Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இருப்பது மூன்றாம் அத்தியாயம்—மெய்யரும் பொய்யருமான தீர்க்கதரிசிகள்

    தேவனால் போதிக்கபட்டிருப்பதாய்ப் பொய் சொல்லும் மனிதரின் வேலையினால் ஏற்பட்டிருக்கிற மதாபிமானத்தினிமிதம் அனேக நல்ல ஜெனங்கள் தேவன் வெளிப்படுத்தியிருக்கும் காரியங்களை யுங் ஜீவியமும் உபதேசங்களும் கூட சந்தேகிக்கிறார்கள் அல்லது விசுவாசிக்கிறதில்லை. ஆனால் சத்தியம் இன்னதென்று விசாரித்தரிகிற ஒருவன் கள்ள தீர்க்கதரிசிகள் அல்லது போதகர்களால் ஏற்படும் வஞ்சகத்தை ஜாக்கிரதையாய்க் கவனித்தறிந்து கொள்வதுடன் சத்தியத்தை அறிந்து கொள்ள தவறிவிடக் கூடாது. “தீர்க்க தரிசன்களை அற்பமாய் எண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று அப்போஸ்தலன் எழுதினார். 1 தெச. 5:20,21LST 105.4

    இக்கட்டளைக்கு கிசைவாய் கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகள் இக்காலதிலுள்ள அட்வெந்து இயக்கத்திலே தேவ நடத்துதல் உண்டென்பதையும், இவ்வியக்கத்தின் சம்பந்தமாய் அருளப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன வரத்தின் வெளிப்படுத்தலையும் பற்றிய அத்தாட்சிகளைக் கருத்தாய்ச் சிந்திக்கும்படி ஏவப்படுகிறார்கள். இவ்வரத்தின் மூலமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பரிசுத்த ஆவியின் வேலையை அவமதிப்பது மோசகரமானது. என்றாலும் “கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலை போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” என்று நாம் எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்பதே அவர்களைப் பரீட்சிக்கிர உரைகள்.LST 106.1

    ஓர் வஞ்சகனிடமிருந்து துப்புரவான சத்தியத்தையும் பரிசுத்தமாக்கும் வல்லமையையும் காணக்ஊடுமானால் மனிதர் “முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும் முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையும்” பறிக்கக்கூடுமென்று எதிர் பார்க்கலாமே! “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டது. கெட்ட மரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டது ..... ஆதலால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” மத் 7:15-20LST 106.2

    தமது கலியாணத்திற்குப் பின் மிஸிஸ் ஈ.ஜி . உவைட் என்றழைக்கப்பட்ட எலன்.ஜி.ஹார்மன் அம்மாளின் கடுமையான உழைப்பின் காலங்கள் எல்லாம் எழுபது ஆண்டுகள் ; அதில் அறுபது ஆண்டுகள் அமெரிக்காவிலும் பத்து ஆண்டுகள் ஐரோப்பாவிலும் ஆஸ்துரேயாவிலும் கழிந்தன.இந்த நீண்டகாலத்தில் அந்த அம்மாளுக்கு அநேக வெளிப்படுதல்கள் அருளப்பட்டன; பரத்திலிருந்து பெற்றதாக அவர் நம்பி சபையின் போதனைக்காக அவைகளை எழுதும்படி உண்மையாய்ப் பிரயாசப்பட்டார் .LST 106.3

    அவர் எழுதிய நூல்கள் அநேகம் பிரசுரிக்கப்பட்டு உலகமெங்கும் பிரசித்தம் செய்யப்பட்டிருக்கின்றன. இப்பூமியின் சரித்திர முடிவை அடுத்து ஜீவிகிறோம் என்று வேதாக்கியங்களினால் உணர்த்தப்பட்ட அநேக ஜனங்கள் தேவன் உலைட் அம்மாளை ஓர் கருவியாகக் கொண்டு அவர் மூலமாய் தீர்க்க தரிசன ஆவியினால் தமது ஜீவியமும் உபதேசங்களும் மீதியான சபைக்கும் பேசினாரென்று நம்பும்படி நடத்தப்பட்டார்கள். அப்படிப்பட்ட ஓர் நம்பிக்கை நிச்சயமாய் பார்வையிடப்படுவதற்குப் பாத்திரமாயிருக்கிறது. அவருடைய வேலையின் தன்மை அவரின் சொந்த ஜீவியத்தினாலும் அவருடைய உபதேசங்களினாலும், அவர் பெற்ற வெளிப்படுத்துதல்களின் தன்மையினாலும் நிதானிக்கப்பட வேண்டும்.LST 106.4

    மிஸிஸ். உவைட் தமது வேலையும் உபதேசங்களும் பரிசுத்த தேவ வாக்கியங்களில் வெளிப்படுத்தப் பட்டிருக்கிற தேவ வார்த்தையின் திட்டத்தினால் சோதிக்கப்படும்படி எப்பொழுதும் விரும்பினார்கள். “சாட்சிமொழிகள் அவைகளின் கனிகளினாலே நிதானிக்கப்படட்டும்” என்று அவர் எழுதினார். “அவ்உபதேசங்கள் என்ன ஆவியுடையவைகளாக யிருக்கிறது? அவைகளினால் விளைந்திருக்கிற பயன் யாது? தேவன் தமது சபைக்குப் போதித்து, அவர்களுடைய தப்பிதங்களைக் கண்டித்து, அவர்களுடைய விசுவாசத்தை பெலப்படுதிகிறார் அல்லது அவர் அப்படி செய்யவில்லை. இவ்வேலை தெய்வச் செயலானது , அல்லது அது அப்படியல்ல .தேவன் சாத்தானோடு சேர்ந்து யாதொன்றும் செய்கிறதில்லை. என் வேலை தேவ முத்திரையின் அடையாளத்தைப் பெற்றிருக்கிறது அல்லது சத்துருவின் முத்திரையுடையாதிருக்கிறது LST 107.1

    “கர்த்தர் தம்மை தீர்க்கத் தரிசன ஆவியின் மூலமாய் வெளிப்படுத்தின போது நடந்ததும், நடக்கிறதும், நடப்பதும் என் முன் கடந்து போயின. நான் ஒரு போதும் பாத்திராத முகங்கள் எனக்குக் காண்பிக்கப்பட்டன, அநேக ஆண்டுகளுக்குப்பின் நான் அவர்களைக் கண்டப்போது அவர்களை அறிந்து கொண்டேன். முன்னதாக என் மனதிற்குக் காட்டப்பட்ட விஷயங்களைப் பற்றிய தெளிவான கருத்துக்களினால் நான் என் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டிருக்கிறேன்; தேசங்களுக்கு கடந்து சென்றிருக்கும் கடிதங்களை நடு ராத்திரியில் எழுதியிருக்கிறேன். அநேக ஆண்டுகளாக இதுவே என் வேலை. நான் சிந்தையிலும் எண்ணியிராத தப்பிதங்களைக் கண்டித் துணர்தும்படி ஓர் வல்லமை என்னைத் தூண்டியிருக்கிறது. இவ்வேலை பரத்திலிருந்துள்ளதா அல்லது தாழ்விலிருந்துள்ளதா? உண்மையாகவே சத்தியத்தை அறிய விரும்புகிறவர்கள் விசுவாசிக்கிறததற்குப் போதுமான அத்தாட்சியைக் காணலாம்.”LST 107.2