Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவன் பக்கம் சித்தம் வைத்தல்

    நீயே உன் சித்தத்தை இயேசு கிறிஸ்துவின் சித்தத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியதாயிருக்கிறது; நீ இப்படிச் செய்யும்போது, தேவன் உடனே ஆட்கொண்டு, தம்முடைய தயவுள்ள சித்தத்தின் படி விருப்பத்தையும் செய்கையையும் உன்னில் உண்டாக்குவார். அப்போது உன் முழு சுபாவமும் கிறிஸ்துவினுடைய ஆவியின் ஆளுகைக்குக் கொண்டுவரப்படும்; உன் எண்ணங்களுங்கூட அவருக்குட்பட்டிருக்கும். நீ விரும்புமாறு உன் விருப்பங்களையும் உன் எண்ணங்களையும் நீ அடக்கமுடியாது, ஆனால் நீ உன் சித்தத்தை அடக்கி உன் ஜீவியத்தை முழுவதுமாய் மாற்றக்கூடும்.LST 133.2

    நீ உன் சித்தத்தை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்பதினால் உன் ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருந்து அது சகல அதிகாரங்களுக்கும் வல்லமைகளுக்கும் மேற்பட்டிருக்கும் அதிகாரத்தோடு உடன் பட்டிருக்கும். உன்னைத் தமது பலத்தோடு உறுதியாய்ப் பிடித்துக்கொள்ளகூடிய தேவ பலம் உனக்குக் கிடைக்கும்; அத்துடன் உயிருள்ள விசுவாச வெளிச்சமாகிய ஓர் புதிய வெளிச்சமும் நீ பெறக்கூடும். ஆனால் உன் சித்தம் உன் கூட்டாளிகளின் சித்தத்திற் கிசைந்திராமல் தேவனுடைய சித்தத்திற் கிசைந்திருக்க வேண்டும்; ஏனெனில் உன் கூட்டாளிகளின் மூலமாய்ச் சாத்தான் உன்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தி அழிக்கும்படி எப்பொழுதும் கிரியை செய்கிறவனாயிருக்கிறான்.LST 133.3

    விசுவாசத்தை குறித்து பேசு, பாதை விலகாது தேவன் பக்கமாய்ப் போ. சத்துருவின் பக்கம் உன் காலை வைக்காதே, கர்த்தர் உன் சகாயராயிருப்பார். உனக்கென்று நீ செய்யக்கூடாததை அவர் உனக்குச் செய்வார். அதின் பயனாய் நீ “லீபனோனின் கேதுரு” வைப் போலிருப்பாய். உன் ஜீவியம் மகிமையாயும் உன் கிரியைகள் தேவனுக்குள்ளாகவும் இருக்கும். உன்னைத் தேவனுடைய கரங்களில் துலக்கமான கருவியாக்கக் கூடிய வல்லமையும் ஊக்கமும் தாழ்மையும் உன்னில் உண்டாயிருக்கும்.LST 134.1

    நீ உன் மன வாஞ்சையைத் திருப்தி செய்ய மறுக்காமலும் தேவனுக்குக் கீழ்ப்படியும்படித் தீர்மானிக்காமலும் இருந்துகொண்டு கிறிஸ்துவைப் பின் பற்றுகிறேன் என்பதில் யாதொரு பிரயோஜனமுமில்லை. நீ தேவனுடைய சித்தத்தின்படி செய்வதினால் மாத்திரம் அவருக்குப் பிள்ளை ஆகலாமே ஒழிய உன் எண்ணங்கள், உணச்ர்சிகளினால் அவருக்குப் பிள்ளையாக முடியாது, உன் சித்தம் தேவ சித்தமாகும் பட்சத்தில், பிரயோஜன முள்ள ஜீவியமொன்று உனக்கு முன்னிருக்கிறது. அப்போது நீ தேவன் உனக்குத் தந்த புருஷத்துவத்தில் நற்கிரியைகளுக்கோர் முன் மாதிரியாயிருப்பாய்.LST 134.2