Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பதினாறாம் அத்தியாயம்—நமது விசுவாசத்தின் பரிட்சை

    இப்பரீட்சையின் காலத்தில் நாம் ஒருவரை ஒருவர் தேற்றி தைரியப் படுத்த வேண்டும். முன்னிருந்ததை விட சாத்தானின் சோதனைகள் அதிப்காமாய் இருக்கின்றன. ஏனெனில் அவன் தனக்கு இன்னும் கொஞ்ச காலம் மாத்திரம் உண்டென்றும் சீக்கிரத்தில் ஒவ்வொருவருடைய காரியமும் ஜீவனுகாகிலும் மரணதுக்கம் ஆகிலும் தீர்மானிக்கப் படுமென்றும் காண்கிறான். அதைரியதிற்கு சோதனைகளினாலும் மூழ்கிப் போவதற்கு இப்பொழுது காலம் அல்ல. நமது உபத்திரவங்களை எல்லாம் நாம் சகித்துக் கொண்டே யாகோபின் சர்வ வல்லமை உள்ள தேவனிடத்தில் முழு நம்பிக்கையாய் இருக்க வேண்டும் நமது சோதனைகளை எல்லாம் அவரது கிருபை போதுமானதென்றே கர்த்தர் எனக்கு காண்பித்திருக்கிறார். முன்னை விட அவைகள் அதிகமாய் இருந்தாலும் நாம் தேவன் இடத்தில் முழு நம்பிக்கை இருந்தால் நாம் சகல சோதனைகளையும் மேற்கொண்டு அவரது கிருபையின் மூலமாய் ஜெயம் பெற்று விளங்காலாம்.LST 82.1

    நாம் நமது கஷ்டங்களை மேற்கொண்டு சாத்தானின் சோதனைகளை ஜெயித்தால் அப்போது பொன்னைப் பார்க்கிலும் அதிக விலை ஏற்றப் பெற்றதாயிருக்கிற நமது விசுவாசத்தின் பரீட்சையை நாம் சகிப்போம். பின்னும் அடுத்த சோதனையை சகிப்பதற்கு நாம் அதிக பலமுடயவர்களாயும் தகுந்த ஆய்தம் உள்ளவர்களாயும் இருப்போம். அனால் நாம் இப்பொழுது சாத்தானின் சோதனைகளிலே துக்கப்பட்டு அவைகாலை சகிப்பதற்கு பின் வாங்கினால் நாம் பலவீனமாகி பரிட்சையின் பலனை அடையாமலும் அடுத்த பரீட்சைக்கு தகுந்த ஆயத்தம் இல்லாமலும் இருப்போம். இவ்விதம் நாம் நாளடைவில் அதிக பலவீனமாகி முடிவில் நாம் சாத்தானால் சிறை ஆக்கப்பட்டு போகிறோம்..LST 82.2

    நாம் தேவனுடைய சர்வாயுதத்தைத் தரித்துக் கொண்டு எந்த நிமிஷத்திலும் அந்தகார அதிகாரங்களோடு போர் புரிய ஆயத்தமாயிருக்க வேண்டும். சோதனைகளும் உபத்திரவங்களும் நம் மேல் பிரவாகித்து வரும் போது நாம் தேவன் அண்டை போய் ஜெபத்தில் அவரோடு போராடுவோமாக. அவர் நம்மை வெறுமையாய் அனுப்பி விடாமல் சத்ருவை மேற்கொள்ளவும் அவன் வல்லமையை உடைக்கவும் தக்க கிருபையையும் பலனையும் நமக்கு அருளுவார். ஓ, சகலரும் இக்காரியங்களை அவைகளின் உண்மையான வெளிச்சத்தில் கண்டு இயேசுவின் நல்ல போர்ச் சேவகராக கஷ்டத்தை சகிக்கக் கூடுமானால் நலமாயிருக்கும்!LST 82.3

    தேவனுடைய ஜனங்களை சுத்திகரித்து பரிசுத்தம் ஆக்கும்படி அவர் அவர்களுக்கு ஓர் கசப்பான பாத்திரம் குடிக்கக் கொடுதாரென்று எனக்குக் காண்பிக்கப்பட்டது. அது கசப்பானது. அதை அவர்கள் முறு முறுப்பினாலும் முறை இடுவதினாலும், குறை கூறுவதினாலும், இன்னும் அதிகக் கசப்பாக கூடும். ஆனால் அவர்கள் முதலில் பெற்றது சரியாய் பயன்படாததின் நிமித்தம் அது அவர்களில் செய்ய வேண்டிய வேலையை சரியாய் செய்யும் மட்டும் பின்னொரு பாத்திரமும் அதற்குப் பின் இன்னொன்றும் அதற்குப் பின் இன்னொன்றும்ஆகா பெற்றுக் கொள்ள வேண்டும்.அலல்து அவர்கலத்ஹு இருதயம் அழுக்கையும் அசுதமாயும் இருக்கும். கசப்பான இப்பாத்திரம் பொறுமையினாலும் சகிப்பினாலும் ஜெபத்தினாலும் மதுரமாக படக் கூடுமென்றும் அவ்விதம் பெற்றுக் கொள்வோரின் இருதயங்களில் அது சரியாய் பயன்படும் என்றும் தேவனுக்கு கனமும் மகிமையும் உண்டாகும் என்றும் நான் கண்டேன்.LST 83.1

    தேவனுக்குச் சொந்தமுள்ள உசந்த க்ரிஸ்தவனாயிருப்பது அற்பகாரியம் அல்ல. நிகழ கால சத்தியத்தை கைக்கொள்ளுகிறதாய் சொல்லுகிற சிலருடைய ஜீவியங்கள் அச்சதியதிற்கு இசைவாய் இல்லை. என்று கர்த்தர் எனக்கு காண்பித்திருக்கிறார். அவர்களுடைய பக்தி நிலை வெகு குறைவாய் இருக்கிறது. வேதாகமம் போதிக்கும் பரிசுத்தத்திற்கு அவர்கள் மிகவும் பின்னால் நின்றார்கள். சிலர் வீணானதும் ஆகாததுமான சம்பாஷணையில் ஈடுபடுகிறார்கள். மற்றவர்கள் தற்பெருமைக்கு இடம் கொடுக்கிறார்கள். நம்மை நாமே பிரியப் படுத்தப் பார்க்கிறதும்உலகத்தாரை போல் ஜீவிக்கிறதும் நடக்கிறதும் உலக இன்பங்களை அனுபவிக்கிறதும் உலகத்தாரான கூட்டத்துடன் சேர்ந்து களி கூறுகிறதுமாயிருந்து கொண்டு மகிமையின் க்ரிஸ்துவுடன் அரசாள முடிந்தது.LST 83.2

    நாம் இனிமேல் கிறிஸ்துவுடன் அவருடைய மகிமையில் பங்கடைய வேண்டுமானால் இங்கே கிறிஸ்துவின் பாடுகளுக்கு நாம் பங்காளிகலாயிருக்க வேண்டும். தாழ்ச்சி அடைந்த்ஹிருக்கிற தேவனுடைய அருமையான வேலையை முன்னேற்றம் செய்து அவரைப் பிரியப் படுத்த பார்ப்பதை விட்டு விட்டு நாம் நமத்ஹு சொந்தக் காரியங்களைத் தேடி எவ்விதம் நாம் நம்மை மேன்மை படுத்தலாம் என்று பார்ப்போமாகில் நாம் வேதனையும் நாம் நேசிக்கிரதாகச் சொல்லும் அவருடைய பரிசுத்த வேலையையும் கனவீனப் படுதுகிறவர்களாய் இருப்போம். தேவனுக்காக உழைப்பதற்கு நமக்கு இன்னும் கொஞ்ச காலம் மாத்திரம் உண்டு. சிதறடிக்கப் பட்டும் கிழிக்கப் பட்டும் இருக்கிற இயேசுவின் மந்தையை ரத்சிப்பதர்க்கான தத்தம் செய்வதற்கு ஒன்றையும் பொருட்படுத்த கூடாது. இப்பொழுது பலியினால் தேவனோடு உடன் படிக்கை பண்ணுகிறவர்கள் மேலான பலனை பெற்று சதா காலமாய் புதிய ராஜ்யத்தை அனுபவிக்க சீக்கிரம் பரம வீதியில் சேர்க்கப் படுவார்கள்.LST 83.3

    ஓ நாம் முழுவதும் கர்த்தருக்கென்று ஜீவிப்பதுடன் நாம் யேசுவுடன் இருக்கிறோம் என்றும் சாந்தமும் மன தாழ்மையும் உள்ள அவாருடைய பின்னடியார் என்றும் சீர்பொருந்தின ஜீவியத்தினாலும் பக்தியுள்ள நடத்தையினாலும் காண்பிப்போம் ஆக. பகல காலம் இருக்கும் மட்டும் நாம் வேலை செய்யா வேண்டும். ஏனெனில் உபத்திரவமும் கவலையும் உள்ள அந்தகார இரவு வரும் போது தேவனுக்கென்று வேலை செய்வதற்கு மிகவஊம் பிந்திப் போகஊம். யெஸூ தமது பரிசுத்த ஆலயத்ஹில் இருக்கிறார். அவர் இப்போது நமது பலிகளையும் ஜெபங்களையும் நமது குற்றங்கள், பாவங்கள் அறிக்கைகளையும் ஏற்ற்றுக் கொண்டு அவர் பரஈசுத ஸ்தலத்தை விட்டு வெளியேறும் முன் இச்ஸ்ரவேளின் மீறுதல்கள் எல்லாம் கிருக்கப்படும் பொருட்டு அவர் அவைகளை எல்லாம் மன்னிப்பார். இயேசு பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளிப்படும் போது பரிசுத்தமும் நீதியும் உள்ளவர்கள் இன்னும் பரிசுத்தமும் நீதியும் உள்ளவர்களாகவே இருப்பார்கள். ஏனெனில் அப்போது அவர்களுடைய பாவங்கள எல்லாம் கிறுக்கப் பட்டு ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையினால் முத்திருக்கப் பட்டு இருப்பார்கள். அனால் அநியாயம் செய்கிறவர்கள் இன்னும் அநியாயம் செய்கிறவர்களாயும் அசுத்தமாய் இருக்கிறவர்கள் இன்னும் அசுதமாயுமே இருப்பார்கள்.ஏனெனில் அப்போது பிதாவான்வரின் சிங்கதந்திற்கு முன்பாக அவர்களுடைய பலிகளையும் அறிக்கைகளையும் ஜெபங்களையும் எறேடுப்பதற்கு பரிசுத்த ஸ்தலத்தில் ஆச்சார்யார் ஒறுவரும் இல்லை. ஆகையினால் வரப் போகும் கூபாக்கினை ஆகிய புயலின்னின்று ஆதுமாகளை இரட்சிக்கும் படி செய்ய வேண்டியவைகள் எல்லாம் இயேசு பரலோக தேவாலயத்தில் உள்ள மகா பரிசுத்த ஸ்தலத்தை வீட்டு வெளியேறும் முன் செய்யப்பட வேண்டும்.LST 84.1

    * * * * *

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents