Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அவரவருக்கான வேலையை நியமித்தல்

    மனம்மாறி விசுவாசிகளில் ஒருவராகச் சேர்க்கப்படுகிற ஒவ்வொருவருக்கும் அவருக்கென வேலையை நியமிக்க வேண்டும். எதுவானாலும், என்ன செய்யவேண்டியிருந்தாலும் இந்தப் போரட்டத்தில் ஈடுபட ஒவ்வொருவரும் ஆயத்தமாக இருக்கவேண்டும். 57T, 30TamChS 102.4

    ஏராளமான நிறுவனங்களும், பெரிய கட்டடங்களும், பார்வைக்கு பகட்டான தோற்றமும் இருக்கவேண்டுமென தேவன் எதிர்பார்க்கவில்லை. மாறாக, தேவன் தெரிந்துகொண்ட மதிப்பு மிக்க, விசேஷித்த மக்களாக இசைந்து செயல்படுவதை விரும்புகிறார். ஒவ்வொருவரும் தங்கள் தகுதிக்கும் தருணத்திற்கும் ஏற்றவராக வாழ்ந்து, தேவ ஆவியானவருக்கு இசைவாகச் சிந்திக்க வேண்டும்; பேச வேண்டும்; செயல்பட வேண்டும். அப்போதுதான் ஊழியமானது எந்த முரண்பாடுமின்றி, முழுமையாக நிறைவேறும்; இல்லையேல், அது நடக்கும் வரைக்கும் நிறைவேறாது. 16T, 293 TamChS 103.1

    இராணுவத்தின் பெலமானது சிப்பாய்களின் செயல்திறனை வைத்துதான் அளவிடப்படும். ஒவ்வொரு சிப்பாயும் சிறப்பாகப் பணியாற்றுவதற்கு பயிற்சியளிக்குமாறு தன் அதிகாரிகளிடம் ஞானமுள்ள தளபதி கேட்டுக்கொள்வார். அனைவரையும் செயல் திறன் மிக்கவர்களாக மேம்படுத்த முயல்வார். தன் அதிகாரிகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தால், வெற்றிகரமான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளவே முடியாது. தன் படையிலுள்ள ஒவ்வொரு சிப்பாயும் உண்மையோடு, களைப்பில்லாமல் உழைக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்ப்பார். வெற்றிக்கான பொறுப்பு பொதுவாக சிப்பாய்களின் வேலையில்தான் இருக்கிறது. 29T, 116 TamChS 103.2

    சுவிசேஷப் பணிக்கு எஜமான் அழைக்கிறார். யார் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள்? படையில் சேருகிற அனைவரையும் தளபதிகளாகவோ, துணைத்தளபதிகளாகவோ நியமிக்கமுடியாது. கடினமான வேறு பணிகளும் உள்ளன. சிலர் பதுங்கு குழிகளைத் தோண்டவேண்டும்; கோட்டைகளைக் கட்ட வேண்டும்; வேறு சிலர் காவல்காக்க வேண்டும்; சிலர் செய்தி கொண்டுசெல்ல வேண்டும். இராணுவத்தில் அதிகாரிகள் சிலர்தான் இருப்பார்கள்; அணிவகுத்துச் செல்லும் வீரர்கள்தாம் அதிகம் இருப்பார்கள். ஆனாலும், ஒவ்வொரு வீரனும் உண்மையாக இருப்பதை வைத்தே வெற்றி இருக்கிறது. ஒரு கோழையோ துரோகியோ இருந்தால்கூட, அது ஒட்டுமொத்த படைக்கும் பேரழிவாக அமையும். 3GW, 84,85TamChS 103.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents