Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    நிச்சயமான அழைப்பு

    வீடு வீடாகச் சென்று ஊழியம்செய்யவும், வேதஆராய்ச்சிக் கூட்டங்கள் நடத்தவும், ஆர்வமுள்ளவர்களோடு சேர்ந்து ஜெபிக்கவும் அநேகர் ஊழியக்களத்திற்கு அழைக்கப்படுவார்கள். 29T, 172TamChS 186.2

    வீடுவீடாகச் சென்று ஊழியம் செய்வது, குடும்பங்களில் வேத ஆராய்ச்சிக் கூட்டங்கள் நடத்துவது என அநேக ஊழியர்கள் தங் கள் பங்கைச் செய்யவேண்டும். 39T; 141 TamChS 186.3

    ஊழியத்திற்கென தங்களைப் பரிசுத்தப்படுத்தின பெண்கள் வீடு வீடாகச் சென்று வேத ஆராய்ச்சி நடத்துவதில் ஈடுபட வேண்டும். 49T, 120,121 TamChS 186.4

    கிறிஸ்துவின் காலடிகளை நாம் பின்பற்றினால், நம் ஊழியம் தேவைப்படுகிற மக்களை நெருங்கிச்செல்ல வேண்டும். வேதாகமம்பற்றிய அறிவைப் புகட்டி, தேவ பிரமாணத்தின் கோரிக்கைகளைச் சொல்லி, தயங்குகிறவர்களுக்கு அதன் வாக்குத்தத்தங்களை வாசித்து, அக்கறையற்றிப்போரை எழுப்பி விட்டு, பெலவீனரைப் பெலப்படுத்தவேண்டும். 5GW, 336 TamChS 186.5

    தேவன் தம் மக்களை எப்படிப்பட்ட ஊழியத்திற்கு அழைக்கிறார் என்பது பிலிப்பு மற்றும் எத்தியோப்பியனின் அனுபவத்தில் எடுத்துக்காட்டப்படுகிறது. தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அவர் அனுப்புகிற இடத்திற்குச் சென்ற பிலிப்பைப் போன்ற நற்செய்தியாளர்கள் தேவைப்படுகிற மக்கள் கூட்டம் பெரியது. அவர்களை அந்த எத்தியோப்பியன் சுட்டிக்காட்டுகிறான். வேத வசனங்களை வாசித்தும், அவற்றின் அர்த்தம்புரியாமல் இருக்கிற இப்படிப்பட்டவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்.தேவனைப்பற்றி அறிந்த ஆண்களும் பெண்களும் அந்த ஆத்துமாக்களுக்கு வேத வசனத்தை விளக்கிக்கூற வேண்டும். 68T, 58,59TamChS 186.6

    நம்முடைய சபையின் அங்கத்தினர்கள் வீடு வீடாகச் சென்று ஊழியம் செய்வதிலும், வேத ஆராய்ச்சிக்கூட்டங்கள் நடத்து வதிலும் அதிகமாக ஈடுபடவேண்டும். 19T, 127TamChS 186.7

    ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, மக்களுக்கு வேதாகமத்தை விளக்கிக் கூறுவார்களாக. 29T, 123TamChS 187.1

    கடுமையாக உழைக்கிற, வசதியான விவசாயிகள் குடியிருக்கிற மாகாணங்கள் பல உள்ளன. இக்காலத்திற்கான சத்தியத்தை அவர்கள் கேள்விப்படாதவர்களாக இருப்பார்கள். அத்தகைய இடங்களில் ஊழியம் செய்யவேண்டும். இவ்வகையான ஊழியத்தில் சுயாதீன ஊழியர்கள் இறங்குவார்களாக. புத்தகங்களைக் கொடுத்து, விற்று, பிரதிகளை விநியோகித்து, வேத ஆராய்ச்சிக் கூட்டங்கள் நடத்தி, தங்களைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் சுயாதீன ஊழியர்கள் அதிகமாகச் செய்யமுடியும். ஆத்துமாக்கள்மேலுள்ள அன்பால் நிறைந்து, அநேகர் மனமாறும்படி வல்லமையோடு செய்தியை அறிவிக்கலாம். 39T, 35TamChS 187.2

    நூற்றுக்கணக்கானோர் ஆயிரக்கணக்கானோர் பல குடும்பங்களைச் சந்தித்து, வேதவசனங்களை அவர்களுக்கு விளக்கிக்கூறினதைக் கண்டேன். பரிசுத்த ஆவியானவர் இருதயங்களை உணர்த்தினார். மெய்யான மனமாற்றத்தின் ஆவி வெளிப்பட்டது. 49T, 126TamChS 187.3

    இரண்டு வேதாகம ஊழியர்கள் ஒரு குடும்பத்தினருடைய வீட்டில் அமர்ந்திருந்தார்கள். தங்களுக்குமுன் வேதாகமத்தைத் திறந்துவைத்து, பாவத்தை மன்னிக்கிற இரட்சகரென ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எடுத்துக்கூறினார்கள். தேவனிடம் ஊக்கமாக வேண்டினார்கள். இருதயங்கள் மிருதுவாயின; தேவ ஆவியானவருடைய செல்வாக்கால் இளகின. புத்துணர்வோடும் வல்லமையோடும் ஜெபத்தை ஏறெடுத்தார்கள். வேத வசனத்தை அவர்கள் விளக்கினபோது, ஒரு மெல்லிய, பிரகாசமான வெளிச்சம் வேதவாக்கியங்களை பிரகாசிப்பித்ததைக் கண்டேன். உடனே நான் அமைதியான குரலில், “பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவாருங்கள்” என்று சொன்னேன். 59T, 35TamChS 187.4

    வேதவாக்கியங்களை வாசித்தும், அவற்றின் மெய்யான அர்த்தத்தைப் புரியமுடியாத அநேகர் இருக்கிறார்கள். பேராவலுடன் பரலோகத்தை நோக்கிப்பார்க்கிற ஆண்களும் பெண்களும் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். வெளிச்சத்திற்காகவும் கிருபைக்காகவும் பரிசுத்த ஆவியானவருக்காகவும் ஏங்குகிற ஆத்துமாக்கள் ஜெபங்களையும் கோரிக்கைகளையும் கண்ணீரையும் வானத்திற்கு நேராக ஏறெடுக்கிறார்கள். அநேகர் ராஜ்யத்திற்கு சமீபமானவர்களாக, சேர்க்கப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். 1AA, 109TamChS 187.5

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents