Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    எட்டாம் பிரிவு—சுவிசேஷ ஊழியர்களுக்கு ஆலோசனை

    வெளித்தோற்றம்

    நாம் இப்பூவுலக சரித்திரத்தின் முடிவைக் கிட்டி வருகிறோம். இப்பாவ உலகிற்கு கடைசி எச்சரிப்பின் தூதைக் கொடுக்கும் முடிவான வேலையாகிய ஓர் பெறும் வேலை நம் முன் இருக்கிறது, கலப்பை பிடித்து உழுவதிளிருந்தும், திராட்சத் தோட்டத்திலிருந்தும், மற்றும் பல தொழில்களிலிருந்தும் மனுஷர்கள் எடுக்கப்பட்டு இத் தூதை உலகத்திற்கு கொடுக்கும்படி கர்த்தரால் அனுப்பப்பட்டலாகும்.LST 199.1

    உலகம் பொருத்து விட்டுவிட்டது. நாம் அப் படத்தைப் பார்க்கும் போது அது நமக்கு அதைரியத்தை உண்டாக்குகிறதாய்க் காணப்படுகிறது. ஆனால் நமக்கு அதைரியத்தை உண்டாக்குகிற அதே மனுஷரையும் ஸ்திரீகளையும் கிறிஸ்து நம்பிக்கையுள்ள நிச்சயத்துடன் வாழ்த்துகிறார். அவருடைய திராட்சத் தோட்டத்தில் ஓர் இடத்தைப் பெற்றுக் கொள்ளத் தக்கதான இலட்சணங்களை அவர் அவர்களில் காண்கிறார்.LST 199.2

    கனியற்று, வேலை செய்யப்படாமல் கிடைக்கும் பல நிலங்களுக்கு புதிய வேலையாட்கள் போக வேண்டும். உலகத்தைப் பார்க்கிற இரட்சகரின் அருள் பார்வையின் பிரகாசமானது அநேக ஊழியர்களில் நம்பிக்கையை உண்டாக்கும்; அவர்கள் மனத்தாழ்மையுடன் ஆரம்பித்து, வேலையில் தங்கள் மனதைச் செலுத்துவார்களாகில் அவர்களே அவ் வயமத்திற்கும் இடத்திற்கும் பொருந்திய மனிதராய்க் காணப்படுவார்கள். உலகத்திலுள்ள சகல நிர்பந்தங்களையும் சஞ்சலங்களையும் கிறிஸ்து காண்கிறவராயிருக்கிறார்; அக் காட்சியானது அறிய திறமைகள் வாய்ந்த நமது ஊழியர்களில் சிலரை அதைரியப்படுத்திச் சோர்வடையச் செய்கிறபடியினால் அவர்களும் முதலாவது ஏணிப்பழுவண்டைக்கு மனுழரையும் ஸ்திரீகளையும் நடத்துகிற வேலையை ஆரம்பிப்பதெவ்விதமென அறியாதிருக்கிறார்கள். அவர்களுடைய திட்டவட்டமான வழிகள் ஏப்பை சப்பைகளாகின்றன. அவர்கள் அடியிலுள்ள ஏணிப் பழுக்களுக்கு மேல் உயர நின்று கொண்டு, “நாங்கள் இருக்கிற இடத்திற்கு ஏறி வாருங்கள்” என்கிறார்கள். ஆனால் அப் பேதை ஆத்துமாக்களோ எங்கே தங்கள் பாதங்களை வைக்கிறதெனத் தெரியாதிருக்கின்றனர்.LST 199.3

    ஏழை என்னும் பதத்தின் உள்ளான கருத்துப்படி ஏழையாயிருக்கிறவர்களைக் கண்டு கிறிஸ்துவின் உள்ளம் களிப்படைகிறது; உபயோகப்படாமல் சாந்தமாயிருக்கிறவர்களைக் கண்டு களிப்படைகிறது. அநேகர் தொடங்குவதற்குத் திறமையற்று நீதியின் மே லுள்ள பசிதாகம் தீர்க்கப்படாதிருப்பத்தைக் கண்டு அவர் உள்ளம் களிப்படைகிறது. அனேக ஊழியர்களை அதைரியப்படுத்தத் தக்கதான காரியங்களின் அதே நிலைமையையே கிறிஸ்து ஒரு விதம் நலமென்று காண்கிறார். பூமியின் கரடுமுரடான இடங்களிலிருக்கும் ஏழைகளுக்கும் வறுமைப்பட்டவர்களுக்கும் செய்ய வேண்டிய வேலையின் பாரத்தை அவர் அப்படிப்பட்ட பாமர ஜனங்களுக்காகப் பரிதபிக்கக் கூடிய இதயங்களுடைய மனுஷருக்கும் ஸ்திரீகளுக்கும் நல்கி நமது தப்பிதமான பக்தியை சீற்படுத்துகிறார்.LST 199.4

    என் சகோதர சகோதரிகளே, நீங்கள் உங்கள் ஊழியத்தில் ஜனங்களண்டை நெருங்கி வாருங்கள். தாழ்வுற்றோரை உயர்த்துங்கள். ஆபத்துகளை மறைவான ஆசீர்வாதங்களாகவும் நிர்ப்பந்தங்களை இரக்கங்களாகவும் பாவியுங்கள். திகைப்பில் நம்பிக்கை உண்டாகத் தக்க விதம் கிரியை செய்யுங்கள்.LST 200.1

    சாமானிய ஜனங்கள் ஊழியர்களாக வர வேண்டும். மானிட வர்க்கத்தின் துக்கங்களில் இரட்சகர் பங்கு பெற்ற வண்ணம் அவர்கள் தங்கள் உடன் மனுஷரின் துக்கங்களில் பங்கு பெறும் போது அவர்களோடு கிரியை செய்கிற அவரை விசுவாசத்தால் அவர்கள் காண்பார்கள்.LST 200.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents