Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இயேசுவைக் காணும் சொப்பனம்

    இதற்குப் பின் இன்னொரு சொப்பனம் எனக்குக் கிடைத்தது. இயேசு இப்பூமியிலிருப்பதால், நான் அவரண்டை பொய் அவருடைய திருப்பாதத்தில் விழுந்து என் கஷ்டங்களை எல்லாம் அவரிட சொல்லுவேன். அவர் எண்ணப் புறக்கணித்துத் தள்ளமாட்டார், அவர் எனக்கு இறங்குவார், நான் அவரை நேசித்து அவருக்கு எப்பொழுதும் ஊழியஞ் செய்வேன் என்பதாய் என் கைகளினால் என் முகத்தை மூடிக் கொண்டு ஆழ்ந்த விசனத்தில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருப்பதாகக் கண்டேன்.LST 20.2

    அப்போது வாசல் திறக்கப்பட்டது. சௌந்தர ரூபமும் முகத்தொற்றமுமுள்ள ஓர் ஆள் உட்பிரவேசித்தார். அவர் என் பேரில் பரிதாபப்பட்டு, என்னை நோக்கி, “நீ இயேசுவைப் பார்க்க விரும்புகிறாய? அவர் இங்கே இருக்கிறார், உனக்கு பிரியமானால் நீ அவரிப் பார்க்கலாம்; உன்னுடயவைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு என்னைப் பின் பற்றி வா” என்றார்.LST 20.3

    எனக்குச் சொல்ல முடியாத சந்தோஷமுண்டாயிற்று. இதைக் கேட்டதும் எனக்குள்ள அற்பப் பொருட்களுடன் நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த என் சிற்றாபரணங்களை யெல்லாம் களிப்புடன் எடுத்துக்கொண்டு, என் வழிகாட்டியைப் பின்பற்றிச் சென்றேன். அவர் செங்குத்தானதும் பார்வைக்கு உருதியற்றதுமான ஓர் படிக்கட்டின் வழியாய் என்னை நடத்திச் சென்றார். நான் அப்படிகளின் மேல் ஏறிச் செல்ல ஆரம்பித்தபோது, மயங்கிக் கீழே விழுந்து விடாதபடிக்கு நான் மேல் நோக்கியே வரும்படி அவர் எனக்குக் கற்பித்தார். செங்குத்தான இருப்பாரையில் ஏறிச் சென்ற அநேகர் சிகரத்தைச் சேருமுன் விழுந்துவிட்டனர்.LST 20.4

    கடைசியாக நாங்கள் கடைசிப்படியைச் சேர்ந்து ஒரு வாசல் முன் பொய் நின்றோம். இங்கே நான் என்னுடன் கொண்டு போ யிருந்த சகல வஸ்துகளையும் வைத்துவிடும்படி என் வழிகாட்டி எனக்குக் கட்டளையிட்டார். நான் சந்தோஷமாய் அவைகளைக் கீழே வைத்து விட்டேன். பின்பு அவர் அவ்வாசளைத் திறந்ததும் என்னை உட்ப்ரவேசிக்கச் சொன்னார். ஓர் நொடிக்குள்ளே நான் இயேசுவின் சமூகம் பொய் நின்றேன். அச்சௌந்திரவதனமும் அதில் விளங்கிய கிருபையும் மகத்துவமும் வேறெவருக்குமுரியதல்ல; அது அவருடைய திருமுகமே. அவர் என்னை நோக்கிப் பார்த்ததும் என் ஜீவியத்தில் நடந்த சகல சங்கதிகளும் என் சகல யோசனைகளும் எண்ணங்களும் அவருக்கு தெரிந்திருந்ததென்று நான் உடனே கண்டு அறிந்து கொண்டேன்.LST 20.5

    ஆராய்ந்து பார்க்கும் அவருடைய கண்களுக்கெதிராக நான் நிற்கக் கூடாதிருந்ததினால் அவருடைய பார்வைக்கு என்னை மறைத்துக் கொள்ளும்படி பிரயாசப்பட்டேன்; அப்போது புன்சிரிப்புடன் அவர் என்னருகில் வந்து தமது கரத்தை என் தலைமேல் வைத்து “பயப்படாதே” என்றார். அவருடைய இன்பக் குரலோசையினால் நான் முன் ஒரு போதும் அடையாத குதூகலமடைந்தேன், மட்டற்ற ஆனந்த பரவசத்தால் நான் மயங்கிப் பேச முடியாமல் அவர் பாதத்தில் முகங்குப்புற விழுந்தேன். அப்படி நான் ஆதரவற்றுக் கிடக்கையில் சொகுசான ஜோதிமயக் காட்சிகள் என் முன் கடந்தன, நான் பரம சமாதானத்தையும் சவுக்கியத்தயும் அடைந்து விட்டதாகக் கண்டேன். கடைசியாக என் பெலம் எனக்குத் திரும்ப வந்தது, நான் விழித்துக் கொண்டேன். இயேசுவின் அன்பின் கண்கள் இன்னும் என் மீது நோக்கமாகவேயிருந்தன. அவருடைய புன்னகை என் ஆத்துமாவைச் சந்தோஷத்தினால் நிரப்பிற்று. அவருடைய பிரசன்னம் என்னிலே பயபக்தியையும் அன்பையும் உண்டாக்கிற்று.LST 21.1