காவல் காத்து நிற்பது
எனக்குக் காண்பிக்கப்பட்ட காட்சி இது தான். ஆனால் சபையானது காணப்படுகிறதும் காணப்படாததுமான சத்துருக்களோடு போர் புரியவேண்டும். சாத்தானுடைய தூதர்கள் மானிட வடிவமாய்ப் போர்களத்திலிருக்கிறார்கள். மனிதர், சேனைகளின் கர்த்தருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு செய்திருக்கிறார்கள்.இக்கட்டுப்பாடுகள் கிறிஸ்து கிருபாசனத்திற்கு முன்பாக நின்று பரிந்து பேசும் தமது இடத்தை விட்டு நீதி சரிக்கட்டு தலென்னும் வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுமட்டும் நடைபெறும். சாத்தானுடைய காரியஸ்தர்கள் ஒவ்வொரு நகரத்திலும் தேவனுடைய நியாயப்பிராமாணத்திற்கு விரோதமான கட்சிகளை ஸ்தாபிப்பதில் அலுவலாய் யிருக்கிறார்கள். இக்கட்சிகளுடன் பேர்க் கிறிஸ்தவர்களும் பகிரங்கமான அவிசுவாசிகளும் கூடிக்கொள்கிறார்கள். தேவனுடைய ஜனங்கள் பெலவீனராயிருப்பதற்கு இது காலமல்ல. நாம் ஒரு நிமிசமாகிலும் காவல் காத்து நிற்பதில் அஜாக்கிரதையா யிருக்கி முடியாது.LST 103.1
“கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறநியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்ததோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டமுண்டு. ஆகையால் தீங்கு நாளிலேஅவைகளை நீங்கள் எதிர்க்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்ககத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதி என்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை யெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிக்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும், தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.” எபே. 6: 10-17.LST 103.2
“மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புகொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களும்மா யிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.” பிலி.1: 9-11.LST 103.3
“நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருந்து எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் இரட்சிக்கப் படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. ஏனனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகத் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது” பிலி. 1: 27-29.LST 104.1