Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    மூன்றாம் பிரிவு—வீடு

    வீட்டைக் கட்டுகிறவர்கள்

    ஆதாமுக்கு ஏவாளே ஓர் துணையாகக் கொடுத்தவர் ஓர் கல்யாண உற்சவத்தில் தமது முதலாம் அற்புதத்தைச் செய்தார். பந்து மித்திரரெல்லாம் ஒன்று கூடி மகிழ்வுற்றிருந்த அம் மங்கள அறையில் கிறிஸ்து தமது பகிரங்க ஊழியத்தை ஆரம்பித்தார். இவ்விதமாக அவர் கலியாணத்தைத் தாமே ஏற்படுத்தின ஓர் நியமமாகக் கொண்டு அதை உறுதிப்படுத்தினார். குடும்பங்களே வளர்ப்பதற்கு புருஷரும் ஸ்திரீகளும் பரிசுத்த விவாகத்தில் ஒன்றாய் இணைக்கப்படவேண்டுமென்று அவர் கட்டளையிட்டார். மகிமையினால் முடி சூட்டப்பட்ட அதின் அங்கத்தினர் பரலோகக் குடும்பத்தின் அங்கத்தினராக என்னப்பட வேண்டும். தமக்கும் மீட்கப்பட்ட தம்முடையவர்களுக்குமுள்ள ஐக்கியத்திற்கு அதை ஓர் அடையாளமாக்கினதினாலும் அவர் விவாக முறையை மகிமைப்படுத்தினார். அவரே மணவாளனாயிருக்கிறார்; சபை மணவாட்டி. தாம் தெரிந்துகொண்ட அதைக் குறித்து அவர் “என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை” என்கிறார்.LST 144.1

    பூமியிலுள்ள பாசங்களிலெல்லாம் குடும்ப பாசமே மிகவும் நெருங்கியதும் மிகவும் உருக்க முள்ளதும் பரிசுத்தமுள்ளதுமானது. அது மனுக் குலத்திற்கோர் ஆசீர்வாதமாயிருக்க வேண்டுமென்னும் நோக்கமாய் ஏற்படுத்தப் பட்டது. எங்கெங்கே அதின் உத்தரவாதங்கள் சரியாய்க் கவனிக்கப்பட்டு, தேவ பயத்திலே ஞானமாய்க் காலியாண உடன்படிக்கை செய்யப் படுகிறதோ அங்கே எல்லாம் அது ஆசீர்வாதமாயிருக்கிறது.LST 144.2

    பெற்றோருடையவும் அவர்கள் பிள்ளைகளுடையவும் சரீரம், மனம், ஆத்துமம் இவற்றின் வாழ்வு பத்திரமாய்க் காக்கப் படத்தக்கதாக, பெற்றோரும் பிள்ளைகளும் தங்கள் உடன் மனிதருக்கு ஆசீர்வாதமாகவும் தங்கள் சிருஷ்டிகருக்கு மகிமையாகவும் இருக்கத்தக்க உயிர்த் துணை தெரிந்துகொள்ளப்படவேண்டும்.LST 144.3

    கலியாண உத்தரவாதங்களில் பிரவேசிக்கு முன்னதாக வாலிப புருஷரும் பெண்களும் தங்களை அதின் கடமைகளுக்கும் பாரங்களுக்கும் ஆயத்தப் படுத்தக் கூடிய நாடோடிய ஜீவியத்தில் கொஞ்சம் பழகியிருக்க வேண்டும். அகால விவாகங்கள் தகாது. கலியாணத்தைப் போல் அவ்வளவு விசேஷமானதும் அதின் பலங்கள் இம்மட்டென்று வரையறுக்கக் கூடாததுமான தோர் காரியத்தை அவசரமாயும், தகுந்த ஆயத்தமின்றியும் மனோ தேக சக்திகள் நன்றாய் ஸ்திரப்படு முன்னும் செய்யக் கூடாது.LST 144.4

    கிறிஸ்துவில் மாத்திரம் ஓர் கலியாண உடன்படிக்கை பத்திரமாய்ச் செய்யப்படக் கூடும். மானிட அன்பின் நெருங்கிய கட்டுகள் எல்லாம் தெய்வீக அன்பிலிருந்து ஏற்படவேண்டும். கிறிஸ்து ஆளுகை செய்கிற இடத்திலே மாத்திரம் ஆழ்ந்த உண்மையான, தன்னயமற்ற அன்பு இருக்கக் கூடும்.LST 144.5

    அவ்வித முன் ஜாக்கிரதையுடன் ஓர் வாலிப ஸ்திரீ சுத்தமான மனுஷத் தன்மையுடையவனும், சுறுசுறுப்புள்ளவனும், பரம வாஞ்சையுள்ளவனும், உத்தமனும், தேவனிடத்தில் அன்பு கூர்ந்து அவருக்குப் பயப்படுகிறவனுமாகிய ஒருவனை மாத்திரம் தன் உயிர்த் தோழனாக ஏற்றுக் கொள்வாளாக. ஓர் வாலிபன், வாழ்வின் பாரங்களில் தன பங்கைச் சுமக்கத் தகுதியுள்ளவளும், தன்னை மேன்மைப் படுத்தி சீர்ப்படுத்தக் கூடியவளும் தன்னை நேசித்து சந்தோஷிப்பிக்கக் கூடியவளுமாகிய ஒருத்தியை தனக்குத் துணையாக வைத்துக் கொள்ளத் தேடுவானாக. கஷ்டங்களும் குழப்பங்களும் அதைரியங்களும் ஏற்படும்போது, புருஷனாகிலும் மனைவியாகிலும் தங்கள் ஐக்கியம் தப்பிதம் அல்லது ஏமாற்றமுள்ள தாயிற்றென்றெண்ணும் எண்ணத்திற்கிடங் கொடாதிருப்பார்களாக.LST 145.1

    புருஷனாகிலும் மனைவியாகிலும் ஒருவர் மேலொருவர் கொடுங்கோலாட்சி புரிய முயலுவது கூடாது. தங்கள் இஷ்டம் போல் நடக்க வேண்டுமென்று சொல்லி ஒருவரையொருவர் கட்டாயப்படுத்தலாகாது. இப்படிச் செய்து நீங்கள் ஒருவர் மேலொருவர் அன்பாயிருக்க முடியாது. பட்சமுள்ளவர்களாயும், பொறுமையுள்ளவர்களாயும் உருக்க முள்ளவர்களாயும், யோசனையுள்ளவர்களாயும், மரியாதையுள்ளவர்களாயுமிருங்கள். தேவ கிருபையினால் நீங்கள் விவாகத்தில் ஒருவருக்கொருவர் கொடுத்த வாக்கின்படி ஒருவரையொருவர் சந்தோஷிப்பித்து ஜெயம் பெற்று வாழக் கூடும்.---M.H. 356-70.LST 145.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents