Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  நூன்முகம்

  இந்தியத் தமிழ் மக்களின் பிரயோஜனத்திற்கென்று இச்சிறு புஸ்தகத்தில் சிறந்த ஓர் மாதின் ஜீவியச் சரித்திரச் சுருக்கம் வெளியிடும் சிரமம் எடுக்கப்பட்டிருக்கின்றது. மார்க்க சம்பந்தமாய் அம்மாது எழுதிய பல நூல்கள் பற்பல மொழிகளில் திருப்பப்பட்டு உலகில் அனேக தேசங்களில் வாசிக்கப்பட்டு வருகின்றன. பதினேழு பிராயத்திலேயே பகிரங்க பணிவிடை செய்வதற்குக் கிடைத்த அழைப்பைக் குறித்தும், பாலியத்தில் அந்த அம்மாள் அடைந்த அபூர்வமானதோர் மார்க்க அனுபோகத்தைக் குறித்தும் எளிய நடையில் இச்சரிதை எழுதப்பட்டிருக்கின்றது. அன்றியும் அவர் செய்த கிறிஸ்தவ பணிவிடையின் ஆச்சரிய வரலாறுடன் அவர் எழுதிய இதர நூல்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில வியாசங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.LST i.1

  சுமார் ஓர் நூற்றாண்டுக்கு முன் ஐக்கிய மாகாணத்திலுள்ள கிறிஸ்தவ சபையை மாத்திரமல்லாமல், மற்றும் பல நாடுகளிலுள்ள சபைகளையும் கிளர்ச்சியடையச் செய்ததோர் பெரிய மார்க்க இயக்கத்தில் உவைட் அம்மாளின் ஆரம்ப மார்க்க சம்பந்தமான முன்னனு போகங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. உத்தேசம் 1844-ல் இயேசு கிறிஸ்து இரண்டாம் தரம் இப்பூமிக்குத் திரும்பி வந்து உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களுடன் மரித்த நீதிமான்களை உயிர்ப்பித்து பரலோகம் கூட்டிக்கொண்டு போவரென்று உலகின் பற்பல பாகங்களிலுள்ள வேத காமாஹ் தீர்க்கதரிசன மாணாக்கர் அநேகர் நம்பும்படி ஏவப்பட்டனர். அவர்களுடைய பிரசங்கத்தின் பயனாகப் பலரும் அதே அபிப்ராயத்தைக் கொண்டனர். பின்னர் ஆயிரக் கணக்கான அட்வெந்திஸ்தர் தங்கள் கொண்டிருந்த நம்பிக்கை தவறிப் போனதனிமித்தம் ஆச பங்கமும் தத்தளிப்பும் அடைந்தனர். அதில் எலன் ஹார்மன் எனப்பட்ட உவைட் அம்மாளும் ஒருவர்.LST i.2

  இப்பெரும் ஆசாபங்கம் நிகழ்ந்த சில வாரங்களுக்குப் பின் அம்மாது ஓர் அனுபோக மடைந்தார். ஜெபத்தில் தரித்திருக்கையில் அவர் மெய் மறந்து நிற்க அவருக்கு அட்வெந்திஸ் தருடைய பிற்கால அனுபோகங்களைக் குறித்துக் காட்சியளிக்கப்பட்டது. அவருடைய முதல் சிறிய புஸ்தகத்தில் கண்டுள்ளபடியே அக்காட்சி இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றது. அட்வெந்திஸ்தரான விசுவாசிகள் பலருக்கு இக்காட்சி தைரியம் கொடுக்கத்தக்கதாயிருந்தது. ஏனெனில் அவர்கள் ஆசாபங்கம் அடைந்த போதிலும் தேவகரம் அவர்களை நடத்தினதென்றும் அவர்கள் இயேசு கிறிஸ்துவையே இன்னும் தங்கள் தலைவராகப் பின்பற்றிச் செல்வார்க ளாகில், அப்பறமா வீடு வேகு தூரமாயிருப்பதாய் அவர்களுக்குத் தோன்றினாலும் அதில் பிரவேசிக்கும் சிலாக்கியம் அவர்களுக்குக் கிடைக்குமென்பதாய் அது அவர்களைத் தைரியப்படுத்தினது.LST i.3

  இன்னும் பல காட்சிகள் அளிக்கப்பட்டு, அதில் தமக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளை மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி அவருக்குக் கட்டளையிடப்பட்டது. அசௌக்கியத்தினாலும் அடக்கத்தினாலும், கூச்சத்தினாலும் தமது அற்பமானக் கல்வியைக் கொண்டும், இக்கட்டளையை எங்கனம் நிறைவேற்றுவதென்பதாய் அவர் திகைத்திருந்தார். ஆகிலும் அவர் தமது பயத்தையும், கோழைத்தனத்தையும் மேற்கொண்டு தைரியத்துடன் முற்பட்டார். அவருடைய செய்திகள் எல்லாம் மறுத்துப் பேசக்கூடத அளவு வல்லமையுடனிருந்த படியால், அவைகளை நேரில் கேட்ட பலர் சீக்கிரத்தில் அவர் உண்மையாகவே பரம வெளிச்சத்தைத் தங்களுக்குக் கொண்டு வந்தார் என நிச்சயங் கொண்டனர்.LST ii.1

  தெளிவும் பொருத்தமுமுள்ள அத்திய உபதேசத்தைக் கண்டடைய வேதகாமத்தை ஜெபத்துடனும் கருத்துடனும் ஆராய்ச்சி செய்த ஊக்கமுள்ள அட்வெந்திஸ்தரான ஒரு சிறு கூட்டத்தில் அவர் ஒருவரானார். அவர்கள் எப்படி தங்கள் கொள்கைகளைப் பரிசோதனை செய்து வேதகாமத்துக்கு இசைந்திராத கொள்கைகளையெல்லாம் தள்ளிவிட்டார்கள் என்பதையும், எப்படி ஆராய்ச்சி செய்தார்கள் என்பதையும் எப்படி அவருக்கு அளிக்கப்பட வெளிப்படுத்தல்கள் அவர்களை விசுவாசத்தின் ஐக்கியத்திற்கும் நடக்கைக்கும் கொண்டு வருவதில் நேரே பயன்பட்டனவென்பதையும் குறித்து அவர் எழுதிய விவரம் பின் வரும் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.LST ii.2

  1846-ல் அம்மாது எல்டர் ஜேம்ஸ் உவைட்டை மனம் புரிந்த பிறகு தங்களுடைய வேத ஆராய்ச்சியின் மூலமாயும், அவர்களுக்கு அருளப்பட்ட விசேஷ தெய்வீக வெளிப்படுத்தல்கள் மூலமாயும், தங்களுக்குப் பரத்திலிருந்து கிடைக்கப் பெற்றதாய் அவர்கள் நம்பிய ஆட்தூதைப் பரவச் செய்வதற்கு அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தங்கள் முழு நேரத்தையும் பெலத் தையும் செலவிட்டார்கள். அவர்கள் பிரயாசங்களில் காணப்பட்ட பெரிய வெறுமையின் போராட்டத்தைக் குறித்தும், தற்தியாகம பக்தி எவ்வளவு பெரியதென்பதைக் குறித்தும், வாசிப்போர் சிறிதளவு அறிந்து கொள்ளுவார்கள்.LST ii.3

  ஆரம்பத்தில் வேலை துவக்கினவர்களில் ஒருவராகவும் பிறகு உத்தியோக பதவி இல்லாவிடினும் ஓர் சிரேஷ்ட தலைவராகவும், உவைட் அம்மாள் தனது நீண்ட ஜீவகால முழுவதும் ஏழாம் நாள் அட்வெந்திஸ்தரின் வேலையை ஆரம்பித்து அதை ஸ்திரப் படுத்துவதில் பலத்த கிரியை செய்தார். அதின் அற்பமான ஆரம்பத்திலிருந்து அது உலகெங்கும் பரவினதை அவர் கண்டார். இவ்வியக்கம் வெகு விரைவில் மிக்க விஸ்தாரமாய் வளர்ந்து சென்றனிமித்தம் இச்சிறந்த மாதின் தன்மையைக் குறித்து பலர் மனதில் ஆழ்ந்த கவனம் எழும்பிற்று. அவரின் சுத்தமான தேவ பக்தியுள்ள ஜீவியத்திற்கும், ஞானமுள்ள ஆலோசனைக்கும் பரோபகார சிந்திக்கும் சோர்வடையா ஊக்கத்திற்கும், அவர் எழுதிய ஆவிக்குரிய பல புத்தகங்களுக்கும் ஏற்றவாறு அவர் நியாயமாய்க் கண்ணியப் படுத்தப்படுகிறார்.LST ii.4

  1865-ல் உவைட் அம்மாள் சொன்ன ஆலோசனையின் மேல் அறவே மருந்துச் சரக்குகளின் உதவியின்றி ஜலாதார முறையையும், இன்னும் சில இயற்கைப் பரிகாரங்களையும் மாத்திரம் கையாடிச் சுகப்படுத்தும் “ஆரோக்கிய ஸ்தாபன”மொன்று ஸ்தாபகமாயிற்று. அற்பமான இவ்வாரம்பத்திலிருந்து பிரபலமான பாற்றில் கிரீக் சுகாதார மாளிகையும் பின்னும் உலகின் பற்பல பாகங்களில் ஏற்பட்ட பல சிறிய சுகாதார மாளிகைகளும் ஸ்திரம் பெற்று விளங்கின, இந்த ஸ்தாபனங்களில் உவைட் அம்மாள் புத்தகங்களில் வெளியிட்டிருக்கும் சுகாதார நெறிகள் கையாடப் படுகின்றன.LST iii.1

  தொல்லைகளினின்று மீண்டேற முடியாதென்று தோன்றினதோர் சமயத்தில் உவைட் அம்மாள் சொன்ன தைரியத்தைக் கொண்டு கலிபோர்னியாவிலிருக்கும் லோமாலிண்டாவில் சுகாதார மாளிகைக்காக ஓர் சொத்தைக் கிரயத்துக்குக் கொண்டு, அது சம்பந்தமாய் உலகின் சகல் பாகங்களிலும் போய்த் தன்னயமற்ற பணிவிடை செய்யும் வைத்திய மிஷனரிகளை சகல வைத்திய முறைகளிலும் பயிற்றுவிக்கக் கூடியதோர் வைத்தியசாலையை ஸ்தாபித்து நடத்தும் படிக்கன பிரம்மாண்ட வேலை முயலப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் எலன் ஜி. உவைட் மெமோரியல் ஆஸ்பத்திரி சம்பந்தமாய் அந்நகரிலேயே வைத்தியசாலை ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.LST iii.2

  சுமார் 1872-ல் உவைட் அம்மாள் கல்வி விஷயமாய் எழுதும் பொது , சரீரம், மனம் ஆத்மீகத் தத்துவங்களைச் சரிசமமாய்ப் பெலபடுத்தக் கூடியட்து தேவ வசனத்தின் மேல் விசுவாசத்தை ஸ்திரப்படுத்தக் கூடியதுமான கல்வியொழுங்கைக் குறித்து வற்புறுத்தினார். இன்று உலகின் பல பாகங்களிலுமுள்ள ஆயிரக்கணக்கான இளைஞரும் வாலிபரும் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள். அவர்களுடைய உபாத்திமார் அவர் வெளியிட்டிருக்கும் சகல கல்வி முறைகளின் படியே அவர்களைப் படிப்பிக்கிறார்கள்.LST iii.3

  சுகாதார விஷயமானதும் கல்வி சம்பந்தமானதுமான இந்த ஸ்தாபனங்கள் எல்லாம், இன்று உவைட் அம்மாள் வேலைப்பாட்டின் ஞாபகச் சின்னங்களாய் நிற்கின்றன. ஆகிலும் இவை யாவற்றிற்கும் மேலாக, அவருடைய வாய் மொழி, நிருபா சாட்சிகள் மூலமாய் அனேக ஆத்துமாக்கள் மீட்பரண்டை சேருவதற்கான தங்கள் வழியைக் கண்டடையும்படித் தூண்டப்பட்டிருப்பதையும், அவர்களுடைய ஜீவியங்கள் மாருதலடைந்திருப்பதையும். அவிசுவாசமும், சந்தேகமும் பஐத்த இந்நாட்களில் அவர்கள் காணுவதற்கரிதான பெரிய நம்பிக்கை உடையவர்களாய் இருப்பதையும் நாம் அறிவோம்.LST iii.4

  அவருடைய வேலையின் ஓர் பாகம் அவருக்கு அவ்வளவு இன்பகரமானதாய் இருக்கவில்ல என்பதும் சொல்லப்பட வேண்டும், சகோதரரைத் தனித்தனியே கடிந்து கொள்ளும் தூது மொழிகள் அடிக்கடி அவருக்கு அளிக்கப்பட்டன. அநேகத் தடவைகளில் இத்தூது மொழிகள் நன்றியறிதலுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு நன்மையாய் முடிந்தன. சில சமயங்களில் இத்தூது மொழிகளைப் பெற்றவர்களுக்கு அவைகள் இன்பமாய்க் காணப்படாததினால் அவர்கள் தங்கள் நடைகளைச் சீர்படுத்திக்கொள்ள மனமற்றவர்களானர்கள். அப்படிப்பட்டவர்கள் அத்தூதை மாத்திரமல்ல, அதைக் கொடுத்த ஆளையும் எதிர்த்து நிற்கும்படி ஏவப்படுவது இயல்பே, அவருடைய வேலையை அற்பமாய் எண்ணவும் பரிகாசம் பண்ணவும் கூடிய எதிரிகளும், சத்துருக்களும் ஏற்படுவது நூதனமென ஒருவரும் எண்ணாதிருப்பாராக. “அப்படியே” மனிதர் எப்பொழுதும் “தீர்க்கதரிசிகளை துன்பப்படுத்தினார்கள்.”LST iii.5

  தீர்க்கதரிசன வரத்தைக் குறித்து சரித்திரத்தின் மூலமாயும் வேதகாமத்தின் மூலமாயும் ஆராய்ச்சி செய்யவேண்டுமென்றாலும், அதன் வெளிப்படுத்தல்கள் நமது காலத்தில் நியாயமாய் எதிர்க்கப்படலாம் என்பதற்கு அத்தாட்சி வேண்டுமென்றாலும், “தீர்க்கதரிசன வரம்” என்னும் அத்தியாயத்தை வாசிப்போர் கவனிக்கவும். “மெய்யரும் பொய்யருமான தீர்க்கதரிசிகள்” என்னும் இன்னோர் அத்தியாயத்தில் தீர்கதரிசன வரத்திற்குரிய சகல உரிமைகளின் யதார்த்தத்தையும் எவரும் பரிசோதனை செய்துகொள்ளக் கூடிய வழிகள் எடுத்துரைக்கப்பட்டும் உவைட் அம்மாளின் உரிமை தேவனுடைய தவறாத வார்த்தையைக் கொண்டு பரிட்சிக்கப்பட்டு மிருக்கின்றன.LST 1.1

  சுருங்கக் கூறவேண்டியதனிமித்தம் உவைட் அம்மாள் எழுதிய சரித்திரச் சுருக்கத்துடன் இணைப்பாயுள்ள உட் பிரிவுகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன் வாக்கியத்தில் குறிப்பிட்டுள்ள கருகலான பொருளைத் தெளிவாக்கும் பொருட்டு சில குறிப்புகளுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய புத்தகங்களுக்குப் பாதுகாவலராய் எற்பட்டிருப்போர் இவைகளை எல்லாம் கூடுதளைச் சேர்த்திருக்கின்றனர்.LST 1.2

  சிற்சில சந்தர்ப்பங்களில் சுருங்கக் கூரவேண்டியதனிமித்தம் நீண்ட அத்தியாயங்கள் சுருக்கப் பட்டிருக்கின்றன.LST 1.3

  “ஜீவிய சரித்திரச் சுருக்கங்கள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் ஜீவிய சரித்திர சம்பந்தமான விஷயங்களைத் தவிர மற்றவைகளில் இது குறிப்பிடப்பட்டிருக்கின்றது.LST 1.4