Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வார்த்தையைப் புசித்தல்

    வான்காரமாகிய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுதல் என்பது கிறிஸ்துவையே ஏற்றுக் கொள்வதென்று கூறப்பட்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தை ஆத்துமாவினுள் ஏற்றுக் கொள்ளப் படுகிற பொது நாம் தேவ குமாரனுடைய மாமசத்திலும் இரத்தத்திலும் பங்கடைகிறோம். அது மனதைப் பிரகாசிப்பிக்கவோ, எழுதப்பட்ட வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்கு இன்னும் அதிகமாய் இருதயம் திறக்கப் படுகிறது. அதனால் நாம் வளரலாம். மனிதன் வார்த்தையை புசிக்கும்படி அழைக்கப் பட்டிருக்கிறான்; ஆனால் அவன் இருதயம் அவ்வார்த்தையின் பிரவேசத்திற்குத் திறக்கப்பட்டால் ஒழிய, அவன் இவ் வார்த்தையை பானம் பண்ணினலொழிய, அவன் தேவனால் போதிக்கப்பட்டால் ஒழிய அவ்வர்த்தையைப் பற்றித் தப்பிதமாய் பிரயோகிப்பன; தப்பிதமாய் அர்த்தப்படுவான்.LST 142.1

    புசிக்கும் போஜனத்தினால் சரீரத்தில் இரத்தம் உண்டாகிறது போல, அவருடைய மாம்சமும் இரத்தமுமாகிய தேவ வார்த்தையைப் புசிப்பதினால் கிறிஸ்து உள்ளே உண்டாகிறார். எவனொருவன் அவ்வார்த்தையைப் புசிக்கிரானோ அவனுக்குள் மகிமையின் நம்பிக்கையாகிய கிறிஸ்து உண்டாகப் பெறுகிறான். எழுதப்பட்ட வார்த்தை தேடுகிரவனுக்கு தேவ குமாரனுடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் காண்பிக்கிறது; அவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிவதினால் அவன் திவ்விய சுபாவத்திற்குப் பங்காளியாகிறான். போஜனம் ஒரே தரம் உட்கொள்ளப்படுவதினால் சரீரத்தின் அவசியம் பூர்த்தியாகதது போல தேவ வார்த்தையை ஓர் தடவை புசிப்பதினால் ஆவிக்குரிய அவசியங்களும் பூர்த்தியாகிறதில்லை.LST 142.2

    சரீர ஜீவன் இரத்தத்தில் இருக்கிறது போல ஆவிக்குரிய ஜீவன் கிறிஸ்துவின் இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தின் மூலமாய்க் கிடிக்கும். சரீரத்தில் நமது ஜீவன் இரத்தத்தில் இருக்கிறது போல அவர் நமது ஜீவனாயிருக்கிறார். முழு சரீரத்தில் ஓடும் இரத்த ஓட்டத்தினால் எலும்பும், நரம்பும், தசைநாரும் போஷிக்கப்பட்டு முழு மனிதனாகிறது போல அவர் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமாயிருக்கிறார். கிறிஸ்துவோடு உயிருள்ள சம்பந்தமாயிருப்பதினாலும் அவரோடு நெருங்கி உறவாடுவதினாலும் ஆத்துமா சுகம் பெரும். கிறிஸ்துவின் இரத்த பலமே அதின் அவசியத்தை எல்லாம் பூர்த்தியாக்கி அதை ஆரோக்கியமான நிலைமையில் வைக்கிறது.LST 142.3

    சரீரம் கேட்டு மெலிந்து போனால் அது மறுபடியும் இரத்த புஷ்டி அடைவதற்கு அனுதினமும் ஆகாரம் புசிக்க வேண்டும். அப்படியே வார்த்தையை அடிக்கடி புசித்து அறிவடைவது நித்திய ஜீவனாயிருக்கிறது. அவ்வார்த்தை நமக்கு போஜனமும் பானமுமாயிருக்க வேண்டும். இதில் தான் ஆத்துமா சக்தியையும் ஜீவனையும் அடைய வேண்டும். நமது மனதின் ஆவி புதுபிக்கப் பட்டு நமது ஜீவனுள்ள தலையாகிய கிறிஸ்துவுக்குள் நாம் வளரும் பொருட்டு நாம் அதின் அருமையான போதனையை உட்கொள்ள வேண்டும்.LST 142.4

    அவருடைய வார்த்தை உயிருள்ள ஆத்துமாவில் நிலைத்திருக்கும் போது கிறிஸ்துவோடு ஒற்றுமையுண்டு, அவரோடு உயிருள்ள ஐக்கியமுண்டு, மட்டற்ற நமது சிலாக்கியத்திற்கு உறுதியான அத்தாட்சியாகிய நிலையான அன்பு ஆத்துமாவிளே உண்டு.LST 143.1

    கிறிஸ்துவிலில்லாத ஓர் ஆத்துமா இரத்தமற்ற ஓர் சரீரமாயிருக்கிறது; அது செத்தது. ஆவிக்குரிய ஜீவனின் தோற்றமிருக்கலாம் அதற்கு; ஓர் யந்திரம் போல் மார்க்க விஷயமாயுள்ள சில சடங்காசாரங்களை அது செய்யலாம், ஆனால் அதற்கு ஆவிக்குரிய ஜீவனில்லை. ஆகவே தேவனுடைய வார்த்தையைக் கேட்பது மட்டும் போதாது. நாம் தேவனால் போதிக்கப் பட்டாலொழிய நமது ஆத்துமாக்களின் இரட்சிப்புக்குரிய சத்தியத்தை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அது ஜீவியத்தில் அப்பியாசிக்கப் படவேண்டும்.LST 143.2

    ஓர் ஆத்துமா கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுகிறபோது அவன் அவருடைய நீதியை ஏற்றுக் கொள்ளுகிறான். அவன் கிறிஸ்துவின் ஜீவியத்தை ஜீவிக்கிறான். அவன் கிறிஸ்துவைக் காணவும், அவருடைய ஜீவியத்தைப் படிக்கவும் அவருடைய ஆசார முறைகளைக் கையாடவும் பழகுகிறபோது அவன் தேவ குமாரனுடைய மாம்சத்தைப் புசிக்கிறான், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணுகிறான். இது அவனுடைய அநுபோகமாயிருக்கையில் அவன் பவுல் அப்போஸ்தலனோடு சேர்ந்து “கிறிஸ்துவுடனே சிலுவையிலறையப் பட்டேன், ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” என்று கூறக் கூடும். R. & H. Nov.23, 1897.LST 143.3