Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆறாம் பிரிவு—தேவனுடைய வரங்களின் உக்கிராணக்காரர்

    ஆரோக்கிய வரம்

    ஜீவன் தேவனுடைய ஓர் வரம். நமது சரீரங்களைத் தேவனுடைய ஊழியத்தில் உபயோகப்படுத்தவே தேவன் அவைகளை நமக்குத் தந்திருக்கிறார்; ஆகவே நாம் அவைகளைப் பாதுகாக்கவும் நன்கு மதிக்கவும் அவர் விரும்புகிறார். நாம் சரீர சக்திகளை மாத்திரமல்ல, மனோ சக்திகளையும் உடையவர்களாய் இருக்கின்றோம். நமது ஆசைகள் விருப்பங்களுக்கு இருப்பிடம் சரீரமாய் இருக்கிறபடியினால் இதைக் கெடுத்துப் போடத்தக்க ஒன்றையும் நாம் செய்யக் கூடாது. நாம் நமது தாலந்துகளை உத்தம உபயோகம் செய்யும் பொருட்டு, கூடுமான வரையில் நமது சரீரங்களை நல்ல சுகமான நிலைமையிலும் சிறந்த பக்திக்குரிய போங்குகளிலும் வைத்துக் கொள்ள வேண்டும். (1 கோரி. 6:13 வாசிக்க.)LST 178.1

    சரீரத்தைத் தகாத விதமாய்ப் பிரயோகிப்பதினால் தேவன் தமது ஊழியத்தில் உபயோகப் பட வேண்டுமென்று யோசிக்கிற அளவு குறைந்து போகிறது. கேட்ட பழக்கங்கள் உண்டாக நாம் இடங் கொடுக்கிறதினாலும், இரவில் வெகு நேரம் விழித்திருக்கிறதினாலும், சுகம் கெடத் தக்கதாக நமது ஆசையைத் திருப்தி செய்து கொள்ளுகிறதினாலும் நாம் பலட்சியப் படுவதற்கான அஸ்திபாரம் போடுகிறோம். தேகப் பிரயாசத்தை அசட்டை செய்கிறதினாலும், மனதையோ அல்லது சரீரத்தையோ அதிக வேலை கொள்வதினாலும் நாம் நமது சரீர பலம் குன்றிப் போகச் செய்கிறோம். இயற்கைப் பிரமாணங்களைக் கவனியாது இவ்விதம் தங்கள் உயிரைக் குறைக்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக கொள்ளையாடும் குற்றவாளிகள் ஆகிறார்கள். தேவனுக்குத் தகுந்த பணிவிடை செய்வதற்கு உபயோகப் பட வேண்டிய சரீரத்தையோ, மனதையோ அல்லது பெலத்தயோ நாம் அசட்டை செய்வதற்கு அல்லது தகாத விதம் உபயோகிக்க நமக்கு நியாயமில்லை. ---- C. H. 41.LST 178.2