தாக்கத்தால் மிருதுவாக்குவது அவருடைய ஆவியானவருக்கு கடினமல்ல! ஆத்துமாவை அன்பாலும் கனிவாலும் நிறைப்பது அவருக்கு கடினமல்ல! அவருடைய பரிசுத்த ஆவியின் கிருபைகளை நமக்குக் கொடுப்பதும், ஆத்துமாக்களுக்காகப் பிராயசப்பட்டு அங்குமிங்கும் செல்ல நம்மைத்தகுதிப்படுத்துவதும் அவருக்குக்கடினமல்ல! 1Ms, June 5, 1914TamChS 222.1

    மனிதர்களை நாம் ஞானமாக அணுகியிருந்தால், ஊழியம் குறித்த அறிவில் பழக்கியிருந்தால், நம் சிலாக்கியமாக விளங்குகிற ஊழியத்தைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பை அவர்களுக்குக் கொடுத்து, அதைச் செய்யும்படி அவர்களைத் தூண்டியிருந்தால் தேவபணியானது இப்போது பெற்று வருவதைவிட அதிக அங்கீகாரங்களைப் பெற்றிருக்கும். நாம் தேவ ஊழியர்களாக ஞானமும் விவேகமுமான போக்கைக் கடைப்பிடித்திருந்தால், அவருடைய நல்ல கரமானது நம்முடைய முயற்சிகளில் நம்மைச் செழிக்கச் செய்திருக்கும். 2SW, March 15, 1904TamChS 223.1

    ஆண்டவருடைய ஊழியத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் உண்மையோடும் முன்னறிவோடும் இருப்பதைச் சார்ந்து எவ்வளவு நன்மைகள் இருக்கிறதென்பதை உணர்ந்தால், அவர்களுடைய முயற்சிகளுக்கு அதிக வெற்றி கிடைத்திருக்கும். நம்மைக் கட்டுப்படுத்துகிற வல்லமைகளிடமிருந்து உரிமையாக நாம் பெற்றிருக்க வேண்டியதை பெரும்பாலும் நாம் பெறத்தவறுவதற்கு நம் சந்தேக மனப்பான்மையும் மந்தநிலையும்தான் காரணமாக இருக்கின்றன. நம்மால் இயன்றதைச் செய்ய நாம் ஆயத்தமாக செய்தால், தேவன் நமக்காகக் கிரியை செய்வார். 3SW, March 15, 1904TamChS 223.2