Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆறாம் அத்தியாயம்—புதிய பூமியைப் பற்றிய ஓர் தரிசனம்

    (கவனிப்பு :- ஸ்ரீ மதி ஹார்மன் அம்மாளுக்கு முதல் தரிசனம் அளிக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின் அந்த அம்மாள் இன்னொரு தடவை ஹெயின்ஸ் அவருடைய வீட்டிற்குப் போயிருந்த சமயத்தில் புதிய பூமியைக் குறித்தும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப் பின் ஆயிரம் வருஷம் முடிவில் பரிசுத்த நகரம் கீழே இறங்கி வருவதைக் குறித்தும் பின் வரும் தரிசனம் அவருக்கு அளிக்கப்பட்டது. வெளி21:2 சகரி 14:4)LST 35.2

    நாங்கள் யாவரும் இயேசுவாகிய எங்கள் தலைவருடன் நகரத்திலிருந்து கீழே பூமியிலுள்ள பெரிதும் மகத்துவமான ஒரு மலையின் மேல் இறங்கினோம்; அது யேசுவைத் தாங்கக் கூடாமல் இரண்டாகப் பிளந்து மகாப் பெரிய சமவெளி ஆயிற்று. பிறகு நாங்கள் பன்னிரண்டு அஸ்திபாரங்கலுள்ளதும் ஒவ்வொரு பக்கத்திற்கும் ம்மொன்று வாசல்களாகப் பன்னிரண்டு வாசல்களுல்லதும், வாசலுக்கோர் தூதனுமுள்ளதுமான அம் மகா நகரத்தை நோக்கிப் பார்த்தோம். “அந்த நகரம், அம் மகா நகரம், அதோ வருகிறது, அதோ தேவனிடத்தினின்று, பரலோகத்தை விட்டு, இறங்கி வருகிறது” என்று நாங்கள் அனைவரும் சத்தமிட்டோம்; அது நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் மேல் வந்தமர்ந்த பிறகு நாங்கள் அந் நகரத்தின் வெளிப்புற மகிமைகளைக் கவனிக்க ஆரம்பித்தோம். அங்கே பார்ப்பதற்கு மிக்க நேர்த்தியான முத்துக்கள் பதிக்கப்பெற்ற நான்கு தூண்களின் மேல் மிகவும் மகிமையான வீடுகள் உண்டாயிருந்ததைக் கண்டேன். அவைகளின் தோற்ற்றம் வெள்ளிமயமாயிருந்தது. இவைகளில் பரிசுத்தவான்கள் குடியிருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பொற்பரண் ஒன்றிருந்தது. பரிசுத்தவான்களில் அநேகர் அவ்வீடுகளுக்குட்போய்ப் பிரகாசமான தங்கள் கிரீடங்களை அப்பரணின் மேல் வைத்துவிட்டு வெளியில் வீடுகளுக்கருகிலுள்ள நிலங்களில் போய் ஏதோ செய்கிறதைக் கண்டேன்; இங்கே நாம் இப்பூமியில் செய்கிறது போற் காணப்படவில்லை; இல்லை, இல்லை. அவர்களுடைய சிரசைச் சுற்றிலும் மகிமையான வெளிச்சம் பிரகாசித்தது; அன்றியும் அவர்கள் ஓயாமல் தேவனைத் துதித்துக் கெம்பீரித்துக் கொண்டிருந்தார்கள்.LST 35.3

    சகல வகையான புஷ்பங்களும் நிறைந்த இன்னொரு நிலத்தைக் கண்டேன்; நான் அவைகளைப் பிடுங்குகையில், “அவைகள் ஒரு போதும் வாடாது” என்று சட்த்தமிட்டேன். பிறகு நான் பார்க்க மிக்க மகிமையாய் வளர்ந்த புல் நிலம் ஒன்றைக் கண்டேன், அது பச்சைப் பசேலென்று இருந்தது மன்றி, அது ராஜாவாகிய இயேசுவை மகிமைப்படுத்தும் பொருட்டு கெம்பீரமாய் அசைவுற்றபோது, வெள்ளி பொன்னைப் பிரதீபிம்பிக்கிரதாயிருக்கிறது. பிறகு நாங்கள் சிங்கம், ஆட்டுக்குட்டி, சிறுத்து, ஓநாய் முதலான சகல மிருகங்களும் நிறைந்து ஏக ஐக்கியமாயிருந்த மற்றோர் ஸ்தலத்தில் பிரவேசித்தோம்; அவைகள் இங்கே இருண்டு அடர்ந்திருக்கும் சோலைகளைப் போலல்ல; அல்ல, அல்ல, வெளிச்சமாயும் எங்கும் மகிமையாயிருந்தது; விருட்சங்களின் கிளைகள் இங்குமங்கும் அசைந்தன, “நாங்கள் வனாந்தரத்தில் பத்திரமாய்த் தங்கி காடுகளில் நித்திரை செய்வோம்” என்று எல்லோரும் சத்தமிட்டோம். நாங்கள் காடுகளின் வழியாய்க் கடந்து சென்றோம், ஏனெனில் நாங்கள் சீயோன் மலைக்குப் போய்க்கொண்டிருந்தோம்.LST 36.1

    நாங்கள் பிரயாணம் போகையில் இன்னொரு கூட்டத்தைச் சந்தித்தோம், அவர்களும் அவ்விடத்தின் மகிமைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வஸ்திரத்தின் ஓரம் சிவப்பாயிருந்தது; அவர்கள் கிரீடங்கள் பளபளப்பாயும் அவர்கள் அங்கிகள் சுத்த வெண்மையாயிருந்தன. நாங்கள் அவர்களை வாழ்த்தின பொது அவர்கள் யாரென்று இயேசுவை நான் வினவினேன். அவர்கள் தமக்காக ரத்த சாட்சியாய் மரித்தவர்கள் என்றார். அவர்களுடன் கணக்கிடமுடியாத சிறுவர் கூட்டமிருந்தது; அவர்க ளுடைய வஸ்திர ஓரம் சிவப்பாயிருந்தது. சீயோன் மலை எங்களுக்கு முன் வெகு சமீபத்திலிருந்து அம்மலையின் மேல் மகிமையான ஒரு ஆலயமும் அதைச் சுற்றி வேறே ஏழு மலைகளுமிருந்தன. அவைகளின் மேல் ரோஜா, லீலிச் செடிகள் உண்டாயிருந்தன. சிறுவர் ஏறிச் செல்லுகிறதையும் அல்லது அவர்களுக்குப் பிரியமானால் தங்கள் சிறு செட்டைகளைப் பிரயோகித்து மலைகளின் உச்சிக்குப் பறந்து சென்று ஒருபோதும் வாடாத அப்புஷ்பங்களைக் கொய்கிறதையும் நான் கண்டேன். ஆலயத்தைச் சுற்றியுள்ள இடத்திற்கு அலங்காரமாக சகல வித விருக்ஷங்களு முண்டாயிருந்தன. புன்னை மரங்களும் பாய்மர தேவதாரு விருக்ஷங்களும், ஒலிவ மரங்களும், மிருது, மாதுளஞ் செடிகளும் காலத்துக் கனிகளால் வளைந்து நின்ற அத்தி மரங்களும் அவ்விடமெங்கும் மகிமைப்படச் செய்தன. நாங்கள் பரிசுத்த ஆலயத்தில் பிரவேசிக்கப் போகும் தருணத்தில், “144000 பேர் மாத்திரம் இவ்விடத்தில் பிரவேசிக்கலாம்” என்று இயேசு தமது இன்பமான சத்தத்தை உயர்த்தினார்; நாங்கள், “அல்லேலுயா” என்றார்ப்பரித்தோம்.LST 36.2

    இவ்வாலயம் முழுவதும், பளிங்குக் கொப்பான தங்கத்தாலானதும் மிக்க மகிமையான முத்துக்கள் பதிக்கப்பெற்றதுமான ஏழு தூண்களின் ஆதாரத்தின் மேல் நின்றது. நான் அங்கு பார்த்த அதிசயமான காரியங்களை விஸ்தரிக்க முடியாது. ஆ, நான் கானான் பாஷையில் பேசக் கூடுமானாலும், அற்ப அளவில் மட்டும் அம்மேலோக மகிமையைச் சொல்லக் கூடும். நான் அங்கே கல் மேசைகளையும், அவைகளின் மேலே 144000 பெருடைய நாமங்களும் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டிருப்பதையும் கண்டேன். ஆலயத்தின் மாகிமையை நாங்கள் பார்த்த பிறகு வெளியே போனோம், இயேசு எங்களை விட்டு விட்டு நகரத்திற்குப் போனார். திரும்பவும் சீக்கிரத்தில், “என் ஜனங்களே வாருங்கள். நீங்கள் பெரிய உபத்திரவத்திலிருந்து வந்தீர்கள், என் சித்தத்தின்படி செய்தீர்கள்; என்னிமித்தம் துன்பப் பட்டீர்கள்; விருந்துண்ண வாருங்கள். நானே என்னை இடை கட்டிக் கொண்டு உங்களுக்குப் பணிவிடை செய்வேன்” என்று சொல்லும் இன்பக் குரலை நாங்கள் கேட்டோம். நாங்கள், “அல்லேலுயா! மகிமை!” என்றார்ப்பரித்துக்கொண்டு நகரத்திற்குள் பிரவேசித்தோம். பின்னையும் நான் சுத்த வெள்ளியினாலான ஓர் மேசையைக் கண்டேன். அது அநேக மெயில் நீளமாயிருந்தாலும் எங்கள் கண் அவ்வளவு தூரத்தையும் எட்டிப் பார்க்கக் கூடியதாயிருந்தது. ஜீவ விருட்சக் கனியையும், மன்னாவையும், வாதுமையையும், அத்தி, மாதுளை, திராக்ஷை முதலான அனேக கனிவர்க்கங்களையும் நான் பார்த்தேன். நான் அக் கணியில் கொண்ஜெம் புசிக்கலாமாவென்று இயேசுவைக் கேட்டேன். அவர், “இப்பொழுதல்ல, இத்தேசத்தின் கனியைப் புசிப்போர் பூமிக்கு ஒருபோதும் திரும்பிப் போகக்கூடாது. ஆனால் உண்மையாயிருந்தால் இன்னும் கொஞ்சக் காலத்திற்குள். ஜீவ விருட்சத்தின் கனியையும் நீ புசிக்கலாம், ஜீவ ஊற்றின் தண்ணீரையும் நீ குடிக்கலாம்” என்றார். பின்னும் அவர் என்னை நோக்கி, “நீ திரும்பவும் பூமிக்குப் பொய் நான் உனக்கு வெளிப்படுத்தினவைகளை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்” என்று சொன்னார். பிறகு ஓர் தூதன் என்னை இவ்வந்தகார உலகத்தில் மெதுவாய்க் கொண்டு வந்து விட்டான்.LST 37.1

    * * * * *