Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பாகம் 2

    முதலாம் பிரிவு—அதரிசனப் போர்

    சத்துரு

    விழுந்துபோன மனிதன் நியாயப்படி சாத்தானின் அடிமையே. அப்பெரிய சத்ருவின் வல்லமையினின்று அவனை விடுவிக்கும் பொருட்டு கிறிஸ்து வரவேண்டியதிருந்தது. மனிதன் சாத்தானின் தூண்டுதல்களுக் கிணங்கி நடக்கும் சுபாவமுள்ளவன். மகத்தான ஜெப வீரராகிய கிறிஸ்து அவனுக்குள் வாசமாயிருந்து, அவனை நடத்தி, அவனுக்கு சத்துவமளிக்காவிட்டால், அவன் அக்கொடிய சத்ருவைத் திறமையுடன் எதிர்த்து நிற்கமுடியாது. தேவன் மாத்திரம் சாத்தானின் வல்லமையை மட்டுப்படுத்தக்கூடும். அவன் பூமிஎங்கும் உலாவி அதில் சுற்றித் திரிகிறவனாயிருக்கிறான். எங்கே ஆத்துமாக்கள் அழிப்பதற்கான சமயம் தவறிவிடுமோவெனப் பயந்து அவன் எப்பொழுதும் விழித்திருக்கிறான். தேவனுடைய ஜனங்கள் அவனுடைய கண்ணிக்குத் தப்பிக் கொள்ளத்தக்கதாக அவர்கள் இதை அறிந்திருக்கவேண்டியது முக்கியம்.LST 121.1

    சாத்தான் தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாய்ச் செய்யும் கடைசிப் போரில் அவர்கள் அது அவன் தான் என்றறிந்து கொள்ளாதிருக்கத் தக்கதாக அவன் தன் வஞ்சகங்களைத் தயாரிக்கின்றான். ” அது ஆச்சரியமல்ல, சாத்தனும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே “. 2 கொரி. 11:14, வஞ்சிக்கப்பட்ட சில ஆத்துமாக்கள் சாத்தான் ஒருவன் இல்லைஎன்று சொல்லும் போதே அவன் அவர்களைத் கொள்ளைகொண்டு போய் அவர்கள் மூலமாய் மிகவும் அதிகமாய்ச் கிரியை செய்கிறேன் . தேவனுடைய ஜனங்களின் பெலன் கிறிஸ்துவிலிருக்கும் போது அவர்கள் தன் மேல் எவ்வளவு வல்லமையுடையவர்களா இருக்கக் கூடுமென்பதை சாத்தான் அவர்களை விட அதிகமாயறிவான். பராக்கிரம ஜெயசீலனுடைய சகாயத்திற்காக அவர்கள் தாழ்மையாய்க் கெஞ்சும்போது , கிறிஸ்துவின் மேல் உறுதியாய்ச் சார்ந்துள்ள பெலவீனமான விசுவாசி சாத்தானையும் அவனுடைய சர்வசேனையையும் துரத்திதள்ளி ஜெயம்பெறக்கூடும் . அவன் வெகு தந்திரசாலியாகையால் தன் சோதனைகளோடு நேரே தைரியமாய் வரமாட்டான்; ஏனெனில் அப்போது கிறிஸ்துவின் முயற்சிகள் தூக்க மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும்; அவன் மகா பராக்கிரமமுள்ள மீட்பரின் மேல் சார்ந்துகொள்ளுவான். ஆனால்.அவன் தேவபக்தி யுள்ளவர்கள் போல் காண்பிக்கும் கீழ்படியாமையின் மக்கள் மூலமாய் மாயமாய் வந்து மறைவாய்க் கிரியை செய்கிறான்..LST 121.2