Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் அடுத்த ஊழியம்

    புத்தக வேலையாட்கள் நோயாளிகளுக்குச் செய்யும் சிகிட்சை விஷயமாய் போதனை கொடுக்கத்தக்கவர்களாயிருக்க வேண்டும். அற்பமான சுகாதார சிகிட்சை முறைகளை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்விதம் அவர்கள் சஞ்சலப்படுகிறவர்களின் ஆத்துமாக்களுக்கும் சரீரங்களுக்கும் ஊழியஞ் செய்யக்கூடிய வைத்திய மிஷனரிகளாக வேலை செய்யலாம். இவ் வேலை தற்போது உலகத்தின் சகல பாகங்களிலும் ஊக்கமாய் நடைபெற வேண்டும். இவ்விதம் திரளான ஜனங்கள் தேவ தொண்டர்களின் ஜெபங்களினாலும் போதனையினாலும் ஆசீர்வதிக்கப்படலாம்.LST 234.2

    புத்தக வேலையாள் ஜனங்களை அவர்களுடைய வீடுகளில் சந்திக்கிறபோது, அவனுக்கு அடிக்கடி வேதாகமத்திலிருந்தோ அல்லது சத்தியத்தைப் போதிக்கிற மற்ற புத்தகத்திலிருந்தோ அவர்களுக்கு வாசித்துக் காட்டக்கூடிய சமயம் கிடைக்கலாம். சத்திய ஆராய்ச்சி யுடையவர்கள் இன்னாரென்று அவனுக்குப் புலப்படுகிற போது, அவன் அவர்களுக்கு வேத வாசகங்கள் கொடுக்கலாம். இந்த வேத வாசகங்களே ஜனங்களுக்கு அவசியமானவை. அழிந்து போகிற ஆத்துமாக்கள் பேரில் இவ் விதம் மிகுந்த உற்சாகம் கண்பிக்கிறவர்களை தேவன் தமது ஊழியத்தில் உபயோகிப்பார். அவர்கள் மூலமாய் போதனையை அடைய ஆயத்தமாயிருப்போருக்கு அவர் வெளிச்சம் அருளுவார்.LST 234.3

    ஆண்டவர் உங்களை ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாயிருக்க விரும்புகிறார்; ஆகையினால் நீங்கள் கொள்கை விஷயங்களை ஜனங்களுக்கு வற்புறுத்தக் கூடாதென்கிலும், “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குரித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் (பயத்தோடும்) உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.”(1 பேது. 3:15) ஏன் பயம்?--- உங்கள் வார்த்தைகள் சுய மேன்மையின் வாசனையுள்ளவைகளா யிராதபடிக்கு, ஆலோசனைக் குறைவான வார்த்தைகள் பேசாத படிக்கு, வார்த்தைகளும் நடக்கையும் கிறிஸ்துவின் சாயலுக்கு விரோதமாயிராதபடிக்கு பயப்பட வேண்டாம். கிறிஸ்துவுடன் உறுதியாய்ச் சேர்ந்திருந்து அவரிலுள்ளபடியே சத்தியத்தைக் காண்பி. பாவ நிவாரண கறையினால் இருதயங்கள் தொடப்படாமலிருப்பது அசாத்தியம். நீ கிறிஸ்துவின் சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொள்ளும் போது நீ ஜனங்களுக்குச் சொல்ல வேண்டியதின்னதென்று அறிவாய்; ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் நீ பேசவேண்டிய வார்த்தைகளை உனக்குச் சொல்லுவார். பரிசுத்த ஆவியின் ஆளுகைக்குட்பட்ட இருதயத்தை வைத்துக் கொள்வதின் அவசியத்தை உணருகிறவர்கள் நித்திய ஜீவனுக்கேதுவாக முளைத்தெழும்பத்தக்க விதையை விதைக்கும்படி பலப்படுத்தப்படுவார்கள். இது சுவிசேஷ புத்தக வேலையாளின் வேலை.---6 T 321-5.LST 234.4

    * * * * *

    பரலோகத்திலிருந்து மிகுந்த வல்லமையோடு வந்து தன மகிமையினால் பூமியைப் பிரகாசிப்பிக்கிற அந்த வேறொரு தூதனுடைய வேலை பேரளவில் நமது பிரசுர ஆலயங்கள் மூலமாய் நடந்தாக வேண்டும்.---7 T 140.LST 235.1

    * * * * *

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents