Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    “வேதத்தையும் சாட்சியாகமத்தையும் கவனித்தல்”

    எகோவாயின் பிரமாணத்தின் உரிமைகளை மனிதர் அவமதிகும்படிச் செய்வதே நீதியின் பகைஞனுடைய சதா முயற்சியாயிருந்திருக்கிறது. ஆனால் கட்டுப்படுத்தும் தமது நித்தியமும் மாற ததுமான பிரமாணத்தின் உரிமைகளை மனிதர் உணரும் பொருட்டு தேவன் தமது தீர்க்கத்தரிசிகளைக் கொண்டு அவர்களை எப்பொழுதும் உணர்த்தப் பிரயாசப்படுகிறார். அவருடைய பூர்வ ஜனங்களைக் குறித்து, “நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பி, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளை இட்டதும், என் ஊழியக்காரரகிய தீர்க்கத்தரிசிகளைக் கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படி யெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் தீர்க்கதரிசிகள் ஞான திருஷ்டிக்காரர் எல்லாரையுங் கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் திடசாட்சியாய் எச்சரித்தார்” என்று எழுதியிருக்கிறது’ 2 ராஜா.17:13LST 111.3

    இந்த நமது காலத்தில் எங்கும் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை கட்டுக்கு அடங்கி நடக்க மனமற்றிருப்பதாய் காணப்படும்போது உவைட் அம்மாள் தேவனுடைய கற்பனைகள் கேட்கும் பரிசுத்தத்தை மனிதரின் மனசாட்சிகளில் உணர்த்தும்படிக்கு தீர்கமாயும் தைரியமாயும் பிரயாசப்பட்டிருக்கிறார். அப்பிரமாணத்தின் அழியாமையும்,நான்காம் பிரமாணமும் உட்பட ஒவ்வொரு பிரமானதிற்கும் கிறிஸ்துவின் பெலத்தைக் கொண்டு கீழ்ப்படிய வேண்டியதின் அத்தியாவசியமும் அவருடைய பகிரங்க வேலையில் அடிக்கடி வற்புறுத்தப்பட்டிருக்கிறது. சுவிசேசத்திற்கும் பிரமாணதிற்குமுள்ள சமபந்ததைக் குறித்து அவர் எழுதி யிருக்கிரதாவது:LST 112.1

    “கிறிஸ்துவின் ஜீவியத்தில் நியாயப்பிரமாணத்தின் சத்தியங்கள் தெளிவாக்கப் பட்டிருக்கின்றன ; தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் இருதயத்தை தொடுகிற போது, கிறிஸ்துவின் வெளிச்சம் மனிதருக்கு சுத்திகரிக்கும் அவருடைய இரத்தத்தின் அவசியத்தையும், நீதிமான்களாக்கும் அவருடைய நீதியையும் வெளிப்படுத்திகிற போது ,நாம் விசுவாசத்தினால் நீதிமான்க ளாக்கப்படும் பொருட்டு நியாயப்பிரமாணமானது இன்னும் நம்மைக் கிறிஸ்துவிடம் கொண்டு வருவதற்கான ஓர் கருவியாயிருக்கிறது .LST 112.2

    “வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேரறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது’ என்று இயேசு சொன்னார். வானங்களில் பிரகாசிக்கிற சூரியனும், நீ வாசம் பண்ணுகிற கெட்டியான பூமியும் அவருடைய பிரமாணம் மாறாமலும் நித்தியமுமாயிருக்கிற தென்பதற்கு தேவனுடைய சாட்சிகளாய்யிருக்கின்றன. அவைகள் ஒழிந்து போனாலும் தேவனுடைய பிரமாணங்கள் நிலைநிற்கும். ‘வேதத்தில் ஓர் எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப் பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்து போவது எளிதாயிருக்கும்.’ இயேசுவை தேவாட்டுக்குட்டியாகக் குறிப்பிட்ட அடையாளங்களின் ஏற்பாடு அவருடைய மரணத்தில் நீக்கப்படவேண்டிய திருந்தது; ஆனால் பத்துக்கற்பனைகளோ தேவ சின்காசனதைப் போல மாறதிருக்கின்றன.”LST 112.3