Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    கிறிஸ்துவுக்கு விரோதமான சாத்தானின் பகை

    சாத்தான் யோசுவாவையும் அவருடைய ஜனங்களையும் குற்றஞ் சாட்டினது போல சகல யுகங்களிலும் தேவ தயவையும் இரக்கத்தையும் நாடுகிறவர்களை அவன் குற்றஞ் சாட்டுகிறான். வெளிப்படுத்தின விஷேசத்தில் அவன், “இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர் மேல் குற்றஞ் சாட்டுகிவனென்று” அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொல்லாங்கனின் வல்லமையினின்று விடுவிக்கப் பட்டு ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்படுகிற ஒவ்வொரு ஆத்துமாவைப் பற்றியும் இதே வாதம் நடைபெறுகிறது. பொல்லாங்கனாகிய சாத்தானுடைய தீர்க்க எதிர்ப்புகள் கிளம்பாமல் ஒருவரையும் அவனுடைய குடும்பத்திலிருந்து தேவனுடைய குடும்பத்தில் சேர்க்கிறதில்லை.LST 128.1

    கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு விரோதமாய்ச் சாத்தான் குற்றஞ் சாட்டுவது அவர்களுடைய பாவத்தைப் பற்றிய வெறுப்பினால் அல்ல, அவர்களின் குறைவுள்ள குணங்களனிமித்தம் அவன் எக்களிக்கிறான். தேவனுடைய பிரமாணத்தை அவன் மீறுவதினால் மாத்திரம் அவன் அவர்கள் மேல் அதிகாரம் செலுத்த முடியும் கிறிஸ்துவை அவன் பகைக்கிறனிமித்தமே அவன் அப்படி குற்றஞ் சாட்டுகிறான். சாத்தானுக்கு மனுக்குடும்பத்தின் மேலிருந்த பிடியை இயேசு இரட்சண்ய ஒழுங்கின் மூலமாய்த் தகர்த்து, ஆத்துமாக்களை அவன் வல்லமையினின்று விடுவிக்கிறார். கிறிஸ்துவின் மேலான அதிகாரத்திற்குரிய அத்தாட்சியை பிராதான கலகக்காரன் காண்கையில் அவனுடைய பகை விரோதமெல்லாம் கிளம்புகிறது; அவருடைய இரட்சிப்பை ஏற்றுக்கொண்ட மனுப்புத்திரரில் மீதியானவர்களை அவரிடமிருந்து பிடுங்கும்படிக்குக் கொடிய வல்லமையோடும் தந்திரத்தோடும் அவன் கிரியை செய்கிறான்.LST 128.2

    அவன் மனிதரை நாஸ்தீகத்துக்கு வழி நடத்தி அவர்கள் தேவனைப் பற்றிய தங்கள் நம்பிக்கையை இழந்துபோகவும் செய்கிறான். அவருடைய பிரமாணத்தை மீறும்படி அவன் அவர்களைச் சோதித்து, பிறகு அவர்கள் தன்னுடைய கைதிகள் எனச் சொல்லி கிறிஸ்து அவர்களைத் தன்னிடமிருந்து எடுப்பது நியாயமில்லை என்று வழக்காடுகிறான். மன்னிப்புக்காகவும் கிருபைக்காகவும் ஊக்கமாய்த் தேவனைத் தேடுகிறவர்கள் அடாஹிப் பெற்றுக் கொள்வார்கள் என்று அவனுக்கு தெரியும்; ஆசையினால் அவன் அவர்களை அதைரியப்படுத்தும் படிக்கு அவர்கள் பாவங்களை அவர்கள் முன் காட்டுகிறான். தேவனுக்குக் கீழ்ப்படியும்படிப் பிரயாசப்படுவோருக்கு விரோதமாய் அவன் எப்பொழுதும் சமயம் தேடிக்கொண்டிருக்கிறான். அவர்கள் செய்யும் சிறந்ததும் மிகப்பிரியமுமான ஆராதனைகளுங் கூடக் கெட்டதெனக் காண்பிக்கப் பார்க்கிறான். மகா தந்திரமும் மகா கொடியதுமான கணக்கற்ற உபாயங்களைக் கொண்டு அவன் அவர்களை ஆக்கினைக் குட்படுத்தப் பார்க்கிறான்.LST 128.3

    குற்றவாளியாகிய மனுஷன் தானாய் இக்குற்றங்களை எதிர்க்க இயலாது. அவன் தேவனுக்கு முன்பாகப் பாவக் கறைப்பட்ட வஸ்திரத்துடன் தன் குற்றத்தை அறிக்கையிட்டு நிற்கிறான். ஆனால் நமக்காகப் பரிந்து பேசுகிறவரான இயேசு, மந்திரும்பி விசுவாசத்தோடு தங்கள் ஆத்துமாக்களைத் தம்மிடம் ஒப்படைத்திருக்கும் அனைவருக்காகவும் பரிந்து பேசுகிறார். கல்வாரியின் பலத்த நியாயங்களைக் கொண்டு அவர் அவர்களுக்காக மன்றாடி அவர்களை குற்றப்படுத்துகிறவனை மேற்கொள்ளுகிறார். அவர் தேவனுடைய நியாயப் பிரமானதிற்கு சிலுவையின் மரண பரியந்தம் பூரணமாய்க் கீழ்படிந்தவராகி வானத்திலும், பூமியிலும் சகல ஆதிகாரத்தையும் பெற்றுக் கொண்டு தம்முடைய பிதா குற்றமுள்ள மனிதன் பேரில் இரங்கி அவனை மன்னிக்கும்படி வேண்டுகிறார். தமது ஜனங்களை குற்றப் படுத்துகிரவனை நோக்கி அவர், “சாத்தானே, கர்த்தர் உன்னை கடிந்துகொள்வாராக. இவர்கள் என் இரத்தத்தினால் கொள்ளப்பட்டவர்கள், அக்கினியிநின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளிகள் ” என்று கூறுகிறார். விசுவாசத்தினால் அவர் மேல் பற்றுதலாய் இருக்கிறவர்களோ, “பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிடமிருந்து நீங்கச் செய்து, உனக்கு சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” என்னும் ஆறுதலான மொழிகளைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள்.LST 129.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents