Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஆவிக்குரிய காவற்காரர்

    கிறிஸ்துவின் ஊழியர்கள், தங்கள் பாதுகாப்புக்கு ஒப்புவிக்கப் பட்ட ஜனங்களின் ஆவிக்குரிய காவலாளர் ஆவர். அவர்களுடைய வேலை காவற்காரரின் வேலைக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. பண்டைய காலங்களில் நகரங்களின் மதில்கள் மேல் எப்போதும் காவற்காரர்கள் வைக்கப்பட்டதுண்டு; அங்கே நல்ல வசதியான இடங்களிலிருந்து கவனித்துக் கொள்ளக் கூடிய முக்கிய பாகங்களைக் கவனித்துக் கொண்டு அவர்கள் சத்துருவின் வருகையைக் குறித்து எச்சரிப்புக் கொடுக்கக் கூடும். நகரத்திற்குள்ளிருப்போர் அனைவரின் சேஷமும் அவர்களுடைய உண்மையைப் பொறுத்திருந்தது.இலரும் அவரவர் காவலில் விழித்திருந்தார்கள் என்றும் ஒருவருக்கும் ஒரு தீங்கும் நேரிட்டதில்லை என்றும் நிச்சயப்படுத்திக் கொள்ளும் பொருட்டு குறிப்பிட்ட வேளைகளில் அவர்கள் ஒருவரையொருவர் விளிக்க வேண்டும். சதோஷ சத்தமோ அல்லது எச்சரிப்பின் சத்தமோ, பட்டணத்தைச் சுற்றிலும் எதிரொலி இரையுமட்டும் அது ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் கொடுக்கப்பட்டது.LST 201.2

    ஒவ்வொரு ஊழியனையும் நோக்கி ஆண்டவர் உரைக்கிறதாவது: “மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவல்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு,என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராத படி எச்ச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற் போனால் அந்தத் துன்மார்க்கன் தன அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப் பழியை உன் கையிலே கேட்பேன், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும்... நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.” எசே.33:7-9.LST 201.3

    சபையின் காவல்காரராக, தேவனுடைய இரகசியங்களின் உக்கிரானக்காரராக நியமிக்கப்பட்டிருப்போர் மேல் எவ்வளவு பக்தி விநயமான உத்தரவாதம் பொறுத்திருக்கிறதென்று தீர்க்கதரிசியின் இவ் வார்த்தைகள் கூறுகின்றன. அவர்கள் சத்துருவின் வருகையைக் கண்டு எக்காள சத்தமிடும்படிக்கு சீயோனின் மதில்கள் மேல் காவல்காரர் போல நிற்க வேண்டும். எக் காரணத்தையிட்டாகிலும் அபாயத்தை உணர்ந்தறியக் கூடாதபடி அவர்களுடைய ஆவிக்குரிய உணர்ச்சிகள் கெட்டுப் போய், ஜனங்கள் எச்ச்சரிக்கப்படாமல் நிர்மூலமாகும் பட்சத்தில் நாசமாய்ப் போனவர்களின் இரத்தப் பழியைக் கடவுள் அவர்களுடைய கைகளில் கேட்பார்.LST 202.1

    பாவிகளுக்கு அவர்களுடைய அபாயத்தைக் குறித்து சொல்லவும் அவர்களுக்குச் சுகமான இடம் எது என்று காட்டவும் அவர் சீயோன் மதில்கள் மேல் இருக்கிற காவல்காரர் மூளமைக் கிரியை செய்யவும் பொருட்டு அவர்கள் தேவனோடு நெருங்கி ஜீவிக்கிறதும் அவருடைய ஆவியின் எண்ணங்களை உணர்ந்து கொள்ளுகிறதும் அவர்களுடைய சிலாக்கியமாம். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும்பிரதிஷ்டையின் இரத்தத்தால் முத்திரிக்கப்பட்டவர்களுமாகிய அவர்கள் வரப்போகும் அழிவினின்று மனுஷரையும் ஸ்திரீகளையும் விடுவிக்க வேண்டும். மீறுதலின் நிச்சய முடிவைப் பற்றி அவர்கள் தங்கள் உடன் மனிதரை உண்மையாய் எச்சரிப்பதுந் தவிர சபையின் காரியங்களை உண்மையாய்ப் பாதுகாக்கிறவர்களாயும் இருக்க வேண்டும். எப்பொழுதும் அயர்விலா விழிப்புள்ளவர்களாயிருப்பார்களாக. அவர்களுடைய முழு தத்துவத்தையும் பயன்படக் கேட்கும் தன்மையுள்ளது அவர்களுடைய வேலை. எக்காளத் தொனிகள் போல அவர்கள் தங்கள் சத்தங்களை உயர்த்த வேண்டும்; ஒருபோதும் அவர்கள் உறுதியற்ற, நிச்சயமில்லாத தொனியுடன் சத்தமிடலாகாது. அவர்கள் சம்பளத்திற்காக உழைக்கிறதில்லை, சுவிசேஷத்தைப் பிரசங்கியா விட்டால் தங்களுக்கு ஐயோ என்று அவர்கள் உணருகிறதினிமித்தம் உழைக்கிறார்களே யொழிய மற்றப்படியல்ல.---G.W.14-5.LST 202.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents