Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆவிக்குரிய இயக்கங்களில் காணப்படுகிற எதிர் செல்வாக்கு

    இஸ்ரவேலின் பிரபுக்களிலும் அதிகாரிகளிலும் அநேகர் உண்மையோடு பணிசெய்ய வந்தார்கள்; ஆனால் தெக்கோவா பிரபுக்களில் ஒரு சிலர், ‘தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை.’ உண்மையோடு கட்டினவர்கள் வேதபுத்தகத்தில் மதிப்போடு குறிப்பிடப்படுகிற அதே வேளையில், சோம்பேறியான இந்தப் பணியாளர்கள்பற்றியும் அவமான மாகநினைவுகூரப்படுகிறது; பின்வரும் சந்ததியார் அனைவருக்கும் ஓர் எச்சரிப்பாக எழுதப்பட்டுள்ளது. 1SW, April 26, 1904TamChS 232.1

    தேவ நோக்கத்திற்கான ஒரு காரியத்தில், தங்களால் மறுப்பு ஏதும் சொல்லமுடியாத போதிலும், அதில் அக்கறை ஏதுமின்றி, அதற்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கமறுப்பவர்கள் எல்லாச் சபை இயக்கங்களிலும் காணப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள், உன்னதத்தில் பதிவு செய்யப்பட்டுவரும் ஒரு பதிவு குறித்து ஞாபகம் கொண்டால் நலமாயிருக்கும். அந்தப் பதிவுப்புத்தகத்தில் எதுவும் விடுபடப் போவதும் இல்லை; தவறு ஏற்படப்போவதும் இல்லை; அதிலிருந்துதான் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். தேவசேவையில், புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு தருணமும் அங்கேபதிவுசெய்யப்படும்; மேலும், அன்பாலும் விசுவாசத்தாலும் விளைந்த ஒவ்வொரு செயலும், அது எவ்வளவு சாதாரணமானதாக இருந்தாலும் நித்தியமாக அதில் பதிவுசெய்யப்படும். 2SW, April 5, 1904TamChS 232.2