Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  பிரதிஷ்டை செய்வதற்கோர் அழைப்பு

  என் சகோதர சகோதரிகளே, ஆத்துமா ஆதாய வேலையில் விசேஷ உயர்ச்சி எடுங்கள். இது மனோ ஆத்மீக சக்திகளுக்கு உயிரையும் பெலத்தயுங் கொடுக்கும். கிறிஸ்துவினின்று வரும் வெளிச்சம் மனதினுள் பிரகாசிக்கும். இரட்சகர் உங்கள் இருதயங்களில் நிலைத்திருப்பார். அவருடைய வெளிச்சத்தில் நீங்கள் வெளிச்சம் காண்பீர்கள்.LST 175.4

  தேவனுடைய வேலைக்காக உங்களை முழுவதுமாகேப் பிரதிஷ்டை செய்யுங்கள். அவர் உங்கள் பெலமாயிருந்து தமது இரக்கமுள்ள நோக்கங்களை நீங்கள் நிறைவேற்றுவதற்கு அவர் உங்கள் வலது பக்கமாயிருந்து உங்களுக்கு ஒத்தாசை புரிவார், உங்களைச் சுற்றிலுமுள்ளவர்களிடம் பொய் வேலை செய்யுங்கள். அவர்களோடு பழகுங்கள். செய்யப்பட வேண்டிய அந்த வேலை பிரசங்கத்தினாலாகாது. நீங்கள் சந்திக்கப் போகிறவர்களின் வாசஸ்தலங்களுக்கு தேவ தூதர்கள் உங்களுடன் வருகிறார்கள். இந்த வேலையை உங்களுக்காக இன்னொருவன் செய்ய முடியாது. இரவலாக அல்லது இனாமாகக் கொடுக்கும் பணத்தினால் அவ்வேளை முடியாது. அது பிரசங்கங்களால் ஆகாது. ஜனங்களைக் கண்டுபேசி அவர்களோடு ஜெபித்து அவர்களுக்காக அனுதாபப் படுவதினால் நீங்கள் அவர்கள் இருதயங்களை வசப்படுத்தலாம். நீங்கள் செய்யக்கூடிய உன்னத மிஷனரி வேலை இதுவே. அதைச் செய்வதற்கு உங்களுக்குத் தீர்க்கமும் ஸ்திரமான விசுவாசமும் சலிப்படையாப் பொறுமையும் ஆத்துமாக்களைப் பற்றிய ஆழ்ந்த அன்பும் அவசியம். ---- 9T 41.LST 175.5

  மற்றவர்களைச் சந்தோஷிப்பிக்கும் வேலையில் தேவதூதர்கள் எப்பொழுதும் ஈடுபட்டு நிற்கிறார்கள். இதுவே அவர்கள் சந்தோஷம். தன்னயமுள்ள இருதயங்கள் இழிவான ஊழியமென்று நினைக்கிறதாகிய ஈனருக்கும் குணத்திலும் அந்தஸ்திலும் சகல விதத்திலும் தங்களை விடத் தாழ்வானவர்களுக்கும் செய்யும் ஊழியமே பரலோகத்திலுள்ள ராஜரீகப் பிரகாரங்களில் இருக்கும் பரிசுத்தமுள்ள, பாவமற்ற தேவதூதர்கள் செய்யும் ஊழியமாய் இருக்கிறது. கிறிஸ்துவின் தற்தியாக அன்பின் ஆவியே பரலோகமெங்கும் நிரம்பியிருக்கிற ஆவியாய் இருக்கிறதுமன்றி அதின் பாக்கியங்களுக்கெல்லாம் சாராம்சமாய் இருக்கிறது. ---- 3 T 381.LST 176.1

  * * * * *

  செய்யப்பட வேண்டிய பெரிய வேலையில் தங்களோடு ஒத்துழைப்பதற்கு பரம தூதர்கள் சபையின் அங்கங்களாகிய மானிட தூதாட்களுக்காக நெடுங்காலம் காத்திருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். நிலம் வெகு விசாலமாயும் நோக்கம் வெகு விஸ்தீரணமாயும் இருக்கிறபடியால் பரிசுத்தமாக்கப்பட்ட ஒவ்வொரு இருதயமும் தெய்வீக வல்லமையின் ஓர் கருவியாக ஊழியத்திற்குள் நுழைக்கப்படும். ----- 9 T 46-7.LST 176.2

  சுத்தமான கைகளும் மாசில்லாத இருதயங்களும் நமக்கிருக்க வேண்டுமானால், நாம் செய்யக் கூடியதைப் பற்றி அதிக விசுவாசமும் இருக்க வேண்டும். நீ செய்கிற வேலை உன் சொந்த வேலையல்ல; நீ தேவனுடைய வேலையைச் செய்கிறாய். ---- 7 T 212.LST 176.3

  * * * * *

  அக்கிரமம் மிகுதியாகிற காலமாகிய இக் காலத்தில், தங்களுடைய இருதயங்களில் தேவ அன்பை உடையவர்களாய் இருக்கிறவர் களை ஜீவனுக்கெல்லாம் ஊற்றானவரிடம் இருந்து வருகிற ஓர் புதிய ஜீவன் ஆட்கொள்ள வேண்டும்; அவர்கள் புறப்பட்டு, சிலுவையில் அறையுண்டு உயிர்த்தெழுந்த இரட்சகரைப் பற்றிய செய்தியை வல்லமையுடன் கோரி அறிவிக்க வேண்டும். ஆத்துமாக்களை இரட்சிக்கும்படி அவர்கள் ஊக்கமான, சலிப்புறா முயற்சி எடுக்க வேண்டும். அவர்களுடைய முன் மாதிரியினால் அவர்களைச் சுற்றுமுள்ளவர்கள் உத்தம ஜீவியம் செய்யத் தக்கதாயிருக்க வேண்டும். கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக அவர்கள் எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணவேண்டும். ---- 9 T 44.LST 176.4

  * * * * *

  மூன்றாவது தூதனுடைய தூது பலத்த சத்தமாய்ப் பிரவகித்து முழங்கும்போது பெரிய வல்லமையும் மகிமையும் அதற்குண்டாகும். தேவனுடைய ஜனங்களின் முகங்கள் பரம வெளிச்சம் பெற்றுப் பிரகாசிக்கும். ----- 7 T 17.LST 177.1

  * * * * *