Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நான்காம் பிரிவு—கிறிஸ்தவ கல்வி

    மெய்யான கல்வியின் நோக்கம்

    மனுஷனைச் சிருஷ்டித்த தேவ நோக்கம் நிறைவேறத்தக்கதாக அவனை உண்டாக்கினவரின் சாயலை அவனில் புதுப்பிகிறதும், அவன் சிருஷ்டிக்கப்பட்ட போதிருந்த பூரண நிலைமைக்கு அவனைக் கொண்டுவருகிறதும், சாரீரத்தயும், மனத்தையும், ஆத்துமத்தையும் விருத்தி பண்ணுகிறதுமாய் இதுவே மீட்பின் கிரியையாயிருக்க வேண்டியது. ஜீவியத்தின் பெரிய நோக்கமாகிய கல்வியின் நோக்கம் இதுவே.LST 159.1

    தேவனே சகல மேய்யறிவிற்கும் ஊற்றாய் இருக்கிறபடியினால் நாம் பார்த்திருக்கிறபடி அவர் தம்மைப் பற்றி வெளிப்படுத்தியிருக்கும் காரியங்களுக்கு நேராய் நமது மனதைத் திருப்புவதே கல்வியின் பிரதம நோக்கமாயிருந்தது.LST 159.2

    பரிசுத்த வேத வாக்கியங்கள் சத்தியத்தின் பூரண நூலயிருக்கிற படியினால் கல்வியில் அவைகளுக்கு மிக்க உன்னதமான இடம் கொடுக்கப்பட வேண்டும். கல்வி என்னும் பெயருக்குப் பொருந்தத் தக்க ஓர் கல்வியை அடைய வேண்டுமானால் சிருஷ்டிகராகிய தேவனையும் மீட்பராகிய கிறிஸ்துவையும் பற்றிய அறிவை பரிசுத்த வசனத்தில் வெளிப்படுத்தப் பட்டிருக்கிற படியே அறிந்துகொள்ள வேண்டும்.LST 159.3

    மனுஷர் சொல்லியிருக்கிற அல்லது எழுதியிருக்கிறவைகளை மாத்திரம் படித்தறிவதை விட, சத்தியத்தின் ஊற்றுகளுக்கு, ஆராய்ச்சிக்கென்று இயற்கையிலும் வெளிப்படுத்தலிலும் திறக்கப்பட்டிருக்கிற விஸ்தாரமான இடங்களுக்கு மாணவர்கள் திரும்பட்டும். கடமையையும் நித்திய தீர்ப்பையும் பற்றிய பிரியா சத்தியங்களை அவர்கள் சிந்தனை செய்யட்டும்; அப்பொழுது அவர்கள் மனம் விசாலமாகிப் பெலப்படும்.LST 159.4

    அப்படிப்பட்ட ஓர் கல்வி மனோபயிற்சியை விட அதிகம் செய்கிறது; அது தேக பயிற்சியை விட திகம் செய்கிறது. அது குணத்தைப் பலப்படுத்துகிறபடியினால் சத்தியமும் நேர்மையும் சுய விருப்பத்திற்கோ அல்லது உலக ஆசைக்கோ தியாகம் செய்யப்படுகிரதில்லை. அது தீமைக்கு விரோதமாக மனதை ஸ்திரப்படுத்துகிறது. பிரதானமான ஏதோ ஓர் ஆசை அழிவுண்டாக்கும் ஓர் வல்லமையாகிறதற்குப் பதிலாக ஒவ்வொரு நோக்கமும் விருப்பமும் நீதியின் பெரிய சத்தியங்களுக் கிசைவாய்க் கொண்டு வரப்படுகின்றன. அவருடைய குணத்தின் பூரணத்தை தியானிக்கத் தியானிக்க மனம் புதுப்பிக்கப்பட்டு, ஆத்துமா தேவசாயலில் திரும்பவும் சிருஷ்டிக்கப்படுகிறது. தேவன் தமது பிள்ளைகளை அடையவேண்டு மென்று கருதியிருக்கும் நோக்கம் எந்த உன்னதமான மானிட நோக்கத்திற்கும் எட்டாதது. தேவ பக்தி அதாவது தேவனைப் போலிருப்பது தான் அடையவேண்டிய அந்த இலக்கு. --- Ed. 15---8.LST 159.5