Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒன்பதாம் அத்தியாயம்—பரலோக பரிசுத்தஸ்தலத்தைப் பற்றி மற்றொரு காட்சி

    1847 ஏப்ரல் 3-ஆம் தேதி ஒய்வு நாளில் சகோதரர் ஸ்டாக் பிரிட்ஜ் ஹவ்லாந்து என்பவற்றின் வீட்டில் கூடின ஓர் கூட்டத்தில் எங்களுக்கு விசேஷ ஜெப ஆவி காணப்பட்டது. நாங்கள் ஜெபித்த பொது பரிசுத்த ஆவி எங்கள் மேலிறங்கினார். நாங்கள் மிகவும் களிப்புற்றோம். சீக்கிரத்தில் நான் பூமியின் காரியங்களுக்கெல்லாம் அப்புறமாகி தேவனுடைய மகிமையின் தரிசனத்துக்கு உள்ளானேன்.LST 50.1

    ஓர் தூதன் வேகமாய் என்னிடம் பறந்து வரக் கண்டேன். அவன் என்னை பூமியிலிருந்து பரிசுத்த நகரத்திற்கு விரைவாய் எடுத்துச் சென்றான். நகரத்தில் ஓர் ஆலயத்தைக் கண்டு அதில் பிரவேசித்தேன். முதலாம் திரைக்குள் வருமுன் நான் ஒரு வாசல் வழியாய்க் கடந்து சென்றேன். இத்திரை உயர்த்தப்பட்டதும் நான் பரிசுத்தஸ்தலத்திற்குட் பிரவேசித்தேன். இங்கே நான் தூப பீடத்தையும், ஏழு விளக்குகளுள்ள ஒரு குத்து விளக்கையும் சமுகத்தப்பமிருந்த மேசையையும் கண்டேன். பரிசுத்த ஸ்தலத்தின் மகிமையைப் பார்த்ததும் இயேசு இரண்டாம் திரையை உயர்த்தினார், நான் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குட் பிரவேசித்தேன்.LST 50.2

    மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நான் ஒரு உடன்படிக்கைப் பெட்டியைக் கண்டேன்; அது மேலும் சுற்றிலும் பசும் பொன்னாயிருந்தது. உடன்படிக்கைப் பேட்டியின் இரு முனைகளிலும் இரண்டு கேருபீன்கள் தங்கள் செட்டைகளை அதின்மேல் விரித்துக் கொண்டிருந்தன. அவைகள் ஒன்றுக்கொன்று எதிர்முகமாய் கீழே நோக்கி நின்றன. தூதர்களுக்கிடையில் ஒரு பொற் தூபகலசமிருந்தது. உடன்படிக்கைப் பெட்டிக்கு மேலே தூதர்கள் நின்ற இடத்தில் மிகவும் அதிக ஒளியுள்ள மகிமையிருந்தது, அது தேவன் வாசஞ் செய்யக்கூடிய ஓர் சிங்காசனம் போற் காணப்பட்டது. இயேசு உடன்படிக்கைப் பெட்டிப் பக்கம் நின்றிருந்தார், பரிசுத்தவான்களின் ஜெபங்கள் அவரிடம் வரும்போது தூபகலசத்திலுள்ள தூபம் புகைக்கப்படும், அவர் அத் தூப புகையுடன் அவர்களுடைய ஜெபங்களை தமது பிதாவுக்குப் படைப்பார்.LST 50.3

    உடன்படிக்கைப் பெட்டிக்குள் மன்னா வைக்கப்பட்ட பொற் பாத்திரமும் ஆரோனுடைய துளிர்த்த கோலும் ஓர் புஸ்தகம் போல் நன்றாய்ச் சேர்த்து மடிக்கப்பட்டிருந்த கற்பலகைகளுமிருந்தன. இயேசு அவைகளைத் திறந்தார், தேவனுடைய விரலால் அவைகளின் மேல் எழுதப்பட்டிருந்த கற்பனைகளை நான் கண்டேன். ஒரு பலகையில் நாலும் மற்றதில் ஆறும் இருந்தன. ஆனால் ஓய்வுநாள் கற்பனையாகிய நான்காம் கற்பனை அவை எல்லாவற்றிற்கும் மேலாகப் பிரகாசித்தது, ஏனெனில் ஒய்வு நாள் தேவனுடைய நாமத்தின் மகிமைக்கென்று கைக்கொள்ளப்படும்படி பிரத்தியேகப் படுத்தப்பட்டிருந்தது. பரிசுத்த ஒய்வு நாளைச் சுற்றிலும் மகிமையிலானதோர் வட்டமிருந்ததினால் அது மகிமையைத் தோன்றினது. ஓய்வுநாட் பிரமாணம் சிலுவையுடன் சேர்த்து ஆணியடிக்க படவில்லை என்று கண்டேன். அப்படி அது ஆணியடிக்கப்பட்டிருந்தால் மற்ற ஒன்பதும் கூட அடிபட்டிருக்க வேண்டும்; அப்பொழுது நான்காம் கற்பனையுடன் அவை எல்லாவற்றையும் மீறுவதற்கு நமக்கு சுயாதீனம் உண்டாயிருக்குமே. தேவன் ஒரு போதும் மாறாதவராயிருக்கிற படியால் அவர் ஒய்வு நாளை மாற்றவில்லையென்று கண்டேன். ஆனால் பாப்புவானவர் ஏழாம் நாள் ஓய்வை வாரத்தின் முதலாம் நாளுக்கு மாற்றிவிட்டார்; ஏனெனில் அவரே காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற வேண்டியவர் *LST 51.1

    அன்றியும் தேவன் ஏழாம் நாள் ஓய்வை முதலாம் நாளுக்கு மாற்றியிருந்தால், பரலோக ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திலுள்ள உடன்படிக்கைப் பெட்டியில் இப்பொழுதிருக்கும் கற்பலகைகளின் மேல் எழுதப்பட்டிருந்த ஒய்வு நாள் கற்பனையின் எழுத்தை அவர் மாற்றியிருப்பார் என்று கண்டேன்; அது முதலாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஒய்வு நாள் என்று வாசிக்க வேண்டும். ஆனால் அது, “ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஒய்வு நாள்” என்று தேவனுடைய விரலால் கற்பலகைகளில் எழுதப்பட்டு மோசேக்கு சீனாய் மலையில் ஒப்புக் கொடுக்கப்பட்டபோது வாசித்தது போலவே இருந்ததெனக் கண்டேன். பரிசுத்த ஒய்வுனாலே தேவனுடைய மெய்யான இஸ்ரவேலுக்கும் அவிசுவாசிகளுக்கும் நடுவில் பிரிவினையின் சுவராயிருக்கிரதென்றும் இருக்குமென்றும் கண்டேன். தேவனுடைய அருமையான பரிசுத்தவான்களின் இருதயங்களை ஐக்கியப் படுத்துவதற்கான பெரிய விஷயம் ஒய்வு நாள்தான்.LST 51.2

    ஓய்வுநாளை மாற்றினதற்கு உத்தரவாதி பாப்புகளில் ஒருவர் என்னாமல் பாப்பு மார்க்க சபை என்பதே இவ்வெழுத்தாளரின் வெளிப்படையான எண்ணமாயிருக்கிறது. இன்னொரு இடத்தில் அவர் உரைத்திருக்கிறதாவது : “தங்கள் சபையே அம்மாற்றம் செய்ததென்று ரோமான கத்தோலிக்கர் ஒத்துக்கொள்வதுந் தவிர ஞாயிறை ஆதரிப்பதனால் புரோட்டெஸ்தாந்த்ர் அச்சபையின் அதிகாரத்தை அறிந்திருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.”LST 51.3

    ஒய்வு நாளை உணராமலும் அதைக் கைகொள்ளாமலும் இருக்கிற பிள்ளைகள் தேவனுக்கு உண்டென்று கண்டேன். அதைப் பற்றிய வெளிச்சத்தை அவர்கள் புறக்கணிக்க வில்லை. அன்றியும் உபத்திரவகால ஆரம்பத்தில் நாம் ஒய்வு நாளை அதிக பலமாய் கூறி அறிவிக்க புறப்பட்டு போன போது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டோம். ஓய்வுநாள் சத்தியத்திற்கு விரோதமாய் எதிர்த்துப் பேச முடியாமல் போகவே சபைகளுக்கு இதனால் கோபமூன்டது. இக்காலத்தில் தெரிந்து கொள்ளப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் எல்லாரும் சத்தியம் நம்மிடத்தில் உண்டென்று கண்டு வெளியேறி வந்து நம்மோடு உபத்திரவத்தை சகித்தார்கள்.*இவ்வாக்கியத்தைக் குறித்து உவைத் அம்மையார் எழுதினதாவது.” இங்கே சொல்லப்பட்ட உபத்திரவ கால ஆராம்பம் வாதிகள் ஊற்றப்பட ஆரம்பிக்கும் காலத்தை குறியாமல், அவைகள் ஊற்றப்படுவதற்கு சற்று முன்னால் கிறிஸ்து பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கையிலேயள்ள கொஞ்ச காலத்தை குறிக்கிறது. அச்சமயத்தில் இரட்சி பின் கிரியை முடிவாகும் போது பூமியின் மேல் உபத்திரவம் வரும். ஜாதிகள் கோபிப்பார்கள் எங்கிலும் மூன்றாம் தூதனுடைய வேலை தடைபடாதபடிக்கு தடுக்கப்படுவார்கள். அச்சமயத்தில் இம்மாதிரி கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதல் வந்து மூன்றாம் தூதனுடைய பலத்த சத்தத்திற்கு வல்லமையை கொடுத்து கடைசி ஏழு வாதைகள் கூற்றப்படும்போது அதிலே நிலை நிற்கும்படி பரிசுத்தவான்களை ஆயத்தப்படுத்தும்”.LST 52.1