Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    விளைவுகளை தேவனிடம் விட்டுவிடுங்கள்

    உணர்வற்றதும் சுயநலமிக்கதும் உலகப்பிரகாரமான இதயத்திலே நல்ல விதை சிலகாலம் வெறுமனே புதைந்து கிடக்கலாம்; ஆனால் பிறகு, தேவ ஆவியானவர் ஆத்துமாவில் சுவாசத்தை ஊதும்போது,புதைந்திருக்கிற விதை முளைத்தெழும்பி, இறுதியில் தேவமகிமைக்காகக் கனி கொடுக்கும். இதுவா, அதுவா எந்த விதை செழித்து வளரும் என்பதை நமது ஊழியத்தில் நாம் அறிய இயலாது; இது நாம் தீர்வுகாண வேண்டிய கேள்வியும் அல்ல. நாம் நமது வேலையைச் செய்து, விளைவை தேவனிடத்தில் விட்டுவிட வேண்டும். காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே.’ ‘பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் ஒழிவதில்லை.’ இவை தேவனுடைய மகத்தான உடன்படிக்கை. இந்த வாக்குறுதியை நம்பியே பயிரிடுகிறவர்கள் நிலத்தைப் பண்படுத்தியும் விதைத்தும் வருகிறார்கள். அதுபோன்றே நாமும், ஆவிக்குரிய விதைப்பில் நம்பிக்கை தளராமல் இருக்க வேண்டும். ‘அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்’ என்று அவர் உறுதியளித்திருப்பதை நம்ப வேண்டும். ‘அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுது கொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.” 1COL, 65TamChS 346.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents