Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உற்ற தோழர் ஒருவரின் சாட்சி

    உவைட் அம்மாளுக்கும் அவருடைய புருஷனுக்கும் ஜீவ காலத் தோழரான உரியா ஸிமித் போதகர் அவருடைய விசேஷ வரத்தைக் குறித்துப் பின் வரும் சாட்சி பகர்ந்தார்.LST 109.2

    “அவ்வெளிப் படுத்தல்களை பரீட்சிப்பதற்குக் கொண்டு வந்த பரிசோதனைகள் எல்லாம் அவைகளை உண்மையான வெளிப்படுத்தல்கள் என ரூபிக்கின்றன. சாந்தமும் அவைகளை அந்தரங்கமாகவும் வெளிப் படையாகவும் ஆதரிக்கிற அத்தாட்சியே போதுமானது. அவைகள் தேவனுடைய வார்த்தைக்கும், ஒன்றுக்கொன்று தங்களுக்கே பொறுத்த முள்ளவைகளாயும்மிருக்கின்றன. நன்றாய் நிதானித்தறியக் கூடியவர்கள் ஒருபோதும் மோசம் போகாதிருக்கும் பொருட்டு அவைகள் தேவாவியானவர் விசேஷமாய்ப் ரசன்னமாயிருக்கையில் அருளப்பட்டிருக்கின்றன. சாந்தமும், கனமும், மனதில் தைக்கக் கூடியவைகளுமான அவைகள் பொய் அல்லது பித்தலாட்டமான தெல்லாவற்றிற்கும் நேர் விரோதமாயிருக்கிரதாகக் கவனித்துப் பார்ப்போருக்குத் தங்களையே ஒப்புவிக்கின்றன.LST 109.3

    “அவைகளின் கனி தீமைக்கு நேர் விரோதமான ஊற்றிலிருந் துண்டாகிறதென்று காண்பிக்கத் தக்கதாய் இருக்கின்றது.LST 109.4

    “அவைகள் சுத்தமான சன்மார்க்க நடத்தைத் கேதுவானவைகள். துன்மார்க்கத்தை எல்லாம் வெறுக்கவும் சன்மார்க்க நெறியைக் கையாடவும் போதிக்கின்றன. நாம் ராஜ்யத்துக்குப் போகும் வழியில் கடந்து செல்ல வேண்டிய ஆபத்துகளைக் குறிப்பிடுகின்றன. அவைகள் சாத்தானின் உபாய தந்திரங்களை வெளிப்படுத்துகின்றன. நாம் அவனோடு பங்கடையாதபடி அவைகள் நம்மை எச்சரிக்கின்றன. சத்துரு கள்ளத்தனமாய் நமது மத்தியில் சேர்க்கும்படி பிரயாசப் பட்ட பித்தலாட்டமான உபாயங்களைப் பூவிலேயே அவைகள் கிள்ளி எறிந்திருக்கின்றன அவைகள் அந்தரங்கமான அக்கிரமத்தை வெளிப்படுத்தியும், ஒளிக்கப்பட்ட தப்பித்தங்களை வெளியாக்கியும், கள்ள இருதயத்திலுள்ள பொல்லாத எண்ணங்களை வெறுமையாக்கியுமிருக்கின்றன. அவைகள் எப்பக்கமும் சத்தியத்திற்கு நேரிட்ட ஆபத்துகளை விலக்கியிருக்கின்ற. தேவனுக்கென்று நாங்கள் எங்களை அதிக மாய்த் தத்தம் செய்யவும் இருதய பரிசுத்தத்திற்காக அதிக ஊக்கமாய் முயற்சிக்கவும், நமது ஆண்டவரின் வேலையில் அதிக ஜாக்கிரதையாயிருக்கவும் அவைகள் எங்களைத் திரும்பத் திரும்ப ஏவி எழுப்பி யிருக்கின்றன.LST 109.5

    “அவைகள் அநேக இறுதயங்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் கொண்டு வந்திருக்கின்றன. அவைகள் பெலவீனரைப் பெலப்படுத்தியும், திடனற்றவரைத் திடப்படுத்தியும், திகைப்புற்றோரைத் தேற்றியும் இருக்கின்றன. அவைகள் ஒழுங்கின்மையிலிருந்து ஒழுங்கையும், கோணலான இடங்களை நேராக்கியும்,இருளாயும் மறைவாயும் இருந்தவற்றை வெளிப்படுத்தியும் இருக்கின்றன. புனிதமும் மேன்மையுமான சன்மார்கத்திற்காக வேண்டிக் கொள்ளும் அவைகளின் ஆச்சர்யமான வேண்டுகோள்களையும்,தேவனையும் இரட்சகரையும் பற்றிப் புகழும் அவைகளின் புகழ்ச்சியையும், துன்மார்க்கத்திற்கு விரோதமாய்ப் பயமுறுத்தும் அவைகளின் பயமுறுத்தல்களையும், பரிசுத்தமும் நற் கீர்த்தியுமுள்ளவைகளை எல்லாம் நடப்பிக்கும்படிப் போதிக்கும் அவைகளின் போதனைகளையும் நேர்மையான மனதுடன் வாசிக்கிற எவனும், ‘இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வார்தைகளல்ல’ என்று சொல்லும்படி கட்டாயப் படுத்தப் படாமலிருக்க மாட்டான்.”LST 110.1