Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சபையினுள் வேலை

    புதிதாய்க் குணப்பட்டவர்களைத் தைரியப்படுத்தல்

    கண்ணிக்குள்ளகப் படுத்தவும், நயங்காட்டி மோசஞ் செய்யவும் தேடிக்கொண்டிருக்கிற சாத்தானின் வல்லமைகளோடு ஒவ்வொரு ஆத்துமாவும் புரிய வேண்டிய போரைப் பற்றி சகலரும் உணர்ந்திருந்தால் விசுவாசத்தில் இளமையாய் இருக்கிறவர்களுக்காக இன்னும் அதிக சுறுசுறுப்பான வேலை நடந்திருக்கும்.LST 171.3

    தங்கள் மட்டில் விடப்பட்ட இவ்வாத்துமாக்கள் அடிக்கடி சோதிக்கப்பட்டு அச் சோதனையின் தீங்கை அறியாதிருக்கிறார்கள். ஆலோசனையைத் தேடுவது தங்கள் சிலாக்கிய மாயிருக்கிறதென்பதை அவர்கள் உணர்வார்களாக. தங்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களின் சங்கத்தை அவர்கள் தேடட்டும். தேவனை நேசித்து, அவருக்குப் பயந்து நடப்போருடன் கூடியிருப்பதின் மூலமாய் அவர்கள் பெலனடைவார்கள்.LST 171.4

    இவ் வாத்துமாக்களோடு நாம் செய்யும் சம்பாஷனை ஆவிக்குரியதாயும் அவர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கத் தக்கதாயுமிருக்க வேண்டும். பெலவீனமும், சந்தேகமும் உள்ளவர்களாய்ப் போராடுகிறவர்களின் போராட்டங்களைக் கர்த்தர் கவனிக்கிறதுடன் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் உதவி செய்கிறார்.LST 171.5