Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First
  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents

  கல்வியைப் பற்றிய யதார்த்தமான மதிப்பு

  மெய்க் கல்வி சாஸ்திர அறிவு அல்லது கலைஞானத் தேர்ச்சி இவைகளை அலட்சியம் செய்கிறதில்லை. அறிவுக்கு மேலாக வல்லமையையும், வல்லமைக்கு மேலாக தயையையும், மனோவிருத்திக்கு மேலாக குணத்தையும் அது மதிக்கிறது. உலகத்தில் சிறந்த குணசீலர்கள் அவசியப்படுவது போன்று சிறந்த அறிவாளிகள் அவ்வளவு அவசியப் படுகிறதில்லை. எவர்களுடைய திறமைகள் உறுதியான தத்துவத்தால் அடக்கியாளப் பட்டிருக்கின்றதோ அவர்களே அதற்குத் தேவை.LST 160.1

  “ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி”. “ஞானிகளின் நாவு அறிவை உபயோகப் படுத்தும்”. மெய்யான கல்வி இந்த ஞானத்தைக் கொடுக்கிறது. ஒன்றை மாத்திரமல்ல, நமது சகல தத்துவங்களையும் நாம் பெற்றுள்ள சகலவற்றையும் உத்தம உபயோகம் செய்யும்படி அது போதிக்கிறது. இவ்விதம் நாம் நமக்கும், தேவனுக்கும் செய்யவேண்டிய முழுக்கடமையும் அதில் அடங்கியிருக்கிறது.LST 160.2

  மானிடருக்கு ஒப்புவிக்கப் பட்ட வேலைகளில் குணக் கட்டுமான வேலையே மிகவும் முக்கியமானது; முன்னை விட நாம் அதிகக் கருத்தை ஆராய வேண்டியாது இப்பொழுது அவ்வளவு முக்கியம். முன்னுள்ள எந்த சந்ததியும் ஒருபோதும் இவ்வளவு விசேஷமான விஷயங்களில் ஈடுபடும்படி அழைக்கப்படவில்லை; இக்காலத்தில் வாலிப புருஷரும் வாலிப ஸ்திரீகளும் எதிர்க்கப்படுவது போல் முன் ஒருபோதும் அவர்கள் இவ்வளவு பெரிய ஆபத்துக்களால் எதிர்க்கப் படவில்லை.LST 160.3

  இப்படிப்பட்ட ஓர் காலத்தில், கொடுக்கப்படும் கல்வியின் போங்கன்ன? என்ன நோக்கத்திற்காக அடிக்கடி வேண்டுகோட்கள் செய்யப்படுகின்றன? சுய நாட்டத்திற்காகத் தானே. கொடுக்கப்படுகிற அதிகமான கல்வி அதின் பெயருக்கு மாறுபாடாயிருக்கிறது. மெய்க் கல்வி தன்னய ஆசை, அதிகாரப் பிரியம் மானிட உரிமைகளும் தேவைகளும் அவமதிக்கப் படுதல் ஆகிய நமதுலக சாபங்களை யெல்லாம் எதிர்த்துக் கிரியை செய்கிறது, ஜீவியத்தைப் பற்றிய தேவ ஒழுங்குகளில் மானிடர் ஒவ்வொருவருக்கும் ஓர் இடமுண்டு. கூடுமான மட்டும் ஒவ்வொருவரும் தங்கள் தாலந்துகளை விர்த்திசெய்ய வேண்டும்; கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகள் சொற்பமாயிருந்தாலும் சரி, அல்லது மிகுதியாயிருந்தாலும் சரி, இதை உத்தம உபயோகம் செய்வதினால் ஒருவனுக்கு மகிமையுண்டாகும். தேவ ஒழுங்கில் சுய நாட்டமுள்ள போட்டிக்கு யாதொரு இடமும் கிடையாது. தங்களைக் கொண்டே தங்ககளை அளந்து பார்க்கிறவர்களும் தங்களுக்குள்ளே தங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறவர்களும் ஞானவான்களால் நாம் எதைச் செய்தாலும் “தேவன் தந்தருளும் பெலத்தின்படி” செய்ய வேண்டும். “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக் கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச்” செய்யவேண்டும். இவ்வழிகளைக் கையாடுவதில் புரியும் தொண்டும், அடையும் கல்வியும் அருமையானது. --- Ed. 225-6.LST 160.4

  தேவ கிருபையின் கிரியையற்ற கல்வியினால் உண்மையில் ஒரு பிரயோஜனமும் கிடையாது; மாணவன் பெருமை கொண்டு டம்பாச்சரியமும் மூடபக்தியும் உள்ளவனாகின்றான். ஆனால் பெரிய போதகரின் மகத்தான புனித வல்லமையின் கீழ் பெறுகிற கல்வியோ சன்மார்க்க பெறுமதியாகிய திராசில் மனுஷன் தேவனோடு மேனமைப்படுத்துகிறது. பெருமையும், ஆசை இச்சைகளையும் அடக்குவதற்கும் சகல விஷயத்திலும் தேவனைச் சார்ந்திருந்து அவருக்கு முன்பாக மனத் தாழ்மையோடு நடக்கவும் அது அவனுக்கு உதவி செய்யும் ---- T 32.LST 161.1

  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents