Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    தகர்த்துத் தள்ளுவதும் சிதறடிப்பதும்

    தேவன் ஒரு ஜனத்தை வெளியேறச் செய்து அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து நிற்கவும், ஒரே காரியங்களைப் பேசவும் அவர்களை ஆயத்தப் படுத்தி இவ்விதமாய் தமது சீஷர்களுக்காகச் செய்த கிறிஸ்துவின் ஜெபத்தை நிறைவேற்றுகிறார்.LST 192.1

    சிதறுண்ட சிறு கூட்டத்தோடு மாத்திரம் தேவன் இருக்கிறார் என்று நம்புகிற சிறுசிறு கூட்டங்கள் ஓயாமல் எழும்பிக் கொண்டிருக்கின்றன; தேவ ஊழியர் கட்டினதைத் தகர்த்து சிதறடிப்பதே அவர்களுடைய வேலை. எப்பொழுதும் புதிதான தோன்றிப் பார்க்கவும் நம்பவும் வேண்டுமென விரும்பி அலையும் மனமுள்ளவர்கள் ஓரிடத்தில் கொஞ்சப் பேரும் இன்னொரு இரத்தில் கொஞ்சப் பேருமாக அடிக்கடி எழும்பி எல்லாரும் சத்துருவுக்காக ஓர் விசேஷ வேலையைச் செய்தாலும் தாங்களே சத்தியத்தையுடையவர்கள் என்று சொல்லுகிறார்கள். தேவன் நடத்திக் கொண்டும் அசீர்வதித்துக் கொண்டும் வருகிற ஜனங்களினின்று அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள், அந்த ஜனங்களைக் கொண்டே அவர் தமது பெரிய வேலையைச் செய்யப் போகிறார். ஓய்வுநாளைக் கைக்கொள்ளுகிற கூட்டத்தார் உலகத்தைப் போலாகிறார்கள் என்பதாக அவர்கள் தங்கள் பயன்களை எப்பொழுதும் வெளியிடுகிறார்கள்; ஆனால் இவர்களில் தங்களுடைய நோக்கங்கள் இசைந்த்துள்ள இருவரைக் கண்டுபிடிப்பதரிது. அவர்கள் சிதறுண்டு குழம்பினார்கள், என்றாலும் தேவன் விசேஷமாய்த் தங்களோடிருக்கிறார் என்று எண்ணத்தக்கதாக அவர்கள் தங்களையே வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். - 1 T 417-8LST 192.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents