Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வேலை பலமாய் வளர

    நமது ஆதி அனுபோகத்திலிருந்து தற்காலம் வரை தேவாவியின் போதனையினாலும் அனுமதியினாலும் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ள விசுவாசத்தை மிகவும் பரிசுத்தமாய் நாம் பற்றிக் கொள்ளவேண்டும். ஆண்டவர் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிற தமது ஜனங்கள் மூலமாய் நடப்பிக்கிற வேலையை மிக்க மேன்மையுள்ள தாய் நாம் மதிக்க வேண்டும், அது அவருடைய கிருபையின் வல்லமையின் மூலமாய் காலம் செல்லச் செல்ல அதிகமாய்ப் பெலப்பட்டு மிகுந்த பயனுள்ளதாகும்.LST 196.1

    சத்துரு தேவனுடைய ஜனங்களின் பார்வையை மறைக்கவும் அவர்களுடைய திறமையை கெடுக்கவும் வகை தேடுகிறான்; ஆனால் தேவ ஆவியானவர் நடத்துகிறபடி அவர்கள் பிரயாசப்படுகிறதா யிருந்தால், பழைய பாழான இடங்களைக் கட்டும் வேலைக்கென்று அவர் அவர்களுக்கு முன்பாக நற்தருணமாகிய வாசல்களைத் திறப்பார். கர்த்தர் தமது கடைசி வெற்றி பின் முத்திரையைத் தமது உத்தம ஊழியர்களின்மேல் வைக்கும்படி அவர் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் பரலோகத்திலிருந்து கீழே இறங்கி வருமட்டாக அவர்களுடைய அநுபோகம் சதா வளர்ச்சியுள்ளதாயிருக்கும். - L.S. 438-9.LST 196.2