Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சிறந்த வஸ்திரம்

    யோசுவாவின் மன்றாட்டு அங்கீகரிக்கப்பட்டதும்,” இவன் மேல இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்து போடுங்கள்” என்னும் கட்டளை கொடுக்கப்படுகிறது; அன்றியும் தூதன் யோசுவாவை நோக்கி,“பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச் செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பேன்” என்றார். “அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின் மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்.” அவன் சொந்த பாவங்களும் அவன் ஜனங்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டன. இஸ்ரவேலர் ” சிறந்த வஸ்திரம் தரிப்பிக்கப்பட்டார்கள். கிறிஸ்துவின் நீதி அவர்களுக்கு அளிக்கப் பட்டது. ஆசாரியர்கள் தரித்திருந்த பாகையைப் போன்ற தோர் பாகை யோசுவாவின் சிரசின் மேல் வைக்கப்படிருந்தது; முந்தி அவன் மீறுதல்கள் செய்திருந்தாலும் இப்பொழுது தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் கர்த்தருக்கு முன்பாக ஊழியஞ் செய்யத் தகுதியுள்ளவனென்று காட்டும்படி “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்னும் எழுத்து அதின்மேல் வரையப் பட்டிருந்தது.LST 127.1

    அவ்விதம் ஆசார்ய ஊளியத்துவத்தின் கனத்தை அவனுக்களித்த பிறகு தூதன், “சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால, நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிரகாரங்களையும் காவல் காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளைஇடுவேன் ” என்று கூறினார். ஆலயத்தின் மேலும் அதின் சகல ஆராதனைகளின் மேலும் அவன் நியாயாதி பதியாக அல்லது தலைவனாக மகிமைப் படுத்தப் படுவான் ; இம்மையிலுங் கூட காவல் தூதர்களுக்குள் அவன் உலாவுவான், கடைசியில் தேவனுடைய சிங்காசனத்தைச் சுற்றி நிற்கும் மகிமையின் கூட்டத்திலும் சேர்ந்திருப்பான்.LST 127.2

    “இப்பொழுதும் பிரதான ஆசார்யனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ கிளை எண்ணப் பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.” இஸ்ரவேலின் நம்பிக்கை இங்கே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. வரப்போகிற இரட்சகரைப் பற்றும விசுவாசத்தின் மூலமாய் யோசுவாவும் அவன் ஜனங்களும் மன்னிபடைந்தது. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசத்தின் மூலமாகவே அவர்களுக்கு திரும்பவும் தேவ தயவு கிடைத்தது. அவருடைய புண்ணியங்களின் பெலத்தால் அவர்கள் அவருடைய வழிகளில் நடந்து அவருடைய நியாயங்களைக் கைக்கொள்வார்களாகில், அவர்கள் அடையாளமாயிருக்கும் புருஷராயிருப்பார்கள்; பூமியின் ஜாதிகள் நடுவே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்குரிய கனம் அவர்களுக்கு உண்டாயிருக்கும். கிறிஸ்து இக்காலத்தில் சபைக்கு நம்பிக்கையா யிருப்பது போலவே அவர்கள் நம்பிக்கையும், அவர்கள் அரணும் அவர்கள் நீதியும் மீட்புமா யிருந்தார்.LST 127.3