Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மெய்யான மிஷனரி ஆவி

    நமக்கு மெய்யான மிஷனரி ஆவி வேண்டுமானால் நாம் கிறிஸ்துவின் அன்பில் ஊறியிருக்க வேண்டும். நாம் நமது விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாய் இருக்கிறவரை நோக்கிப் பார்த்து அவருடைய குணத்தைப் படிக்கவும், சாந்தமும் மனத் தாழ்மையுமுள்ள அவருடைய ஆவியை விருத்தி செய்து அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கவும் வேண்டும்.LST 169.2

    மிஷனரி ஆவியும், மிஷனரி வேலைக்கென்று லாயக்காகிறதும் போதகர்கள் மேலும் சபையிலுள்ள சில அங்கத்தினர் மேலும் அருளப்படுகிற ஓர் விசேஷ வரம் அல்லது ஈவேன்றும் மற்றவர்களெல்லாம் அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியவர்கள் தானென்றும் அநேகர் நினைக்கிறார்கள். அப்படி நினைப்பதைப் போலொத்த தப்பிதம் வேறொன்றுமில்லை. மெய்க் கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் உண்மையான மிஷனரி ஆவியுடையவனா யிருக்கக் கூடும்; ஏனெனில் ஓர் கிறிஸ்தவன் கிறிஸ்துவைப் போலிருக்க வேண்டும். ஒரு மனுஷனும் தனக்கென்று ஜீவிக்கிறதில்லை, மேலும் “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.”LST 169.3

    இனி வரும் உலகத்தின் சக்திகளை ருசித்துள்ள ஒவ்வொருவனும், அவன் வாலிபனாகவோ வயோதிகனாகவோ கற்றவனாகவோ, கல்லாதவனாகவோ, எப்படி யிருந்தாலும் சரி, கிறிஸ்துவை நடத்தின ஆவியினால் ஏவி எழுப்பபடுவான். மற்றவர்களையும் இரட்சகரண்டை கொண்டுவர வேண்டும் என்னும் ஆசையே புதிதாக்கப் படுகின்ற இருதயத்தில் உண்டாகும் முதல் ஆசை. இவ்வாசை இல்லதிருப்போர் தங்கள் ஆதி அன்பை இழந்துவிட்டார்கள் என்று காட்டுகிறார்க; அவர்கள் தங்கள் சொந்த இருதயங்களை தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் கருத்தாய்ச் சோதித்து கிறிஸ்துவின் ஆவியின் புதிய ஸ்நானத்திற்காக ஊக்கமாய்த் தேட வேண்டும். மகிமையின் ராஜ்யங்களை விட்டுவிட்டு, கெட்டுப்போனவர்களை இரட்சிக்குபடி தவறிப்போன ஓர் உலகத்திற்கு வந்த விஷயத்தில் நமக்காக இயேசு காண்பித்த அவ்வதிசய அன்பை அவர்கள் ஆழ்ந்து சிந்தித்தறிந்து கொள்ள ஜெபிக்க வேண்டும். -----5T 385-6.LST 170.1