Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    குணம் பூரணமடைவதற்கு இச்சை அடக்கம் முக்கியம்

    மனுக் குலத்தை துன்புறுத்தும் நோய் நொம்பலங்களுக்கு எல்லாம் மிகுதியும் அவர்களுடைய சொந்த தப்பிதமான பழக்கங்களே காரணம். ஏனெனில் அவர்கள் சுகமாய்ப் பிழைத்திருப்பதற் குரிய பிரமாணங்கள் விஷயமாய் தேவன் கொடுத்திருக்கிற வெளிச்சத்தை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அல்லது அதை அவமதிக்கிறார்கள். ஜீவனுக்கான பிரமாணத்தை மீறி நடக்கும்போது நாம் தேவனை மகிமைப் படுத்த முடியாது. ஆசை இச்சையில் அமிழ்ந்து இருக்கையில் தேவனுக்குச் செய்யப் பட்ட பிரதிஷ்டையை இருதயம் காத்துக் கொள்ளமுடியாது. சேதமான இச்சையில் தொடர்பை மூழ்கினதினிமித்தம் வியாதிப் பட்டுப் போன சரீரமும் மாறாட்டங் கொண்ட புத்தியும் சரீரத்தையும் ஆவியையும் பரிசுத்தமாக்கலை அசாத்தியமாக்கி விடுகின்றது. கிறிஸ்தவ குணம் சரியாய்ப் பூரணமடைவதற்கு சரீரம் சுகமுள்ள நிலைமைகளில் இருக்க வேண்டியதின் முக்கியத்தை அப்போஸ்தலன் அறிந்திருந்தார். அவர் சொல்லுகிறதாவது, “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகதவனாய்ப் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” 1 கோரி. 9:27. அவர் இச்சையடக்கம் ஆவியின் கணியில் ஒன்றென்று கூறுகிறார். “கிறிஸ்துவின் உடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.” ____ R & H. Sept. 8, 1874.LST 179.2