Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆசாபங்கம்

    ஆனால் எதிர்பார்த்த நேரம் கடந்தது. இயேசு வானத்தின் மேகங்கள் மீது வருவாரென நம்பி விசுவாசித்தோருக்கு வந்த முதல் கடும் பரீட்சை இதுவே. காத்திருந்த தேவனுடைய ஜனங்களின் ஏமாறுதல் பெரிது, பரியாசகக்காரர் வெற்றியடைந்ததுமன்றி, பெதைகளையும் தைரியமற்றவர்களையும் தங்கள் பக்கம் ஆதாயப் படுத்திக் கொண்டார்கள். உண்மையான விசுவாசமுள்ளவர்களாய்க் காணப்பட்டவர்களில் சிலர் இப்பொழுது காலம் கடந்து போனதும், அவர்கள் மறுபடியும் பித்துப் பிடித்த மதாபிமானியுமான மில்லரின் உபதேசத்தினால் தங்கள் உண்மையாய் ஒருபோதும் ஏமாற்றப்படவில்லை என்று சொல்லிக் கொண்டு பரிகாசக்காரருடன் துணிகரமாய்ச் சேர்ந்து கொண்டார்கள்.LST 27.1

    நாங்கள் ஏமாற்றமடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த போதிலும் எங்கள் விசுவாசத்தை மறுதலிக்கவில்லை. இயேசு தமது வருகையை இன்னும் வெகு காலம் தாமதிக்கச் செய்யார் என்னும் நம்பிக்கை உள்ளவர்களாயேயிருந்தார்கள் இன்னும் அநேகர்; கர்த்தரின் வார்த்தை உறுதியானது; அது தவறாது. நங்கள் எங்கள் கடமையைச் செய்து விட்டோமென்றும் உணர்ந்தோம். நாங்கள் ஏமாற்றத்தினால் வருத்தப்பட்டோமேயொழிய அதைரியப்படவில்லை. எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்றென்பதாய்க் காலங்களின் அடையாளங்கள் குறிப்பிட்டன. எந்த நேரத்திலாகிலும் ஆண்டவர் வருவாரென்று நாம் விளித்து ஆயத்தமாயிருக்க வேண்டும். நமது வெளிச்சம் இருளடைந்த உலகில் பிரகாசிக்கும் பொருட்டு உபதேசமும், தைரியமும் வேண்டும். ஆறுதலடைவதற்கு நாம் ஒன்று கூடுவதை அசட்டை செய்யாமல் நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் காத்திருக்க வேண்டும்.LST 27.2

    ஏமாற்றமடைந்தவர்கள் வெகு காலம் இருளிலிருக்கும்படி விடப்படவில்லை. ஏனெனில் ஊக்கமான ஜெபத்துடன் தீர்க்கதரிசன காலங்களை ஆராய்ச்சி செய்கையில் தீர்க்கதரிசன காலங்களை ஆராய்ச்சி செய்கையில் தீர்க்கதரிசன எழுத்து மேலாக வரையப்பட்டிருந்த தாமதிப்பின் காலம் கவனிக்கப்படாமற் போன தப்பிதம் கண்டு பிடிக்கப்பட்டது. கிறிஸ்துவின் வருகையைப் பற்றிய ஆனந்த சந்தோஷத்தில் தரிசனம் தாமதிப்பது போற் காணப்பட்டதைக் கணக்கிடாமற் போனதினால் துக்கமும் எதிர்பாராத பிரமிப்பு முண்டா யிருந்தது. என்றாலும் இப்பரீட்சையினால் உண்மையுள்ள விசுவாசிகள் சத்தியத்தில் ஸ்திரப்படவும் பெலப்படவும் ஏதுவாயிற்று.LST 27.3